'அந்த' படங்களே தோத்துரும்! பைக்கை லாட்ஜ் ஆக மாற்றிய இளம் ஜோடி! சின்ன பசங்க முன்னாடி இந்த வீடியோவை பாக்காதீங்க!
இந்திய மக்கள் மத்தியில் சமீப காலமாக மோசமான பழக்கம் ஒன்று வேகமாக பரவி வருகிறது. சாலையில் பைக்கில் பயணம் செய்து கொண்டிருக்கும்போதே, கட்டியணைத்து கொண்டும், முத்தமிட்டு கொண்டும் ரொமான்ஸ் செய்வதுதான் அது. கடந்த சில மாதங்களில் மட்டும், நாடு முழுக்க பல்வேறு இடங்களில் இத்தகைய சம்பவங்கள் நிறைய நிகழ்ந்துள்ளன.
இந்த வரிசையில் உத்தர பிரதேச மாநிலத்தில் (Uttar Pradesh) தற்போது ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த சம்பவத்தின் வைரல் வீடியோ (Viral Video) சமூக வலை தளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது. இந்த வீடியோவில், ஒரு ஆணும், பெண்ணும் பைக்கில் ஜோடியாக பயணம் செய்வதை நம்மால் பார்க்க முடிகிறது.

ஆனால் அவர்கள் வழக்கமான பாணியில் பயணம் செய்யவில்லை. முற்றிலும் வழக்கத்திற்கு மாறான முறையில் பயணம் செய்துள்ளனர். அந்த ஆண் பைக்கை ஓட்டி கொண்டிருக்க, பெண் பெட்ரோல் டேங்க்கின் மீது அமர்ந்தபடி, அந்த ஆணை கட்டியணைத்துள்ளார். வாகன போக்குவரத்து அதிகம் இருந்த பரபரப்பான நெடுஞ்சாலையில் இந்த ஆபத்தான காரியத்தில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
அவர்கள் பயணம் செய்தது ஹீரோ ஸ்பிளெண்டர் (Hero Splendor) பைக் ஆகும். உத்தர பிரதேச மாநிலம் ஹப்பூர் (Hapur) பகுதியில் இந்த விபரீத சம்பவம் அரங்கேறியுள்ளது. அந்த வழியாக மற்றொரு வாகனத்தில் வந்தவர்கள் இந்த சம்பவத்தை வீடியோவாக பதிவு செய்துள்ளனர். சமூக வலை தளங்களில் தற்போது அந்த வீடியோ வைரல் ஆகி கொண்டுள்ளது.
இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பலரும், ஆபத்தான காரியத்தில் ஈடுபட்ட ஜோடி மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். இதன் பேரில் காவல் துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளனர். பொது இடத்தில் அநாகரீகமாகவும், ஆபத்தான முறையிலும் நடந்து கொண்ட அந்த ஜோடிக்கு 8 ஆயிரம் ரூபாய் அபராதம் (Fine) விதிக்கப்பட்டுள்ளது.
போதாக்குறைக்கு இந்த ஜோடி ஹெல்மெட்டும் (Helmet) அணியவில்லை. அவர்களின் கையில் ஹெல்மெட் இருப்பதை பார்க்க முடிகிறது. ஆனால் அதை அணியாமல் பயணம் செய்துள்ளனர். இது போன்ற பயணங்கள் அவர்களுக்கு மட்டுமின்றி, சாலையில் அவர்களுடன் பயணிக்கும் மற்றவர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தலாம் என்பதை அவர்கள் உணரவில்லை.
விளம்பரத்திற்காக இந்த சம்பவம் நிகழ்த்தப்பட்டிருக்கலாம் என நாங்கள் கருதுகிறோம். ஏனெனில் பைக்கில் ரொமான்ஸ் செய்து கொண்டே பயணம் செய்வது தற்போது ஒரு டிரெண்ட்-ஆகவே மாறி விட்டது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு டெல்லியிலும் (Delhi) இதேபோன்ற சம்பவத்தில் இளம் ஜோடி ஒன்று ஈடுபட்டது. அவர்களுக்கு 11 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: நடக்கும் சம்பவங்களை எல்லாம் வைத்து பார்க்கையில், இவை இயல்பாக நடப்பது போல தெரியவில்லை. சமூக வலை தளங்களில் பிரபலமாக வேண்டும் என்பதற்காக வேண்டுமென்றே இளம் ஜோடிகள், இந்த ஆபத்தான காரியத்தில் ஈடுபடுவது போல் தெரிகிறது. இது சாலை விபத்துக்களுக்கு (Road Accidents) வழிவகுக்கலாம் என்பதை சம்பந்தப்பட்டவர்கள் உணர வேண்டும்.
ஆனால் அவரவராக பார்த்து திருந்தாவிட்டால், இந்த சம்பவங்களை எல்லாம் தடுக்க முடியாது. எனவே அதிகாரிகள் இன்னும் மிக கடுமையான அபராதங்களை விதிக்க முன் வர வேண்டும். இல்லாவிட்டால் இது போன்ற ஆபத்தான சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று கொண்டேதான் இருக்கும் என நாங்கள் கருதுகிறோம்.


Click it and Unblock the Notifications








