இணையத்தில் லைக்குகளை பெற இப்படியா!! காதல் ஜோடியின் பயமுறுத்தும் பைக் ஸ்டண்ட் - இறுதியில் போலீசார் செய்தது...

கார்களில் பயணிப்பவர்களை காட்டிலும் மோட்டார்சைக்கிள்களில் பயணிப்பவர்களுக்கு எப்போதுமே பாதுகாப்பு சற்று குறைவு தான் என கூறுவர். இதனாலேயே மோட்டார்சைக்கிளில் பயணம் செய்பவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிந்திருக்க வேண்டும் என்ற சட்டம் உள்ளது. அதுமட்டுமில்லாமல் பைக்குகளில் டாப் ஸ்பீட் ஆனது குறைவாகவே நிர்ணயிக்க படுகிறது.

ஆனால் அதேநேரம் அத்தகைய அபாயத்தை உணரமால் மோட்டார்சைக்கிள்களை ஓட்டுபவர்களும் இருக்க தான் செய்கின்றனர். அவ்வாறான வாகன ஓட்டிகளுள் ஒருவரை பற்றி தான் இந்த செய்தியில் பார்க்கவுள்ளோம். வாகன ஓட்டி மட்டுமின்றி இந்த சம்பவத்தில் அவருடன் பயணித்த பயணியும் நடைபெற்றுள்ள தவறுக்கு காரணமாக உள்ளார். இளம் ஜோடி ஒன்று ஆந்திரா மாநிலம், விசாகப்பட்டினத்தில் பொது சாலையில் பைக்கில் ஆபத்தான முறையில் பயணம் செய்து உள்ளது.

காதல் ஜோடியின் பயமுறுத்தும் பைக் ஸ்டண்ட் - வைரல் வீடியோ!!

இளைஞர் பஜாஜ் பல்சர் பைக்கை ரைடு செய்ய, பைக்கில் பின்னால் அமர்த்திருக்க வேண்டிய அவரது பெண் தோழி ரைடருக்கு முன்னால் அமர்ந்து பயணம் செய்துள்ளார். பைக்கில் இருந்து கீழே விழாமல் இருக்க, அந்த பெண் அவரது ஆண் நண்பரின் உடலை இறுக்கமாக கட்டிப்பிடித்து கொண்டு பயணம் செய்து உள்ளார். விசாகப்பட்டினத்தில் கஜூவாகா இரும்பு தொழிற்சாலைக்கு அருகே இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான வீடியோவை வேறொரு வாகன ஓட்டி இணையத்தில் வெளியிட அது பலரால் பகிரப்பட்டு வைரலாகி உள்ளது. நமக்கு கிடைத்துள்ள தகவலின்படி, இந்த சம்பவத்தில் ஈடுப்பட்டுள்ளவர்கள் இருவரும் கல்லூரி மாணவர்கள் ஆவர். இந்த நிகழ்வில் நாம் முக்கியமாக கவனிக்க வேண்டியது என்னவென்றால், இதில் இருவரும் ஹெல்மெட் அணிந்திருக்கவில்லை. இந்த வீடியோவை கண்ட போலீசார் சம்பந்தப்பட்ட ஜோடியை போலீஸ் நிலையத்திற்கு வர அழைத்து விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.

இருவரும் கல்லூரி மாணவர்கள் என்பதால் அவர்கள் பற்றிய விபரங்களை போலீசார் வெளியிட மறுத்துவிட்டனர். இந்தியாவில் இவ்வாறான சம்பவங்கள் நடைபெறுவது ஒன்றும் இது புதியது அல்ல. ஏற்கனவே கடந்த 2021 ஆகஸ்ட் மாதத்தில் பீகாரை சேர்ந்த காதல் ஜோடி ஒன்று இதேபோன்று பைக்கில் பயணித்தது அந்த சமயத்தில் இணையத்தில் வைரலாகி இருந்தது. அந்த சமயத்தில் அவர்கள் ஓர் காலியான சாலையை தேர்வு செய்து இவ்வாறு ரைடு செய்து இருந்தனர்.

காதல் ஜோடியின் பயமுறுத்தும் பைக் ஸ்டண்ட் - வைரல் வீடியோ!!

ஆனால் அந்த சாலையில் சென்ற வேறொரு வாகன ஓட்டி தற்போது நடந்திருப்பதை போன்று வீடியோவாக காட்சிப்படுத்தி இணையத்தில் வெளியிட்டார். இதேபோன்றதான மற்றொரு சம்பவம் கோவாவில் நடைபெற்றது. மத்திய பிரதேசத்தை சேர்ந்த ஒரு இளம் தம்பதி இவ்வாறான அச்சுறுத்தும் வகையிலான பைக் ஸ்டண்ட்டில் ஈடுப்பட்டனர். இதனை வேறொரு வாகன ஓட்டி படம் பிடித்து இணையத்தில் வெளியிட, அவர்களுக்கு போலீஸார் ரூ.1,000 அபராதம் விதித்தனர்.

ஆனால் என்ன தான் போலீஸார் இவ்வாறான நிகழ்வுகளை தடுக்க அபராதங்களை விதித்தாலும் சிலர் அவற்றை ஒரு பொருட்டாக மதிப்பதில்லை என்பதே இதில் கசப்பான விஷயம். இவ்வாறான ஸ்டண்ட்கள் மற்றவர்களுக்கும் காயத்தையும், துன்பத்தையும் ஏற்படுத்தக்கூடியன என்பதை அத்தகையர்கள் உணர்வதில்லை. குறைந்தப்பட்சம், இத்தகைய ஸ்டண்ட்டினால் நமக்கு பெரிய அளவில் காயம் ஏற்படும் என சுயநலமாகவாவது யோசித்தல் வேண்டும். இதற்கு முக்கிய காரணம், இன்றைய கால இணைய வாழ்க்கையே என்பதை மறுப்பதற்கில்லை.

சாலையில் முறையாக பயணிக்கும் மற்ற வாகன ஓட்டிகளை அச்சுறுத்தம் வகையிலான இவ்வாறான சாலை ஸ்டண்ட்களை தடுக்க, இவ்வாறான சம்பவங்களில் ஈடுப்படுவோர்க்கு போலீஸார் கடுமையான அபராதங்களையோ அல்லது சிறைத்தண்டனை போன்றவற்றையோ வழங்கினால் மட்டுமே முடியும். இவ்வாறான ஸ்டண்ட்களை மேற்கொண்டு, அதனை படம் பிடித்து இணையத்தில் பதிவிட்டு லைக்குகளையும், கமெண்ட்களையும் வாங்க நினைப்போர் எதாவது தனியார் இடங்களில் வைத்து கொள்வது நல்லது. அதுவே மற்ற வாகன ஓட்டிகளுக்கும் பாதுகாப்பாக இருக்கும்.

Article Published On: Wednesday, January 4, 2023, 15:58 [IST]
English summary
Couple riding pulsar bike where girl sitting on fuel tank
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+