மெட்ரோ ரயிலை லாட்ஜ் ஆக மாற்றிய இளம் ஜோடி! சின்ன பசங்கலாம் இந்த வீடியோவை தயவு செஞ்சு பாக்காதீங்க!
இந்திய மக்கள் பெரும்பாலானோர், பஸ், ரயில் போன்ற பொது போக்குவரத்து வாகனங்களில் பயணம் செய்வதை காட்டிலும், சொந்த வாகனங்களில் பயணம் செய்வதற்குதான் அதிக முன்னுரிமை கொடுக்கின்றனர். இதன் காரணமாக இந்திய சாலைகளில் சமீப காலமாக போக்குவரத்து நெரிசல் பிரச்னை அதிகரித்து கொண்டே வருகிறது.
வீட்டில் இருந்து ஒரு இடத்திற்கு சென்று விட்டு திரும்பி வருவதற்குள் போதும் போதுமென்றாகி விடுகிறது. நிலைமை இப்படி இருக்கும்போது, இந்திய சாலைகளில் இனி போக்குவரத்து நெரிசல் பிரச்னை இன்னும் அதிகரித்து விடும் போல் தெரிகிறது. பொது போக்குவரத்து வாகனங்களில் அரங்கேறி வரும் அநாகரீகங்கள்தான் இதற்கு காரணம்.

டெல்லி மெட்ரோ ரயில்களில் கடந்த காலங்களில் இளம் ஜோடிகள் முத்தமிட்டு கொள்வது, கட்டியணைத்து கொள்வது போன்ற சில்மிஷங்களில் ஈடுபட்ட வைரல் வீடியோக்கள் (Viral Video) பலவற்றை நாம் பார்த்துள்ளோம். இந்த வரிசையில் தற்போது ஒரு வீடியோ வெளியாகி அனைவரையும் முகம் சுழிக்க வைத்துள்ளது.
மெட்ரோ ரயில் ஓடி கொண்டிருந்தபோது, இளைஞர் ஒருவரும், இளம்பெண் ஒருவரும் கட்டியணைத்து கொண்டு முத்தமிட்டு கொள்வதை இந்த வீடியோவில் நம்மால் பார்க்க முடிகிறது. ஆனந்த் விஹார் பகுதியில் ரயில் ஓடி கொண்டிருந்தபோது இந்த அநாகரீகம் அரங்கேறியுள்ளது. இந்த இளம் ஜோடி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நெட்டிசன்கள் பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.
ஆனால் நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டதை போல், டெல்லி மெட்ரோ ரயில்களில் இத்தகைய சம்பவங்கள் நடைபெறுவது இது முதல் முறையல்ல. கடந்த காலங்களிலும் இத்தகைய முகம் சுழிக்க வைக்கும் சம்பவங்கள் பலமுறை நடைபெற்றுள்ளன. இதையடுத்து மெட்ரோ ரயில்கள் மற்றும் ரயில் நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
இதன் ஒரு பகுதியாக மெட்ரோ ரயில்கள் மற்றும் ரயில் நிலையங்களில் பாதுகாவலர்கள் ரோந்து வர தொடங்கினர். ஆனாலும் முகம் சுழிக்க வைக்கும் சம்பவங்கள் குறைந்தபாடில்லை. எனவே இனி இத்தகைய செயல்களில் ஈடுபடுவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நாம் உறுதியாக நம்பலாம்.
டெல்லி மெட்ரோ ரயில் கழகத்தின் சட்ட திட்டங்களின் படி, பிற பயணிகளுக்கு அசௌகரியம் ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்பவர்கள் மீதும், அநாகரீகமாக நடந்து கொள்பவர்கள் மீதும் செக்ஸன் 59-ன் கீழ் நடவடிக்கை எடுக்க முடியும் என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: பொது போக்குவரத்து வாகனங்களில் மற்றவர்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் வகையில் அநாகரீகமாக நடந்து கொள்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதுதான் டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் கருத்து. இல்லாவிட்டால் இது வேறு விதமான பிரச்னைகளை ஏற்படுத்தும் என்பதை அரசு அதிகாரிகள் கவனத்தில் கொள்ள வேண்டும்.


Click it and Unblock the Notifications








