இந்த ரொமான்சுக்கு முன்னாடி ஹாலிவுட் படங்களே ஓரமாதான் நிக்கணும்! தயவு செஞ்சு வீடியோவ தனியா போய் பாருங்க!
இந்தியாவில் தற்போது மோசமான கலாச்சாரம் ஒன்று வேகமாக பரவி வருகிறது. இரு சக்கர வாகனங்களில் (Two Wheelers), இளம்ஜோடிகள் அநாகரீகமான முறையில் நடந்து கொள்கின்றனர். இரு சக்கர வாகனங்கள் ஓடி கொண்டிருக்கும்போதே கட்டியணைத்து கொண்டும் (Hug), முத்தமிட்டு கொண்டும் (Kiss) பயணம் செய்கின்றனர்.
இது தொடர்பான வைரல் வீடியோக்கள் (Viral Videos) பலவற்றை கடந்த காலங்களில் நாம் பார்த்துள்ளோம். இதன் அடிப்படையில் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு காவல் துறை அதிகாரிகள் அபராதமும் (Fine) விதித்துள்ளனர். ஆனாலும் இது போன்ற சம்பவங்கள் குறைவது போல் தெரிவதில்லை. ஏனெனில் தற்போது புதிதாக ஒரு வைரல் வீடியோ வெளியாகியுள்ளது.

இதில் பைக் (Bike) ஒன்றில், ஒரு இளைஞரும், இளம்பெண்ணும் பயணம் செய்வதை நம்மால் பார்க்க முடிகிறது. அவர்கள் காதலர்கள் என கூறப்படுகிறது. இதில் அந்த இளைஞர் பைக்கை ஓட்டி கொண்டுள்ளார். அந்த இளம்பெண் அவருக்கு பின்னால்தான் அமர்ந்திருக்க வேண்டும். ஆனால் இளம்பெண்ணோ, அவருக்கு முன்னால், பெட்ரோல் டேங்க் மீது அமர்ந்துள்ளார்.
இது மிகவும் ஆபத்தான பயணம் ஆகும். ஆனால் அவர்கள் அதை உணரவில்லை. போதாக்குறைக்கு அவர்கள் இருவருமே ஹெல்மெட் (Helmet) வேறு அணியவில்லை. இந்த ஆபத்தான பயணத்தின்போதும், அவர்கள் ரொமான்ஸ் செய்ய தவறவில்லை. ஏனெனில் அவர்கள் முத்தமிட்டு கொண்டு பயணம் செய்வதையும் நம்மால் பார்க்க முடிகிறது.

இந்த வீடியோ வைரல் ஆக பரவி வரும் நிலையில், காவல் துறை அதிகாரிகளின் கவனத்திற்கும் சென்றுள்ளது. ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனத்தில் பயணம் செய்தது மற்றும் அபாயகரமான முறையில் இரு சக்கர வாகனத்தை ஓட்டியது ஆகிய குற்றங்களுக்காக 4,000 ரூபாயை அந்த இளைஞருக்கு காவல் துறை அதிகாரிகள் அபராதமாக விதித்துள்ளனர்.
சட்டீஸ்கர் (Chhattisgarh) மாநிலம் ராய்ப்பூர் (Raipur) பகுதியில்தான் இந்த அபாயகரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த வீடியோ எடுக்கப்பட்டபோது சாலை சற்று காலியாகதான் இருந்தது. இருப்பினும் சாலை காலியாக இருக்கிறது என்பதற்காக இப்படி எல்லாம் பயணம் செய்ய கூடாது. ஏனெனில் எப்போது வேண்டுமானாலும் சாலை விபத்துக்கள் நிகழலாம்.
ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனத்தில் பயணம் செய்வதே முதலில் தவறு. அதிலும் இப்படி ஆபத்தான முறையில் பயணம் செய்வது இன்னும் தவறு என்றுதான் சொல்ல வேண்டும். இது இப்படி பயணம் செய்பவர்களுக்கு மட்டுமல்லாது, சாலையில் பயணம் செய்யும் மற்றவர்களுக்கும் பாதிப்புகளை ஏற்படுத்தலாம் என்பதை அனைவரும் உணர வேண்டும்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: சமூக வலை தளங்களில் (Social Media) பிரபலமாக வேண்டும் என்பதற்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற மனப்போக்கு சமீப காலமாக இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் மத்தியில் அதிகரித்து கொண்டே வருகிறது. இதை ஆரம்பத்திலேயே கிள்ளி எறிய வேண்டும்.
வாகனங்களில் இப்படி ஆபத்தான முறையில் பயணம் செய்பவர்களுக்கு வெறும் அபராதம் விதிப்பதுடன் நிறுத்த கூடாது. இன்னும் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அப்போதுதான் அது மற்றவர்களுக்கும் ஒரு பாடமாக இருக்கும். இல்லாவிட்டால் இவர்களை பார்த்து, இன்னும் பலர் இது போன்ற சம்பவங்களில் ஈடுபடுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.


Click it and Unblock the Notifications








