பெட்ரூமில் பண்ண வேண்டியதை ஸ்கூட்டரிலேயே செய்த காதல் ஜோடி... 18 வயசு ஆனவங்க மட்டும் இந்த வீடியோவை பாருங்க!

இந்தியாவில் வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிமுறைகளை மீறுவதுதான், பெரும்பாலான சாலை விபத்துக்களுக்கு மிகவும் முக்கியமான காரணமாக உள்ளது. ஏற்கனவே இங்கு போக்குவரத்து விதிமுறைகள் காற்றில் பறக்க விடப்படும் நிலையில், சமீப காலமாக புது 'ட்ரெண்ட்' ஒன்று மிக வேகமாக பரவி வருகிறது. டூவீலர்களில் பயணம் செய்து கொண்டே 'ரொமான்ஸ்' செய்வதை பற்றிதான் நாங்கள் பேசி கொண்டுள்ளோம். கடந்த காலங்களில் நிறைய இளம் ஜோடிகள் டூவீலர்களில் பயணம் செய்து கொண்டே பயணம் செய்துள்ளனர். சில சமயங்களில் பெண்ணும், பெண்ணும் ரொமான்ஸ் செய்து கொண்டே பயணித்த வீடியோவை எல்லாம் நாம் பார்த்துள்ளோம்.

இது மிகவும் ஆபத்தானது என்பதால், இதில் நிறைய பேர் மீது காவல் துறை அதிகாரிகள் அதிரடியான நடவடிக்கைகளை எடுத்துள்ளனர். ஆனால் இன்னமும் ஒரு சில இளம்பெண்களும், ஆண்களும் திருந்துவது போல் தெரியவில்லை. ஏனெனில் சமூக வலை தளங்களில் தற்போது புதிதாக ஒரு வைரல் வீடியோ (Viral Video) வேகமாக பரவி வருகிறது.

Couple Romance On Suzuki Burgman Scooter

இந்த வைரல் வீடியாவில் ஒரு இளைஞர் ஸ்கூட்டரை ஓட்டி கொண்டிருப்பதை நம்மால் பார்க்க முடிகிறது. அது சுஸுகி பர்க்மேன் (Suzuki Burgman) ஸ்கூட்டர் ஆகும். அவருக்கு பின்னால், ஒரு ஆணும், பெண்ணும் அமர்ந்துள்ளனர். இந்த ஆணும், பெண்ணும் ஒருவரை ஒருவர் நேராக பார்த்த வகையில் அமர்ந்துள்ளனர்.

ஸ்கூட்டரில் 3 பேர் பயணம் செய்வதே முதலில் தவறான விஷயம். அத்துடன் அவர்கள் மூவரும் ஹெல்மெட் வேறு அணியவில்லை. இது போதாதென்று பின்னால் அமர்ந்துள்ள ஆணும், பெண்ணும் ரொமான்ஸ் செய்து கொண்டே பயணிப்பதையும் நம்மால் காண முடிகிறது. அனேகமாக அவர்கள் காதலர்களாக இருக்கலாம் என தெரிகிறது.

இது அப்பட்டமான விதிமுறை மீறல் என்பதால், வைரல் வீடியோவில் பதிவாகியிருந்த ஸ்கூட்டரின் பதிவு எண்ணை வைத்து காவல் துறை அதிகாரிகள் விசாரணையை நடத்த தொடங்கினர். இதன் பேரில் ஸ்கூட்டரில் பயணம் செய்த 2 ஆண், 1 பெண் என 3 பேரையும் காவல் துறை அதிகாரிகள் தற்போது அதிரடியாக கைது செய்துள்ளனர். பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவம் அகமதாபாத் (Ahmedabad) நகரில் நடைபெற்றுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: சமூக வலை தளங்களில் வேகமாக பிரபலம் ஆவதற்காக வைரல் கன்டெட்களை தேடி இளைய தலைமுறையினர் பலர் அலைந்து கொண்டுள்ளனர். இதற்காக பொது சாலைகளில் ஆபத்தான முறையில் பைக் ஸ்டண்ட் செய்வது, டூவீலர்களில் ரொமான்ஸ் செய்து கொண்டே பயணம் செய்வது போன்ற வழிகளை எல்லாம் பலர் தேர்வு செய்கின்றனர்.

கடுமையான நடவடிக்கைகள் மூலமாக மட்டுமே இவர்களை கட்டுப்படுத்த முடியும் என நாங்கள் கருதுகிறோம். இது போன்ற செயல்கள், அவர்களுக்கு மட்டுமல்லாது, அவர்களுடன் சாலையை பகிர்ந்து கொள்ளும் மற்ற வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகளுக்கும் பாதிப்புகளை ஏற்படுத்தும். எனவே அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவது நன்மை பயக்கும்.

இல்லாவிட்டால் இந்த வைரல் வீடியோக்களை முன்னுதாரணமாக கொண்டு இன்னும் நிறைய பேர், இதே போன்ற செயல்களில் ஈடுபடுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. அப்படியான ஒரு சூழல் தற்போது உருவாகி விட்டது. எனவே இது தீவிரமடைவதற்கு முன்பாக, விழிப்புணர்வு ஏற்படுத்துதல் மற்றும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் போன்ற விஷயங்களை சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் மேற்கொண்டால் நன்றாக இருக்கும்.

More from DriveSpark

Article Published On: Saturday, June 8, 2024, 14:30 [IST]
English summary
Couple romance on suzuki burgman scooter new viral video
மேலும்... #off beat #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+