யாருய்யா இவரு! சினிமா ஹீரோ மாறி காதலியை பைக்ல கூட்டிட்டு போறாரு! கடைசில இப்படி போலீஸ் தேடுற ஆளா மாறிட்டாரே!

ரோட்டில் காதல் ஜோடிகள் பைக்கில் செல்லும் போது ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்துக்கொண்டு போவதை நாம் அடிக்கடி பார்த்திருப்போம். இது சென்னை, பெங்களூரு போன்ற போன்ற பெருநகரங்களில் அதிகமாக நடந்து வருகிறது. இப்படியாகச் சாலை விதிகளை மீறி ஒரு காதல் ஜோடி ரோட்டில் பைக்கில் ஆபத்தான பயணம் மேற்கொண்ட வீடியோ ஒன்று வைரலாக பரவி வருகிறது.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் பி2 பைபாஸ் என்ற பகுதி இருக்கிறது. இந்த இடத்தில் சமீபத்தில் ஒரு காதல் ஜோடி விருமன் ஸ்டைலில் காதலன் பைக் ஓட்ட அதன் டேங்க் பகுதியில் காதலி காதலனைப் பார்த்து அமர்ந்த படி அவரின் காலை காதலனைச் சுற்றிக் கட்டிக்கொண்டு பயணித்திருக்கிறார். இது மோட்டார் வாகன சட்டப்படி விதிமுறை மீறலாகும்.

யாருய்யா இவரு! சினிமா ஹீரோ மாறி காதலியை பைக்ல கூட்டிட்டு போறாரு! கடைசில இப்படி போலீஸ் தேடுற ஆளா மாறிட்டாரே!

இது ஆபத்தை விளைவிக்கும் பயணமாகும். இந்த காதல் ஜோடி இப்படிப் பயணிக்கும் போது அந்த சாலையில் மற்றொரு காரில் சென்றவர் தனது செல்போனில் வீடியோவாக எடுத்து அதைச் சமூகவலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார். இது போல வேறு சிலரும் இந்த காட்சியை வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோக்கள் எல்லாம் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

தற்போது ராஜஸ்தான் போலீசார் இப்படியாகப் பயணித்த காதல் ஜோடியைத் தேடி வருகின்றனர். அவர்கள் பயணித்த பைக்கின் பதிவெண்ணை வைத்து இந்த காதல் ஜோடிகள் யார் எனத் தேடி வருகின்றனர். இவர்களுக்கு அபராதம் விதிக்கவும் முடிவு செய்துள்ளனர். அவர்கள் போலீசிடம் சிக்கியதும் அவர்களுக்கு "கவனிப்பு" இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படியாகக் காதலியை பைக்கின் டேங்கில் ஏற்றிப் பயணிக்க வைப்பது ஒன்றும் புதிதல்ல கடந்த 2015ம் ஆண்டு கோவாவில் இது போன்ற ஒரு சம்பவம் நடந்து அது இந்தியா முழுவதும் வைரலாக பரவியது. மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு காதல் ஜோடி இப்படிப் பயணித்ததில் அவர்களுக்கு ரூ ஆயிரம் அபராதமாக விதிக்கப்பட்டது. அதற்கு முன்னரும் பல சம்பவங்கள் நடந்துள்ளது.

சமூகவலைத்தளங்கள் வந்த பிறகு இப்படியாகச் சேட்டை செய்பவர்களை வீடியோ எடுத்து மக்களே சமூகவலைத்தளங்களில் அம்பலப்படுத்தி விடுவதால் போலீசார் அவர்களைப் பிடித்து எளிமையாக அபராதம் விதித்து விடுகின்றனர். முன்னர் போலீசார் சம்பவ இடத்திலிருந்தால் மட்டுமே அபராதம் விதிக்கப்பட்டு வந்தது.

இப்படி காதலியுடன் மட்டுமல்ல தனியாகச் செல்லும் போதும் இளைஞர்கள் பலர் வித்தை காட்டுவதாக நினைத்து ஆபத்தான முறையில் வாகனங்களை ஓட்டி வருகின்றனர். சிலர் பொது சாலைகளில் ரேஸ் விடுகின்றனர். இதுவும் சட்டப்படி தவறான ஒரு விஷயம் தான் இதை நீங்கள் செய்யாதீர்கள்.மற்றவர்கள் செய்தாலும் அதை அம்பலப்படுத்துங்கள். இது குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.

More from DriveSpark

Article Published On: Friday, March 10, 2023, 16:00 [IST]
English summary
Couple romance ride video on royal enfield gone viral
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+