ஹோட்டலில் செய்ய வேண்டிய மேட்டரை நடுரோட்டில் செய்த காதல் ஜோடி... 18 வயசு ஆனவங்க மட்டும் வீடியோவை பாருங்க!
இந்தியாவில் சமீப காலமாக இளம் வயதினர் மத்தியில் ஒரு டிரெண்ட் மிக வேகமாக பரவி வருகிறது. டூவீலர்களில் பயணம் செய்யும்போது கட்டியணைத்து கொள்வதும், முத்தமிட்டு கொள்வதும்தான் அந்த டிரெண்ட். கடந்த காலங்களில் நாம் பார்த்த சம்பவங்களில் ஆண் டூவீலரை ஓட்டி கொண்டிருப்பார்.
அவரின் காதலியோ பின் பக்கம் அமர்வதற்கு பதிலாக முன் பக்கம் பெட்ரோல் டேங்க் அல்லது அவரது காதலனின் தொடையின் மீது அமர்ந்திருப்பார். இது போன்ற வைரல் வீடியோக்கள் (Viral Videos) பலவற்றை கடந்த காலங்களில் நாம் பார்த்துள்ளோம். இந்த வரிசையில் தற்போது ஒரு வைரல் வீடியோ சமூக வலை தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

இந்த வைரல் வீடியோவில், ஒரு ஆணும், பெண்ணும் சுஸுகி ஆக்ஸெஸ் (Suzuki Access) ஸ்கூட்டரில் பயணம் செய்வதை நம்மால் பார்க்க முடிகிறது. ஆனால் இந்த பயணம் வழக்கத்திற்கு மாறானதாக உள்ளது. அவர்கள் இருவரும் போர்வையை போர்த்தி கொண்டு பயணம் செய்துள்ளனர். குளிர் காரணமாக அவர்கள் இப்படி செய்திருக்கலாம்.
ஆனால் அவர்கள் செய்த மற்றொரு விஷயம்தான் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோவில், ஆண் ஸ்கூட்டரை ஓட்டி கொண்டிருப்பதை நம்மால் பார்க்க முடிகிறது. அவரது காதலி என கருதப்படும் பெண், அந்த ஆணின் தொடை மீது அமர்ந்துள்ளார். இது போன்று பயணம் செய்வதே ஆபத்தானது எனும் நிலையில், போதாக்குறைக்கு அவர்கள் ரொமான்ஸ் செய்து கொண்டே பயணிக்கின்றனர்.

அவர்கள் கட்டியணைத்து கொள்வதையும், முத்தமிட்டு கொள்வதையும் இந்த வீடியோவில் நம்மால் தெளிவாக பார்க்க முடிகிறது. இது போதாதென்று அவர்கள் இருவரும் ஹெல்மெட் வேறு அணியவில்லை. இதன் காரணமாக சமூக வலை தளங்களில் இந்த செயல், கடும் விமர்சனங்களை தற்போது சந்தித்து கொண்டுள்ளது.
சமூக வலை தளங்களில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ள இந்த சம்பவம் மும்பை (Mumbai) நகரில் நடைபெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவோ அல்லது அபராதம் உள்ளிட்ட நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்பட்டுள்ளதாகவோ தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்த வீடியோவில், ஸ்கூட்டரின் பதிவு எண் தெளிவாக தெரிகிறது. இதை அடிப்படையாக வைத்து சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என நாங்கள் கருதுகிறோம். இல்லாவிட்டால் இது தவறான முன்னுதாரணங்களை ஏற்படுத்தி விடும் என்பது எங்கள் கருத்து.
அதாவது வைரல் வீடியோக்களை உருவாக்க வேண்டும் என்பதற்காக ஒரு சிலர் இது போன்ற விபரீத செயல்களில் ஈடுபடுகின்றனர். கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படாத காரணத்தால், அவர்களை பின்பற்றி இன்னும் பலர் இதே தவறை செய்கின்றனர். எனவே நடவடிக்கைகள் கடுமையாக்கப்பட்டால் மட்டுமே இது போன்ற ஆபத்தான செயல்களை கட்டுப்படுத்த முடியும்.


Click it and Unblock the Notifications








