ஷோரூமில் கணவன், மனைவி இருவரும் மாறி கண்ணீர் வடிக்க... முதல் காராக வீட்டிற்கு வந்த மாருதி கார்!

வாழ்க்கையில் எத்தனை கார்களை வாங்கினாலும், முதல் கார் வாங்கும்போது கிடைக்கும் சந்தோஷம் தனி அனுபவம் என்றுதான் சொல்ல வேண்டும். அதுவும் திருமண வாழ்க்கைக்குள் நுழைந்த பின்பு முதல் காரை கணவன்/ மனைவி உடன் சேர்ந்து வாங்குகிறோம் என்றால் கிடைக்கும் மகிழ்ச்சியை சொல்லவே வேண்டாம்.

அப்படித்தான் இங்கு ஒரு தம்பதியினர் தங்களது முதல் காரை வாங்கிய போது கார் ஷோரூமிலேயே ஆனந்த கண்ணீர் வடித்து உணர்ச்சிவசப்பட்டு உள்ளனர். வீட்டில் ஒரு மோட்டார்சைக்கிள் இருக்க வேண்டும் என கூறிய காலம் போய், வீட்டில் குறைந்தது ஒரு கார் ஆவது இருக்க வேண்டும் என சொல்லும் காலம் ஏற்கனவே துவங்கிவிட்டது.

Couple Takes Their First Car Delivery

அமெரிக்காவில் பெரும்பாலான வீடுகளில் வீட்டிற்கு ஒரு கார் வந்துவிட்ட நிலையில், நம் இந்தியாவில் தான் இன்னும் 2-வீலர்களின் பயன்பாடு அதிகமாக உள்ளது. ஆனால், காலம் மாற மாற நம் இந்தியாவிலும் கார்களின் பயன்பாடு அதிகரிக்கும். இதனாலேயே எப்படியாவது குடும்பத்திற்கு ஒரு காரை ஆவது வாங்கிவிட வேண்டும் என்று பலர் வாழ்க்கை குறிக்கோளாக வைத்துள்ளனர்.

அதை சாதித்த சந்தோஷம் தான் இந்த தம்பதியின் கண்ணீருக்கு காரணம். டெலிவிரி (Delivery) எடுத்த பின் காரின் முன் இருக்கையில் கணவர் அமர, மனைவி காரை ஓட்டி சென்றுள்ளார். இந்த தம்பதி வாங்கி இருப்பது பிராண்ட்-நியூ மாருதி சுஸுகி ஃபிரான்க்ஸ் (Maruti Suzuki Fronx) கார் ஆகும்.

Couple Takes Their First Car Delivery

இந்தியாவில் முதலாவதாக கார் வாங்குபவர்களில் பலர் தேர்வு செய்வது மாருதி கார் தான் என்பது மறுபடியும் ஒருமுறை நிரூபணம் ஆகியுள்ளது. ஃபிரான்க்ஸ் காரை கடந்த 2023ஆம் ஆண்டின் துவக்கத்தில் மாருதி சுஸுகி நிறுவனம் இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. அதன் எக்ஸ்-ஷோரூம் விலைகள் தற்சமயம் ரூ.7.54 லட்சத்தில் இருந்து ரூ.13.06 லட்சம் வரையில் உள்ளன.

1.0 லிட்டர் பூஸ்டர்ஜெட் பெட்ரோல் என்ஜின் மற்றும் 1.2 லிட்டர் நேச்சுரலி-அஸ்பிரேட்டட் பெட்ரோல் என்ஜின் என இரு விதமான என்ஜின் ஆப்ஷன்கள் ஃபிரான்க்ஸ் காரில் வழங்கப்படுகின்றன. இதில் 1 லிட்டர் பூஸ்டர்ஜெட் பெட்ரோல் என்ஜின் ஆனது அதிகப்பட்சமாக 99 பிஎச்பி மற்றும் 146 என்.எம் டார்க் திறன் வரையிலும், 1.2 லிட்டர் நேச்சுரலி-அஸ்பிரேட்டட் பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 89 பிஎச்பி மற்றும் 113 என்.எம் டார்க் திறன் வரையிலும் இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக் கூடியதாக உள்ளன.

ஃபிரான்க்ஸ் காரில் 9 இன்ச்சில் டச் ஸ்க்ரீன் ஸ்மார்ட் பிளே புரோ+ இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு இணைப்பு வசதி, வயர்லெஸ் ஸ்மார்ட்போன் சார்ஜிங் வசதி, செமி-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல், ஒவ்வொரு திருப்பலுக்கும் வழிக்காட்டுதலை வழங்கக்கூடிய ஹெட்-அப் டிஸ்பிளே மற்றும் 360-டிகிரி கேமரா உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: பெரியதாக கார் ஓட்டிய பழக்கம் இல்லாத வயதில் முதல் காராக வாங்குவதற்கு ஃபிரான்க்ஸ் மிகவும் ஏற்ற கார் ஆகும். எந்த என்ஜின் உடன் இந்த தம்பதியினர் ஃபிரான்க்ஸ் காரை வாங்கி உள்ளனர் என்பது தெரியவில்லை. ஃபிரான்க்ஸ் காரை வாங்கிய ராசி இந்த தம்பதிக்கு இனி அடுத்தடுத்து நல்லது நடக்கும் என நம்புவோம்.

Source: reelswithankit/ Instagram

More from DriveSpark

Article Published On: Saturday, July 26, 2025, 21:01 [IST]
English summary
Couple takes their first car delivery with emotional tear check all details here
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+