காருக்குள் காதலர்கள் முத்தம் கொடுத்துக்கொண்டால் சட்டப்படி குற்றமா? சட்டம் என்ன சொல்கிறது தெரியுமா?

இந்தியாவில் காருக்குள் வைத்து ஒரு ஆண் ஒரு பெண்ணிற்கோ அல்லது ஒரு பெண் ஆணிற்கோ முத்தம் கொடுத்தால் அது இந்திய சட்டப்படி தவறான ஒரு விஷயம் ஆகும். இது குறித்து நேரடி சட்டம் இல்லை என்றாலும் இப்படியா செயல்களில் ஈடுபடுபவர்களைத் தண்டிக்கச் சட்டத்தில் இடம் உள்ளது. இது குறித்து விரிவாக காணலாம் வாருங்கள்

கார் என்பது ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குச் செல்ல பயன்படும் வாகனம் மட்டுமல்ல இது ஒரு உணர்வுப்பூர்வமானது. பலர் தங்கள் கார்களில் தான் தங்கள் வாழ்க்கையை மாற்றும் முடிவுகளைக் கூட எடுப்பார்கள். கார் பயணம் என்பது மிகவும் ரொமான்டிக்கான பயணமாகும். இங்குக் காதலர்கள் புதுமண தம்பதிகள் எல்லாம் செல்லும் போது ஒருவருக்கொருவர் அன்பைப் பரிமாறிக்கொள்ளும் வகையில் முத்தம் கொடுத்துக்கொள்வது என்பது சாதாரணமான ஒன்று தான்.

காருக்குள் காதலர்கள் முத்தம் கொடுத்துக்கொண்டால் சட்டப்படி குற்றமா? சட்டம் என்ன சொல்கிறது தெரியுமா?

ஆனால் இந்தியாவில் உள்ள சட்டப்படி பொது இடத்தில் முத்தம் கொடுப்பது என்பது அநாகரீகமாகச் செயல் இதனால் கார் பயணத்தின் போதும் முத்தம் கொடுத்துக்கொள்வது என்பது சட்டத்திற்கு விரோதமான செயலாகவே கருதப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்திய சட்டப்படி காருக்குள் முத்தம் கொடுப்பதற்கு எனத் தனிச் சட்டம் இல்லை என்றாலும் ஐபிசி பிரிவு 294-ன்படி இது தண்டனைக்குரிய குற்றம் என்பது தெரியவந்துள்ளது.

இந்திய பீனல் கோட் சட்டம் 294-ன் படி பொது இடத்தில் அருவருக்கத்தக்க வகையில் நடந்துகொள்வது இந்தியத் தண்டனை சட்டப்படி குற்றமாகும். இந்த சட்டத்தின் அடிப்படையில்தான் காருக்குள் இருவர் முத்தம் கொடுத்துக்கொள்வது சட்டப்படி குற்றமாகிறது. கார் பொது இடத்தில் இருக்கும் போது அதுவும் பொதுவிடமாகத் தான் கருதப்படும். கார் பொது இடத்தில் நிற்கும் போது அதைச் சுற்றி மற்ற மக்கள் இருப்பார்கள்.

இப்படியான சூழ்நிலைகளில் காருக்குள் இருக்கும் ஒரு ஆணும் பெண்ணும் முத்தம் கொடுத்துக்கொண்டால் அது வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு அருவருப்பாகத் தெரியலாம். இப்படியாக காருக்குள் இருவர் முத்தம் கொடுத்துக்கொள்வதை வெளியிலிருந்து யாராவது பார்த்து புகாரளித்தால் அது சட்டப்படி குற்றம் என்றே கருதப்படும். இந்த குற்றத்திற்காக இந்தியத் தண்டனை சட்டப்படி 3 மாதம் சிறைத் தண்டனை வழங்கப்பட வாய்ப்புள்ளது. ஆனால் இந்த தண்டனை குறிப்பிட்ட குற்றத்தின் தன்மை மற்றும் குற்றவாளியின் நடத்தை ஆகியவற்றை பொருத்தாது.

இந்த குற்றத்திற்கான தண்டனை ஜாமின் பெறக்கூடியதான ஒரு வழக்கு தான். இது சிறிய வழக்கு தான் என்றாலும் பலருக்கு இது குறித்த விழிப்புணர்வு இல்லை. காதலர்கள் பலர் இரவில் காரில் பயணம் செய்துவிட்டு ஏதாவது பொது இடத்தில் காரை நிறுத்தி தங்கள் அன்பை பரிமாறிக்கொள்ளும் விதமாக முத்தமிட்டுக்கொள்கின்றனர். இது முற்றிலும் சட்டப்படி தவறான விஷயம். இது பைக் மட்டுமல்ல பஸ், ரயில், மெட்ரோ போன்ற பொது போக்குவரத்திலும் பொருந்தும்.

பொது இடத்தில் இருவர் தங்கள் அன்பை பரிமாறிக்கொள்வதற்கு சில விதிமுறைகள் இருக்கிறது. அதன்படி மட்டுமே அன்பைப் பரிமாறிக்கொள்ள முடியும். ஒருவருக்கொருவர் கையை பிடித்துக்கொள்வது, கட்டிப்பிடித்துக்கொள்வது, தனது துணையின் மேல் கை போட்டுக்கொள்வது எல்லாம் பொது இடத்தில் செய்ய அனுமதிக்கப்பட்ட ஒன்று தான். ஆனால் முத்தம் கொடுத்துக்கொள்வது, தகாத முறையில் தொடுவது, பொது இடத்தில் உடலுறவு கொள்வது உள்ளிட்ட விஷயங்கள் தடை செய்யப்பட்ட ஒன்று தான்.

பொது இடத்தில் எது எல்லாம் செய்யக்கூடாதோ அது எல்லாம் காருக்குள்ளும் செய்யக்கூடாது. ஆம் நீங்கள் நினைப்பது சரி தான் காருக்குள் உடலுறவு கொள்வதும் சட்டப்படி குற்றம் தான். கார் பொது இடத்தில் இருக்கும் போது மற்றவர்களின் பார்வை எளிதாகப் படும் என்பதால் அந்த இடத்தில் காரையும் ஒரு பொது இடமாகவே சட்டம் கருதுகிறது. இதுகுறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Couples kissing each other in the car is illegal in India
Story first published: Tuesday, December 6, 2022, 16:53 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X