மெட்ரோ ரயிலை லாட்ஜ் ஆக மாற்றிய காதல் ஜோடி! பெட்ரூம்ல பண்ண வேண்டியதை எல்லாம் ட்ரெயின்லயே செஞ்சுட்டாங்க!
பெரு நகரங்களில் எல்லாம் தற்போது போக்குவரத்து நெரிசல் பிரச்னை தலைவிரித்தாட தொடங்கியுள்ளது. சாலை மார்க்கமாக கார், பஸ் அல்லது டூவீலர் போன்ற வாகனங்களில் பயணம் செய்வது என்பது மிக கடுமையான மன உளைச்சலை ஏற்படுத்த கூடிய ஒரு விஷயமாக மாறி விட்டது.
ஆனால் மெட்ரோ ரயில் (Metro Rail), இந்த பிரச்னைக்கு நல்ல தீர்வை வழங்கி வருகிறது. மெட்ரோ ரயில்கள் மின்னல் வேகத்தில் பறக்க கூடியவை. ஒரு நொடி கூட தாமதிக்காமல் குறித்த நேரத்திற்கு வந்து விடும். போக்குவரத்து நெரிசல் என்ற பேச்சுக்கே இடமில்லை. அத்துடன் மெட்ரோ ரயில் நிலையங்களும், பெட்டிகளும் ஹை-டெக்காக இருக்கும்.

எனவே பயணிகள் மத்தியில் மெட்ரோ ரயில்களுக்கு மிகப்பெரிய வரவேற்பு உள்ளது. இதன் காரணமாக அதிகப்படியான மெட்ரோ ரயில் திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. ஆனால் பயணிகளின் முக்கியமான போக்குவரத்து முறைகளில் ஒன்றாக உள்ள மெட்ரோ ரயில்களை ஒரு சில இளைஞர்களும், இளம்பெண்களும் தற்போது ஓயோ ஹோட்டலாக (OYO Hotel) மாற்றி வருகின்றனர்.
இந்தியாவின் தலைநகர் டெல்லியில்தான் (Delhi), இத்தகைய சம்பவங்கள் சமீப காலமாக தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. டெல்லி மெட்ரோ ரயில்களில், காதலர்கள் (Lovers) முத்தமிட்டு (Kiss) கொண்டும், கட்டியணைத்து (Hug) கொண்டும், பயணம் செய்யும் வீடியோக்கள் (Videos) கடந்த காலங்களில் பலமுறை வெளியாகியுள்ளன.
இந்த வரிசையில் தற்போது வெளியாகியுள்ள ஒரு வைரல் வீடியோ (Viral Video), சமூக வலை தளங்களில் காட்டு தீயை போல் வேகமாக பரவி வருகிறது. இந்த வீடியோவில் டெல்லி மெட்ரோ ரயிலின் ஒரு பெட்டியில் இளம்பெண்ணும், ஒரு இளைஞரும் அமர்ந்திருப்பதை காண முடிகிறது. அவர்கள் கதவிற்கு அருகே தரையில் அமர்ந்துள்ளனர்.
அந்த இளைஞரின் மடியில் அந்த பெண் படுத்து கொண்டிருக்க, இருவரும் உதட்டோடு உதடு சேர்த்து முத்த மழை பொழிந்து கொள்கின்றனர். அதே ரயிலில் பயணம் செய்த பயணி ஒருவர் இந்த வீடியோவை எடுத்ததாக கூறப்படுகிறது. இந்த வீடியோ வைரலாக பரவி வரும் நிலையில், சம்பந்தப்பட்ட இளைஞர் மற்றும் இளம்பெண் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நெட்டிசன்கள் வலியுறுத்தி தொடங்கியுள்ளனர்.
இதில் இந்த இளம்பெண் குடிபோதையில் இருப்பதை போல் தெரிகிறது. யாராக இருந்தாலும் குடிபோதையில் வாகனம் ஓட்டாமல், மெட்ரோ அல்லது பஸ் போன்ற பொது போக்குவரத்து வாகனங்களில் பயணம் செய்வது நல்லதுதான். சாலை விபத்துக்கள் ஏற்படுவதை இதன் மூலம் தவிர்க்க முடியும். ஆனால் பொது போக்குவரத்து வாகனங்களில் பயணம் செய்யும்போது, நாகரீகமாக நடந்து கொள்ள வேண்டும் என நெட்டிசன்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
மேற்கத்திய நாடுகளை போல், இந்தியாவிலும் பொது இடங்களிலேயே முத்தங்களை பரிமாறி கொள்வது தற்போது அதிகரித்து கொண்டே வருகிறது. அதிலும் ஒரு சிலர் எல்லை மீறி விடுகின்றனர். இதுபோன்ற ஒரு சம்பவம் தொடர்பாக டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் கடந்த ஒரு சில நாட்களுக்கு முன்பாக கூட செய்தி ஒன்றை வழங்கியிருந்தோம்.
2 இளம்பெண்கள் பைக்கில் அமர்ந்து கொண்டு, முத்தமிட்டு கொண்டும், கட்டிபிடித்து கொண்டும் பயணம் செய்தது தொடர்பான செய்தி அது. இத்தனைக்கும் அந்த பைக் தானாக ஓடி கொண்டிருந்தது. இருவரும் ஹெல்மெட் (Helmet) வேறு அணியவில்லை. ஏதாவது சிறு தவறு நடந்திருந்தால் கூட, பெரும் அசம்பாவிதம் நிகழ்ந்திருக்கும்.
இந்த சம்பவம் தமிழ்நாட்டில் (Tamil Nadu) நடைபெற்றதாக வெளியாகி வரும் தகவல்கள் இன்னும் கவலையை ஏற்படுத்துகின்றன. அந்த பரபரப்பே இன்னும் முழுமையாக அடங்கவில்லை. அதற்குள்ளாக டெல்லி மெட்ரோ ரயிலில் நடைபெற்றிருக்கும் கசமுசா வீடியோ வெளியாகி, அனைத்து தரப்பினரையும் கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இதை காதல், சுதந்திரம் என்ற பெயர்களில் அணுகுவது சரியானதாக இருக்கும் என்று தோன்றவில்லை. பொது போக்குவரத்து வாகனங்களில் அனைத்து தரப்பு மக்களும் பயணம் செய்கின்றனர். அவர்கள் முகம் சுழிக்காத வகையில், நாகரீகமாக நடந்து கொள்வது அவசியம் என்பது எங்கள் கருத்து.


Click it and Unblock the Notifications








