ஏமாற்ற நினைக்கும் கார் விற்பனையாளர்களுக்கு இது ஒரு பாடம்.. காரை வாங்கின காசுல பாதியை கொடுக்க சொன்ன நீதிமன்றம்!
கர்நாடகா மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்தவர் ஸ்வாதி அகர்வால். இவர் கடந்த 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஹூண்டாய் ஐ20 (Hyundai i20) காரை வாங்கினார். இது ஓர் ஹேட்ச்பேக் (Hatchback) ரக கார் ஆகும். இந்த காரை அவர் பெங்களூருவை மையமகாக் கொண்டு இயங்கும் ப்ளூ ஹூண்டாய் (Blue Hyundai) என ஷோரூமில் இருந்தே வாங்கி இருக்கின்றார்.
இந்த காரை வாங்கிய புதிதில் அதில் இருந்த பிரச்னை அவருக்கு தெரியவில்லை. அவருடைய கைகளுக்கு வந்த சில நாட்களுக்கு பின்னரே அதில் இருந்த சில பிரச்னை ஒன்று ஸ்வாதிக்கு தெரிய வந்திருக்கின்றது. முக்கியமாக காரில் வழங்கப்பட்டிருந்த முக்கிய அம்சங்களில் ஒன்றான ஒயர்லெஸ் ஆப்பிள் கார் ப்ளே சிஸ்டத்திலேயே பழுதுகள் இருப்பதை அவர் கண்டுபிடித்திருக்கின்றார்.

கார் வாங்கி சில மாதங்கள் ஆனநிலையில் அந்த பிரச்னையைல் அவர் அதிகம் சிரமத்திற்கு ஆளாகி இருக்கின்றார். இந்த நிலையிலேயே பழுதுகுறித்து அவர் கார் டீலரிடம் முறையிட்டு இருக்கின்றார். "தன்னால் ஆப்பிள் கார்ப்ளே சிஸ்டத்தை இணைக்கவே முடியவில்லை என்றும், இணைத்தாலும் சில நிமிடங்களிலேயே அது ஆட்டோமேட்டிக்காக துண்டித்துக் கொள்வதாகவும்" அவர் கூறி இருக்கின்றார்.
மேலும், "இதனால் தன்னால் நேவிகேஷன், செல்போன் அழைப்புகள் ஆகியவற்றை சரிவர பயன்படுத்த முடியவில்லை" என்றும் அவர் ஷோரூம் நிர்வாகத்திடம் கவலை தெரிவித்து இருக்கின்றார். ஆனால், இந்த விஷயத்தை சரி செய்யாமல் ஷோரூம் மற்றும் சர்வீஸ் நிர்வாகம் மெத்தனம் காட்டி இருக்கின்றது. மேலும், ஸ்வாதியை அலைக்கழித்தும் இருக்கின்றன.
சொல்லப்போனால் ஒவ்வொரு முறையும் சரி செய்து தருவதாகக் கூறி அவர்கள் ஸ்வாதியிடம் மீண்டும் அதே பழுதுடன் காரை ஒப்படைத்திருக்கின்றனர். பலமுறை முயற்சி செய்தும் தோல்வியுற்றதன் காரணத்தினால், பின்னர் இறுதியாக ஹூண்டாய் டீலர்ஷிப் மற்றும் நிர்வாகத்தின்மீது நடவடிக்கை எடுப்பதற்கான மனுவை பெங்களூரு நகர்ப்புற மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்திடம் ஸ்வாதி முன் வைத்தார்.
இந்த மனுவின் மீதான விசாரணையின் இறுதி தீர்ப்பே தற்போது வெளியிடப்பட்டு இருக்கின்றது. ஆணையம், இத்தனை நாட்களாக அலைக்கழிக்கப்பட்ட ஸ்வாதி அகர்வாலுக்கு ஆதரவாக தீர்ப்பை வழங்கி இருக்கின்றது. பழுதடைந்த பாகத்துடன் காரை விற்பனைச் செய்த தவறுக்காக அவருக்கு ரூ. 2 லட்சம் நஷ்ட ஈடை வழங்க ப்ளூ ஹூண்டாய் நிர்வாகத்திற்கு உத்தரவிட்டு இருக்கின்றது.
இத்துடன், வழக்கிற்கான செலவு ரூ. 25 ஆயிரத்தையும் அவருக்கு வழங்க ஆணையம் உத்தரவிட்டு இருக்கின்றது. இது வாடிக்கையாளரை அலைக்கழிக்கும் வகையில் நடந்துக் கொண்ட ஷோரூம் நிர்வாகத்திற்கு வழங்கப்பட்ட தகுந்த பாடமாகப் பார்க்கப்படுகின்றது. மேலும், வாடிக்கையாளர்கள் தலையில் எப்படியாவது மிளகாய் அறைத்துவிடலாம் என எண்ணிக் கொண்டிருக்கும் டீலர்களை இந்த சம்பவம் அதிர்ச்சியில் ஆழ்த்தும் வகையில் அமைந்திருக்கின்றது.
அபராதத்துடன் சேர்த்து ஸ்வாதிக்கு டெலிவரிக் கொடுக்கப்பட்டு இருக்கும் காரில் உள்ள பாதிக்கப்பட்ட ஆப்பிள் கார் ப்ளே சிஸ்டத்தை ரீ-பிளேஸ் செய்யவும் உத்தரவிடப்பட்டு இருக்கின்றது. இதை அனைத்தும் 60 நாட்களுக்குள் செய்துக் கொடுக்கும்படி அந்த உத்தரவில் கூறப்பட்டு இருக்கின்றது. இதைச் செய்யும் தவறும்பட்சத்தில் ஒட்டுமொத்த காரையும் மாற்றி தர உத்தரவிடப்படும் என்கிற எச்சரிக்கையையும் ஹூண்டாய் டீலருக்கு பெங்களூரு நகர்ப்புற மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் விடுத்திருக்கின்றது.
கார் மட்டும் ஓடும் நிலையில் இருந்தால் போதாது, ஓட்டுநர்களின் ரைடு அனுபவத்தை மேம்படுத்தக் கூடிய அம்சங்களின் தரமும் உயர்ந்ததாக இருக்க வேண்டும் என்பதை நீதிமன்றம் அங்கீகரித்துள்ளது. இதன் அடிப்படையிலேயே ஸ்வாதியின் மனுவிற்கு சாதகமான தீர்ப்பை ஆணையம் வழங்கி இருக்கின்றது. இந்த வழக்கால் ஹூண்டாய் நிறுவனத்தின் நற்பெயருக்கு லேசாக கலங்கம் ஏற்பட்டு இருக்கின்றது.
ஆகையால், ஹூண்டாய் நிறுவனத்தின் தரப்பில் இருந்தும் ஸ்வாதிக்கு கூடுதல் பலன் கிடைக்க வாய்ப்புகள் உள்ளன. மேலும், ஆணையமும் கார் விற்பனையாளர் மற்றும் உற்பத்தியாளர் மீது அதிருப்தியை தெரிவித்து இருக்கின்றது. இவர்களின் இந்த நடவடிக்கை நல்ல தொழில்துறையினருக்கு உகந்ததல்ல என்றும் அவர்கள் வேதனை தெரிவித்தனர்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: கார் விற்பனையாளர்கள் புதிதாக காரை விற்பனைச் செய்யும்போது வாடிக்கையாளரிடம் பழம் போல் பேசுவார்கள். ஆனால், அதை வாங்கிய பின்னர் அவர்களின் நடவடிக்கையே வேறு மாதிரி இருக்கும். இதற்கு மிக சிறந்த சான்றாகவே இந்த பெங்களூரு சம்பவம் அமைந்து இருக்கின்றது.


Click it and Unblock the Notifications








