இவி டூவீலர் வச்சிருக்கீங்களா? இனி இதை கட்டாயம் ஃபாலோ பண்ணியே ஆகனும்! நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு!
டெல்லி உயர் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட பொதுநல வழக்கில் எலெக்ட்ரிக் வாகனங்களில் செல்பவர்களும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்றும் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கும் கட்டாயம் இன்சுரன்ஸ் எடுக்கப்பட வேண்டும் என்றும் உறுதி செய்துள்ளது. இந்த சட்டம் ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் நிலையில் மீண்டும் இதை உறுதி செய்யும் வகையில் புதிய தீர்ப்பு ஒன்று வெளியிட்டுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ராஜாகபூர் என்பவர் மோட்டார் வாகன சட்டம் செக்ஷன்-146 புதிதாக பொதுநல வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார். அதன்படி டெல்லி பகுதியில் உள்ள எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு ஹெல்மெட்டை கட்டாயப்படுத்த வேண்டும் என்றும், எலெக்ட்ரிக் வாகனங்கள் வாங்கும் போது இன்சூரன்ஸ் கட்டாயமாக இருக்க வேண்டும் என்றும் அதில் குறிப்பிட்டு இருந்தார். டெல்லி அரசு எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான கொள்கையை வரைமுறை செய்யும் போது இதை குறிப்பிடவில்லை என அதில் தெரிவித்து இருந்தார்.

மேலும் மத்திய மோட்டார் வாகன சட்டத்தில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு என தனி பிரிவு இல்லை எனவும் இதனால் இதை வரைமுறைப்படுத்தவும் அதில் கேட்டுக் கொண்டிருந்தார். இந்த வழக்கு டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதிகள் சதீஷ் சந்திர சர்மா மற்றும் சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் இது ஒரு தேவையற்ற வழக்கு என்றும் இந்த வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ள சாராம்சங்கள் ஏற்கனவே நடைமுறையில் இருப்பதாகவும் அவர் தெரிவித்து இருந்தார். மேலும் இந்த வழக்கில் குறிப்பிட்ட உள்ளது படி மத்திய மோட்டார் வாகன சட்டத்தில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு என தனி பிரிவு இல்லை.
இதே சட்டங்கள் தான் பேட்டரி மூலம் இயங்கும் வாகனங்களுக்கு பொருந்தும் எனவும் ஒரு வாசகம் இருப்பதாகவும், எலெக்ட்ரிக் வாகனங்கள் எல்லாம் பேட்டரி மூலம் இயங்குவதால் அந்த வாகனங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும் எனவும், இதனால் தனியாக உட்பிரிவு தேவை இல்லை எனவும் அவர் விளக்கம் அளித்து இருந்தார்.
மேலும் ஹெல்மெட் மற்றும் இன்சூரன்ஸ் குறித்த விவாகரங்களில் ஏற்கனவே வெவ்வேறு வழக்குகளின் கீழ் இதில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு ஹெல்மெட் கட்டாயம் மற்றும் எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்கும்போது இன்சூரன்ஸ் கட்டாயம் என்பது குறித்த தீர்ப்புகள் எல்லாம் வந்து விட்டது எனவும் ,அதையே நடைமுறையில் இருப்பதாகவும் இதற்காக பிரத்தியேகமாக தீர்ப்பு வழங்க வேண்டிய அவசியம் இல்லை எனவும் குறிப்பிட்டு இருந்தார்.
இதன்பின் இந்த வழக்கு நீதிமன்ற நேரத்தை வீணடிக்கும் வழக்கு எனவும் கூறி இவர் இந்த வழக்கை தள்ளுபடி செய்தார். இருந்தாலும் இந்த வழக்கிற்காக வழக்கை தொகுத்தவர் பல்வேறு ஆய்வுகளை செய்து பல தரவுகளை கோர்டில் சமர்ப்பித்ததற்காக அவருக்கு வாழ்த்துக்களையும் கூறியுள்ளார். ஆனால் இந்த வழக்கின் கோரிக்கையானது பல்வேறு விதங்களில் நடைமுறையில் ஏற்கனவே இருப்பதால் இதற்கு தனியாக உத்தரவு பிறப்பித்து எந்த பலனும் இல்லை என அவர் விளக்கம் அளித்து இருந்தார்.
மேலும் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மத்திய மாநில அரசுகள் வழங்கும் மானியத்தை உரிய நேரத்தில் எலெக்ட்ரிக் வாகன தயாரிப்பாளர்களுக்கு வழங்குவது குறித்தும் இதில் சில முக்கியமான தரவுகளை வைத்திருந்தார். அதன்படி பார்க்கும்போது மானியங்கள் சரியான நேரத்தில் சென்று செல்வது குறித்த சில பிரச்சனைகள் இருப்பது தெரிகிறது என்றும், இதனால் மதிய மாநில அரசுகள் தங்கள் மானியத்தை உரிய நேரத்தில் தயாரிப்பாளர்களுக்கு வழங்க வேண்டும் எனவும் கூறியிருந்தார்.
இந்த உத்தரவின் படி எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு ஹெல்மெட் அணிவதும் எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்கும் போது இன்சூரன்ஸ் கட்டாயம் எடுக்க வேண்டும் என்பதும் மீண்டும் உறுதியாகி உள்ளது. இது சட்டம் ஏற்கனவே நடைமுறையில் இருந்தாலும், இதை மீண்டும் டெல்லி உயர்நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: காலையில் செல்லும் எந்த வாகனமாக இருந்தாலும் சரி உயிருக்கு ஆபத்து என்ற நிலை அனைத்து வாகனங்களுக்கும் பொருந்தும் இதனால் வாகன ஓட்டிகள் சாலையில் செல்லும்போது கட்டாயம் ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும். மேலும் விபத்துக்கு பின் ஏற்படும் இழப்பை ஈடு செய்வதற்காகவே இன்சுரன்ஸ் கட்டாயமாக்கப்படுகிறது இந்த விபத்தால் மற்றவர்களுக்கு ஏற்படும் இழப்பு மட்டுமே கட்டாயமான இன்சூரன்ஸ் ஆக இருக்கிறது.


Click it and Unblock the Notifications








