இ-பாஸ் இல்லாமல் சென்னையை விட்டு வெளியேற செம ட்ரிக்ஸ்... இளைஞர் செய்த காரியத்தால் ஆடிப்போன போலீஸ்...

இ-பாஸ் இல்லாமல், சென்னையை விட்டு வெளியேறுவதற்காக, இளைஞர் செய்த காரியத்தால் போலீசார் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இ-பாஸ் இல்லாமல் சென்னையை விட்டு வெளியேற செம ட்ரிக்ஸ்... இளைஞர் செய்த காரியத்தால் ஆடிப்போன போலீஸ்...

இந்தியாவில் கொரோனா வைரஸ் (கோவிட்-19) பரவுவதை தடுப்பதற்காக, கடந்த மார்ச் 24ம் தேதி ஊரடங்கு அமலுக்கு கொண்டு வரப்பட்டது. எனவே அன்றைய தினம் முதல் பஸ், ரயில், விமானம், ஆட்டோ மற்றும் டாக்ஸி உள்ளிட்ட பொது போக்குவரத்து வாகனங்களின் சேவைகள் அனைத்தும் அதிரடியாக நிறுத்தப்பட்டன.

இ-பாஸ் இல்லாமல் சென்னையை விட்டு வெளியேற செம ட்ரிக்ஸ்... இளைஞர் செய்த காரியத்தால் ஆடிப்போன போலீஸ்...

அத்துடன் தனியார் கார் மற்றும் டூவீலர்களை இயக்குவதற்கும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இந்த எச்சரிக்கையை மீறி இயக்கப்பட்ட வாகனங்கள் அதிரடியாக பறிமுதல் செய்யப்பட்டன. இதனால் இந்திய சாலைகள் வெறிச்சோடி கிடந்தன. ஆனால் தற்போது ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை மத்திய, மாநில அரசுகள் வழங்கியுள்ளன.

இ-பாஸ் இல்லாமல் சென்னையை விட்டு வெளியேற செம ட்ரிக்ஸ்... இளைஞர் செய்த காரியத்தால் ஆடிப்போன போலீஸ்...

இதனால் நாட்டின் பல்வேறு பகுதிகளில், பொது போக்குவரத்து சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன. அத்துடன் பயணங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த கடும் கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டுள்ளதால், தனியார் வாகனங்களின் இயக்கமும் அதிகரித்துள்ளது. ஆனால் தமிழக தலைநகர் சென்னையின் நிலைமையோ வேறு. சென்னையில் நாளுக்கு நாள் கட்டுப்பாடுகள் அதிகரித்து கொண்டே செல்கின்றன.

இ-பாஸ் இல்லாமல் சென்னையை விட்டு வெளியேற செம ட்ரிக்ஸ்... இளைஞர் செய்த காரியத்தால் ஆடிப்போன போலீஸ்...

இந்தியாவிலேயே கொரோனா வைரஸால் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்ட மாநிலங்களில் ஒன்றாக தமிழ் நாடு உள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை கொரோனா வைரஸ் பரவலின் ஹாட்-ஸ்பாட்டாக சென்னை மாறியுள்ளது. இதன் காரணமாக சென்னையில் கடந்த ஜூன் 19ம் தேதி முதல் மீண்டும் முழு பொது முடக்கத்தை தமிழக அரசு அமலுக்கு கொண்டு வந்துள்ளது.

இ-பாஸ் இல்லாமல் சென்னையை விட்டு வெளியேற செம ட்ரிக்ஸ்... இளைஞர் செய்த காரியத்தால் ஆடிப்போன போலீஸ்...

இந்த ஊரடங்கு 12 நாட்களுக்கு நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி வரும் ஜூன் 30ம் தேதி வரை சென்னையில் முழு ஊரடங்கு அமலில் இருக்கும். தற்போது ஊரடங்கு அமலில் உள்ளதால், சென்னையில் அத்தியாவசிய பணிகளில் ஈடுபடும் அவசர கால வாகனங்களை இயக்குவதற்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இ-பாஸ் இல்லாமல் சென்னையை விட்டு வெளியேற செம ட்ரிக்ஸ்... இளைஞர் செய்த காரியத்தால் ஆடிப்போன போலீஸ்...

பால், காய்கறி, மளிகை சாமான்கள் போன்ற அத்தியாவசிய பொருட்களை வாங்க செல்வதாக இருந்தால், வாகனங்களை பயன்படுத்த வேண்டாம் எனவும், அதற்கு பதிலாக நடந்து செல்ல வேண்டும் எனவும் மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் மக்களோ சென்னையை விட்டு எப்படியாவது வெளியேறுவதற்கு முயற்சி செய்து வருகின்றனர்.

இ-பாஸ் இல்லாமல் சென்னையை விட்டு வெளியேற செம ட்ரிக்ஸ்... இளைஞர் செய்த காரியத்தால் ஆடிப்போன போலீஸ்...

கொரோனா வைரஸ் தொற்றி விடுமோ? என்ற அச்சமே இதற்கு முக்கியமான காரணமாக இருக்கிறது. மேலும் வருமானம் இழந்துள்ளதால், சென்னையில் இருந்து கொண்டு செலவுகளை சமாளிக்க முடியவில்லை எனவும், சொந்த ஊர் செல்வதே சிறந்ததாக இருக்கும் எனவும் மக்கள் தெரிவித்து வருகின்றனர். ஆனால் போக்குவரத்து முழுமையாக முடக்கப்பட்டுள்ளதால், அவர்கள் வெளியேற முடியவில்லை.

இ-பாஸ் இல்லாமல் சென்னையை விட்டு வெளியேற செம ட்ரிக்ஸ்... இளைஞர் செய்த காரியத்தால் ஆடிப்போன போலீஸ்...

இ-பாஸ் பெற்று கொண்டு சொந்த வாகனங்களில் பயணம் செய்யலாம் என்றாலும் கூட, பலருக்கு அனுமதி கிடைப்பதில்லை. இந்த வகையில் சென்னை திருவேற்காடு பகுதியை சேர்ந்த ஒரு முதியவர், 3 பெண்கள் உள்பட 6 பேருக்கும் அனுமதி மறுக்கப்பட்டது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சிதான் அவர்களின் சொந்த ஊர்.

இ-பாஸ் இல்லாமல் சென்னையை விட்டு வெளியேற செம ட்ரிக்ஸ்... இளைஞர் செய்த காரியத்தால் ஆடிப்போன போலீஸ்...

இதனால் 6 பேரும் செஞ்சி செல்ல இ-பாஸ் கேட்டனர். எனினும் அவர்களின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. இப்படிப்பட்ட சூழலில், சென்னை கீழ்ப்பாக்கம் பகுதியை சேர்ந்த மணிவண்ணன் என்பவர் பற்றிய தகவல் அவர்களுக்கு தெரியவந்தது. 25 வயதாகும் மணிவண்ணன், தற்போது தனியார் ஆம்புலன்ஸ் டிரைவராக வேலை செய்து வருகிறார்.

இ-பாஸ் இல்லாமல் சென்னையை விட்டு வெளியேற செம ட்ரிக்ஸ்... இளைஞர் செய்த காரியத்தால் ஆடிப்போன போலீஸ்...

இவர் பொதுமக்களிடம் பணம் பெற்று கொண்டு, அவர்களை ஆம்புலன்ஸில் ஏற்றி சொந்த ஊருக்கு அழைத்து செல்லும் வேலையை தொடர்ச்சியாக செய்து வந்ததாக கூறப்படுகிறது. எனவே மணிவண்ணன் மூலமாக ஆம்புலன்ஸில் செஞ்சி சென்று விடலாம் என அவர்கள் 6 பேரும் திட்டமிட்டனர். இதற்காக மணிவண்ணன் கேட்ட பணத்தை கொடுக்கவும் அவர்கள் முடிவு செய்தனர்.

இ-பாஸ் இல்லாமல் சென்னையை விட்டு வெளியேற செம ட்ரிக்ஸ்... இளைஞர் செய்த காரியத்தால் ஆடிப்போன போலீஸ்...

இதன்படி கடந்த ஒரு சில நாட்களுக்கு முன்னர், அவர்கள் 6 பேரும் செஞ்சிக்கு புறப்பட்டனர். அந்த தனியார் ஆம்புலன்ஸை மணிவண்ணன் ஓட்டி சென்றார். போலீசார் நிறுத்தக்கூடாது என்பதற்காக, மணிவண்ணன் சைரனையும் 'ஆன்' செய்து விட்டார். ஆனால் வழியில் பரனூர் டோல்கேட் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போலீசார் சந்தேகத்தின் பேரில் ஆம்புலன்ஸை சோதனையிட்டனர்.

இ-பாஸ் இல்லாமல் சென்னையை விட்டு வெளியேற செம ட்ரிக்ஸ்... இளைஞர் செய்த காரியத்தால் ஆடிப்போன போலீஸ்...

அப்போது ஆம்புலன்ஸ் வாகனத்தில் 6 பேர் இருந்ததை போலீசார் கண்டறிந்தனர். இதுகுறித்து அவர்களிடம் கேட்டபோது, செஞ்சியில் உள்ள மருத்துவமனைக்கு அவசரமாக சென்று கொண்டிருப்பதாக கூறியுள்ளனர். ஆனால் இ-பாஸ் உள்பட எவ்வித ஆதாரமும் அவர்களிடம் இல்லை. இதன் காரணமாக போலீசாருக்கு சந்தேகம் வலுத்துள்ளது.

இ-பாஸ் இல்லாமல் சென்னையை விட்டு வெளியேற செம ட்ரிக்ஸ்... இளைஞர் செய்த காரியத்தால் ஆடிப்போன போலீஸ்...

இதன்பின் ஆம்புலன்ஸ் டிரைவர் மணிவண்ணனிடம் காவல் துறையினர் விசாரணையை கடுமையாக்கினர். அப்போது நடந்த சம்பவங்களை அவர் ஒப்பு கொண்டதாக கூறப்படுகிறது. இதன்பேரில் மணிவண்ணனை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அத்துடன் ஆம்புலன்ஸ் வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக தினகரன் செய்தி வெளியிட்டுள்ளது.

இ-பாஸ் இல்லாமல் சென்னையை விட்டு வெளியேற செம ட்ரிக்ஸ்... இளைஞர் செய்த காரியத்தால் ஆடிப்போன போலீஸ்...

முதலில் சென்னையில்தான் அதிக அளவு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டு வந்தது. ஆனால் சென்னையை தவிர்த்து பிற மாவட்டங்களிலும் தற்போது அதிகளவு தொற்று கண்டறியப்பட்டு வருகிறது. சென்னையில் இருந்து தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்லும் நபர்கள் இதற்கு முக்கிய காரணமாக இருக்கலாம் என கருதப்படுகிறது.

இ-பாஸ் இல்லாமல் சென்னையை விட்டு வெளியேற செம ட்ரிக்ஸ்... இளைஞர் செய்த காரியத்தால் ஆடிப்போன போலீஸ்...

இதனால்தான் சென்னையில் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. போலீசாரும் இரவு, பகல் பாராமல் தங்கள் உயிரை பணயம் வைத்து பணியாற்றி வருகின்றனர். அப்படி இருக்கையில் ஆம்புலன்ஸ் மூலம் மக்கள் சொந்த ஊர் செல்ல முயன்ற சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Covid-19 Lockdown: Chennai Ambulance Driver Arrested For Transporting People Without E-Pass. Read in Tamil
Story first published: Saturday, June 27, 2020, 18:48 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X