சூப்பர் சிஎம்... நச்சுனு ஒரு காரியத்தை செய்த கெஜ்ரிவால்... முதல்வன் படம் பாக்கற மாதிரியே ஒரு பீலிங்

கொரோனா வைரஸ் ஊரடங்கு உத்தரவு காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு அரவிந்த் கெஜ்ரிவால் செய்து வரும் உதவிகள் கவனம் ஈர்த்துள்ளன.

சூப்பர் சிஎம்... நச்சுனு ஒரு காரியத்தை செய்த கெஜ்ரிவால்... முதல்வன் படம் பாக்கற மாதிரியே ஒரு பீலிங்

உலகையே அச்சுறுத்தி வரும் கோவிட்-19 வைரஸ், உயிர்களை பறிப்பதுடன் சேர்த்து, பொருளாதாரத்தையும் மிக கடுமையாக சீர்குலைத்துள்ளது. உலகின் பல்வேறு நாடுகளில் தற்போது ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கிறது. எனவே மக்கள் வேலைக்கு செல்லாமல் வீடுகளுக்கு உள்ளேயே முடங்கி கிடக்கின்றனர். வருமானத்திற்கு வழி இல்லாததால் அவர்கள் விழி பிதுங்கி நிற்கின்றனர்.

சூப்பர் சிஎம்... நச்சுனு ஒரு காரியத்தை செய்த கெஜ்ரிவால்... முதல்வன் படம் பாக்கற மாதிரியே ஒரு பீலிங்

இந்திய மக்களும் இதற்கு விதி விலக்கு அல்ல. இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக, 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு தற்போது கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக பஸ், ரயில் மற்றும் விமானம் போன்ற பொது போக்குவரத்து சேவைகள் அனைத்தும் முடக்கப்பட்டுள்ளன. அத்துடன் ஆட்டோ, டாக்ஸி மற்றும் எலெக்ட்ரிக் ரிக்ஸா போன்ற வாகனங்களும் இயக்கப்படுவதில்லை.

சூப்பர் சிஎம்... நச்சுனு ஒரு காரியத்தை செய்த கெஜ்ரிவால்... முதல்வன் படம் பாக்கற மாதிரியே ஒரு பீலிங்

ஊரடங்கு உத்தரவு காரணமாக அத்தியாவசியம் இல்லாத பணிகளுக்கு மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர கூடாது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே பெரும்பாலானோர் வீடுகளில் இருந்து வெளியே வருவதில்லை. மேலும் பொது போக்குவரத்து வாகனங்களும் இயக்கப்படாததால், எப்போதும் பரபரப்பாக காணப்படும் முக்கிய சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.

சூப்பர் சிஎம்... நச்சுனு ஒரு காரியத்தை செய்த கெஜ்ரிவால்... முதல்வன் படம் பாக்கற மாதிரியே ஒரு பீலிங்

ஊரடங்கு உத்தரவு எதிரொலியால், ஆட்டோ, டாக்ஸி மற்றும் எலெக்ட்ரிக் ரிக்ஸா போன்ற வாகனங்களின் டிரைவர்களும் வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர். இந்த வாகனங்களின் டிரைவர்களில் பெரும்பாலானோர் தினசரி கிடைக்கும் வருமானம் மூலம், குடும்பத்தை நடத்துபவர்கள் என்பதால், அவர்களின் நிலைமை மோசமாகியுள்ளது.

சூப்பர் சிஎம்... நச்சுனு ஒரு காரியத்தை செய்த கெஜ்ரிவால்... முதல்வன் படம் பாக்கற மாதிரியே ஒரு பீலிங்

இந்த சூழலில், அவர்களுக்கு உதவி செய்ய டெல்லி அரசு முன்வந்துள்ளது. ஊரடங்கு காரணமாக வீடுகளில் முடங்கியிருக்கும் பொதுமக்களுக்கு தேவையான உதவிகளை, மத்திய அரசும் மற்றும் அனைத்து மாநில அரசுகளும் செய்து வருகின்றன. இந்த வரிசையில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பல்வேறு அறிவிப்புகளை தொடர்ச்சியாக வெளியிட்டு வருகிறார்.

சூப்பர் சிஎம்... நச்சுனு ஒரு காரியத்தை செய்த கெஜ்ரிவால்... முதல்வன் படம் பாக்கற மாதிரியே ஒரு பீலிங்

டெல்லி அரசு ஏற்கனவே 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கட்டுமான தொழிலாளர்களுக்கு, ஒவ்வொருவருக்கும் 5 ஆயிரம் ரூபாய் நிதியுதவியை வழங்கியுள்ளது. இதன் நீட்சியாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், நேற்று (ஏப்ரல் 2) வெளியிட்ட ஒரு அறிவிப்பும் கவனம் ஈர்த்துள்ளது. இதன்படி ஆட்டோ, டாக்ஸி மற்றும் எலெக்ட்ரிக் ரிக்ஸா டிரைவர்களுக்கு 5 ஆயிரம் ரூபாயை டெல்லி அரசு வழங்கவுள்ளது.

சூப்பர் சிஎம்... நச்சுனு ஒரு காரியத்தை செய்த கெஜ்ரிவால்... முதல்வன் படம் பாக்கற மாதிரியே ஒரு பீலிங்

ஊரடங்கு உத்தரவு காரணமாக ஓடாமல் நிறுத்தப்பட்டுள்ள ஆட்டோ, டாக்ஸி மற்றும் எலெக்ட்ரிக் ரிக்ஸாக்கள் உள்ளிட்ட பொது போக்குவரத்து வாகனங்களின் டிரைவர்கள் ஒவ்வொருவருக்கும் 5 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். இதனால் இந்த வாகனங்களின் டிரைவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

சூப்பர் சிஎம்... நச்சுனு ஒரு காரியத்தை செய்த கெஜ்ரிவால்... முதல்வன் படம் பாக்கற மாதிரியே ஒரு பீலிங்

மக்கள் யாரும் பட்டினியை எதிர்கொள்ள கூடாது எனவும், அதை நான் உறுதி செய்வேன் எனவும் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார். அதே நேரத்தில் ஆட்டோ, டாக்ஸி மற்றும் எலெக்ட்ரிக் ரிக்ஸா போன்ற பொது போக்குவரத்து வாகனங்களின் டிரைவர்களுக்கான உதவி தொகையானது, அடுத்த 7-10 நாட்களுக்குள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சூப்பர் சிஎம்... நச்சுனு ஒரு காரியத்தை செய்த கெஜ்ரிவால்... முதல்வன் படம் பாக்கற மாதிரியே ஒரு பீலிங்

பொது போக்குவரத்து வாகனங்கள் இயங்காத காரணத்தால், பரபரப்பான இந்திய சாலைகள் வெறிச்சோடி கிடக்கின்றன. இதை பயன்படுத்தி கொண்டு, கார் மற்றும் பைக் உள்ளிட்ட வாகனங்களில் ஒரு சிலர் ஜாலி ரைடு சென்று வருகின்றனர். இப்படி வெறிச்சோடிய சாலைகளில் வாகனங்களை இயக்கும் வாய்ப்பு இனி கிட்டாது என அவர்கள் கூறுகின்றனர்.

சூப்பர் சிஎம்... நச்சுனு ஒரு காரியத்தை செய்த கெஜ்ரிவால்... முதல்வன் படம் பாக்கற மாதிரியே ஒரு பீலிங்

கோவிட்-19 வைரஸின் தீவிரத்தை அவர்கள் இன்னும் புரிந்து கொள்ளவில்லை என்பது இதன்மூலம் தெரிகிறது. எனவே இப்படி தேவை இல்லாமல் ஊர் சுற்றும் வாகன ஓட்டிகள் மீது காவல் துறை தீவிர நடவடிக்கைகளை எடுக்க தொடங்கியுள்ளது. அபராதம் விதிப்பது, வழக்கு பதிவு செய்வது, வாகனங்களை பறிமுதல் செய்வது போன்ற அதிரடியான நடவடிக்கைகளை காவல் துறையினர் எடுத்து வருகின்றனர்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Covid-19 Lockdown: Delhi Government To Give Rs 5,000 To Auto, Taxi Drivers - Arvind Kejriwal. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X