பரிட்சையில் பெயில் ஆன மகனை அமர வைத்து கொண்டு 105 கிமீ சைக்கிள் பயணம் செய்த தந்தை... ஏன் தெரியுமா?

தேர்வில் தோல்வியடைந்த மகனை அமர வைத்து கொண்டு, தந்தை 105 கிலோ மீட்டர் சைக்கிள் பயணம் செய்த நிகழ்வு நடைபெற்றுள்ளது.

பரிட்சையில் பெயில் ஆன மகனை அமர வைத்து கொண்டு 105 கிமீ சைக்கிள் பயணம் செய்த தந்தை... ஏன் தெரியுமா?

கொரோனா வைரஸ் (கோவிட்-19) பரவலை கட்டுப்படுத்துவதற்காக, இந்தியாவில் கடந்த மார்ச் 24ம் தேதியில் இருந்து ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. எனவே அன்றைய தினம் முதல் ஆட்டோ, டாக்ஸி மற்றும் பேருந்து உள்ளிட்ட பொது போக்குவரத்து சேவைகள் ரத்து செய்யப்பட்டன. தனியார் கார், இரு சக்கர வாகனங்களை இயக்குவதற்கும் கடுமையான கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டன.

பரிட்சையில் பெயில் ஆன மகனை அமர வைத்து கொண்டு 105 கிமீ சைக்கிள் பயணம் செய்த தந்தை... ஏன் தெரியுமா?

இந்த எச்சரிக்கையை மீறி இயக்கப்பட்ட வாகனங்களை, காவல் துறையினர் அதிரடியாக பறிமுதல் செய்தது மட்டுமின்றி, அபராதமும் விதித்தனர். ஆனால் தற்போது ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்டு விட்டன. இதன் ஒரு பகுதியாக தனியார் கார் மற்றும் இரு சக்கர வாகனங்களை இயக்குவதற்கு விதிக்கப்பட்டிருந்த நிபந்தனைகள் தளர்த்தி கொள்ளப்பட்டுள்ளன.

பரிட்சையில் பெயில் ஆன மகனை அமர வைத்து கொண்டு 105 கிமீ சைக்கிள் பயணம் செய்த தந்தை... ஏன் தெரியுமா?

அத்துடன் ஆட்டோ, டாக்ஸி, பேருந்துகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இந்தியாவின் ஒரு சில பகுதிகளில் மட்டுமே பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அதுவும் குறைவான எண்ணிக்கையில்தான் பேருந்துகள் ஓடுகின்றன. எனவே பயணங்களை மேற்கொள்வதில் மக்கள் இன்னும் இயல்பு நிலையை உணரவில்லை.

பரிட்சையில் பெயில் ஆன மகனை அமர வைத்து கொண்டு 105 கிமீ சைக்கிள் பயணம் செய்த தந்தை... ஏன் தெரியுமா?

பொது போக்குவரத்து சீராக இல்லாத காரணத்தால், அவசர தேவைகளுக்கு கூட பயணங்களை மேற்கொள்ள முடியாமல் கடும் சிரமங்களை மக்கள் எதிர்கொண்டு வருகின்றனர். இதில், ஒரு சிலர் சைக்கிளில் பல நூறு கிலோ மீட்டர் பயணம் செய்து, தங்கள் தேவைகளை பூர்த்தி செய்து கொள்கின்றனர். இந்த வரிசையில் தந்தை ஒருவர் மகனுடன் சுமார் 105 கிலோ மீட்டர் சைக்கிளில் பயணம் செய்துள்ளார்.

பரிட்சையில் பெயில் ஆன மகனை அமர வைத்து கொண்டு 105 கிமீ சைக்கிள் பயணம் செய்த தந்தை... ஏன் தெரியுமா?

இதற்கான காரணம் இந்திய மக்கள் அனைவரையும் நெகிழ வைத்துள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் சோப்ராம். 38 வயதாகும் சோப்ராமிற்கு, ஆஷிஷ் என்ற மகன் உள்ளார். ஆஷிசுக்கு 15 வயது ஆகிறது. 10ம் வகுப்பு தேர்வை எழுதிய ஆஷிஷ் முதல் முயற்சியில் தோல்வியடைந்து விட்டதாக கூறப்படுகிறது.

பரிட்சையில் பெயில் ஆன மகனை அமர வைத்து கொண்டு 105 கிமீ சைக்கிள் பயணம் செய்த தந்தை... ஏன் தெரியுமா?

இருந்தாலும் முதல் முயற்சியில் தேர்ச்சி பெற முடியாதவர்கள், தோல்வியடைந்த பாடங்களை மீண்டும் எழுத துணை தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த துணை தேர்வை ஆஷிஷ் எழுதுவதற்காகதான் சோப்ராம் சுமார் 105 கிலோ மீட்டர் சைக்கிள் ஓட்டியுள்ளார். மகன் தேர்வை தவற விட்டு விடக்கூடாது என்பதற்காக, அவரை சைக்கிளில் அமர வைத்து கொண்டு, சிரமப்பட்டு பயணம் செய்துள்ளார் சோப்ராம்.

பரிட்சையில் பெயில் ஆன மகனை அமர வைத்து கொண்டு 105 கிமீ சைக்கிள் பயணம் செய்த தந்தை... ஏன் தெரியுமா?

சைக்கிளை கஷ்டப்பட்டு ஓட்டிய சோப்ராம் படிப்பறிவு இல்லாதவர் என கூறப்படுகிறது. இருந்தாலும் கல்வி எவ்வளவு முக்கியமானது? என்பதை புரிந்து வைத்துள்ளேன் எனவும், இந்த தேர்வை தவற விட்டால், எனது மகனின் வாழ்க்கையில் ஒரு வருடம் வீணாகி விடும் எனவும் சோப்ராம் கூறியுள்ளார். இந்த சம்பவம் அனைவரது மனதையும் நெகிழ வைத்துள்ளது.

பரிட்சையில் பெயில் ஆன மகனை அமர வைத்து கொண்டு 105 கிமீ சைக்கிள் பயணம் செய்த தந்தை... ஏன் தெரியுமா?

பொது போக்குவரத்து இல்லாததால்தான் சோப்ராம் தனது மகனை சைக்கிள் மூலம் அழைத்து சென்றுள்ளார். வாடகைக்கு கார் எடுத்து செல்வதற்கு அவரிடம் பணமும் இல்லை. இப்படிப்பட்ட இக்கட்டான சூழலிலும் கூட, மகனின் கல்வியில் அக்கறை காட்டிய சோப்ராமின் குணம் பாராட்டுக்குரியது. மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள தார் நகரில் தேர்வு நடைபெற்றுள்ளது.

பரிட்சையில் பெயில் ஆன மகனை அமர வைத்து கொண்டு 105 கிமீ சைக்கிள் பயணம் செய்த தந்தை... ஏன் தெரியுமா?

சோப்ராமின் ஊரில் இருந்து தார் நகரம் சுமார் 105 கிலோ மீட்டர்கள் தொலைவில் அமைந்துள்ளது. இவ்வளவு தூரம் சைக்கிள் ஓட்ட வேண்டுமென்றால், உடல் வலிமையுடன், மன வலிமையும் அவசியம். இது தொடர்பாக சோப்ராம் கூறுகையில், ''கொரோனா வைரஸ் சூழ்நிலை காரணமாக பேருந்து உள்ளிட்ட போக்குவரத்து வசதிகள் எதுவும் இல்லை. ஆனால் நான் சிரமம் பார்த்தால், என் மகனுக்கு ஒரு வருடம் வீணாகி விடும்.

பரிட்சையில் பெயில் ஆன மகனை அமர வைத்து கொண்டு 105 கிமீ சைக்கிள் பயணம் செய்த தந்தை... ஏன் தெரியுமா?

எனவேதான் எனது மகனை சைக்கிளில் தேர்வுக்கு அழைத்து சென்று விடுவது என முடிவு செய்தேன். மேலும் எங்களிடம் பணமோ அல்லது மோட்டார்சைக்கிளோ கூட இல்லை. எங்களுக்கு யாரும் உதவியும் செய்ய முன்வரவில்லை. ஆனால் எனது மகனின் வாழ்க்கையை முன்னேற்ற வேண்டுமென்றால், அவரை நான் தேர்வுக்கு கட்டாயம் அழைத்து சென்றே ஆக வேண்டும்.

பரிட்சையில் பெயில் ஆன மகனை அமர வைத்து கொண்டு 105 கிமீ சைக்கிள் பயணம் செய்த தந்தை... ஏன் தெரியுமா?

இதன் காரணமாகதான் சைக்கிளில் பயணம் செய்தேன். 2-3 நாட்களுக்கு தேவையான உணவை நாங்கள் கொண்டு சென்றோம். எங்கள் பயணத்தை கடந்த திங்கள் கிழமை தொடங்கினோம். அன்றைய தினம் இரவில், மனேவர் நகரில் சிறிது நேரம் தங்கினோம். இறுதியாக செவ்வாய் கிழமை காலை தார் நகரை சென்றடைந்தோம்.

தேர்வு தொடங்குவதற்கு கொஞ்ச நேரத்திற்கு முன்பாகதான் எங்களால், அங்கு செல்ல முடிந்தது'' என்றார். மகனின் எதிர்காலத்தை மனதில் வைத்து, சிரமம் பார்க்காமல், 105 கிலோ மீட்டர்கள் சைக்கிள் ஓட்டிய சோப்ராமிற்கு தற்போது சமூக வலை தளங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Covid-19 Lockdown: Father Cycles 105 Km For Son's 10th Supplementary Exam In Madhya Pradesh. Read in Tamil
Story first published: Thursday, August 20, 2020, 15:06 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X