சூப்பர்... நோயாளிகள் மருத்துவமனை செல்வதற்கு இலவச கேப் வசதி... பஸ்கள் இல்லாததால் அதிரடி அறிவிப்பு...

நோயாளிகள் மருத்துவமனை செல்வதற்கு இலவச கேப் வசதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

சூப்பர்... நோயாளிகள் மருத்துவமனை செல்வதற்கு இலவச கேப் வசதி... பஸ்கள் இல்லாததால் அதிரடி அறிவிப்பு...

கொரோனா வகையை சேர்ந்த கோவிட்-19 வைரஸ் மனித குலத்திற்கே பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. கோவிட்-19 வைரஸ் பரவலை தடுக்க முடியாமல் உலக நாடுகள் திணறி வருகின்றன. கோவிட்-19 வைரஸால் பாதிக்கப்படுபவர்கள் மற்றும் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது.

சூப்பர்... நோயாளிகள் மருத்துவமனை செல்வதற்கு இலவச கேப் வசதி... பஸ்கள் இல்லாததால் அதிரடி அறிவிப்பு...

இந்தியாவிலும் தற்போது கோவிட்-19 வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதை தடுப்பதற்காக வரும் மே 3ம் தேதி வரை இந்தியாவில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே பேருந்து, ரயில் சேவைகள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன. டாக்ஸி, ஆட்டோக்களும் இயக்கப்படுவதில்லை. தேவையில்லாமல் மக்கள் வெளியே வர வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

சூப்பர்... நோயாளிகள் மருத்துவமனை செல்வதற்கு இலவச கேப் வசதி... பஸ்கள் இல்லாததால் அதிரடி அறிவிப்பு...

எனினும் மருத்துவமனைகளுக்கு சிகிச்சை பெற செல்வது உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகள் இருந்தால், சிறப்பு அனுமதி பெற்று மக்கள் பயணங்களை மேற்கொள்ளலாம். ஆனால் மருத்துவமனைகளுக்கு செல்ல வேண்டிய நோயாளிகள், சிறப்பு அனுமதிக்கான பாஸை பெறுவதில் சிரமங்களை எதிர்கொள்வதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

சூப்பர்... நோயாளிகள் மருத்துவமனை செல்வதற்கு இலவச கேப் வசதி... பஸ்கள் இல்லாததால் அதிரடி அறிவிப்பு...

குறிப்பாக நொய்டா-டெல்லி எல்லையை கடப்பதற்கான ஸ்பெஷல் பாஸை பெறுவதில் சிரமங்கள் உள்ளதாக நோயாளிகள் தெரிவித்தனர். கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக, நொய்டா-டெல்லி எல்லை சீல் வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. நோயாளிகள் தெரிவித்த புகாரையடுத்து, உத்தர பிரதேச மாநிலம் கௌதம புத்தா நகர் மாவட்ட நிர்வாகம் சிறப்பு ஏற்பாடு ஒன்றை செய்துள்ளது.

சூப்பர்... நோயாளிகள் மருத்துவமனை செல்வதற்கு இலவச கேப் வசதி... பஸ்கள் இல்லாததால் அதிரடி அறிவிப்பு...

இதன்படி நொய்டாவில் இருந்து டெல்லி செல்ல, நான்-எமர்ஜென்ஸி நோயாளிகளுக்காக, இலவச கேப் சேவை அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக அமலுக்கு கொண்டு வரப்பட்டுள்ள ஊரடங்கிற்கு மத்தியில், டயாலிசிஸ் மற்றும் கேன்சர் சிகிச்சை போன்ற காரணங்களுக்காக டெல்லி சென்றாக வேண்டியவர்களுக்காக இந்த இலவச கேப் சேவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சூப்பர்... நோயாளிகள் மருத்துவமனை செல்வதற்கு இலவச கேப் வசதி... பஸ்கள் இல்லாததால் அதிரடி அறிவிப்பு...

இதற்காக உபர் நிறுவனத்துடன் கௌதம புத்தா நகர் மாவட்ட நிர்வாகம் தற்போது கூட்டணி அமைத்துள்ளது. இந்த சேவையை பெறுவதற்கான ஹெல்ப்லைன் எண்ணும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி 18004192211 என்ற எண்ணை தொடர்பு கொண்டு நோயாளிகள் இந்த சிறப்பு சேவையை பெறலாம். இந்த சேவையை பெறுவதற்கு நோயாளிகளுக்கு சில அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

சூப்பர்... நோயாளிகள் மருத்துவமனை செல்வதற்கு இலவச கேப் வசதி... பஸ்கள் இல்லாததால் அதிரடி அறிவிப்பு...

இதுகுறித்து கௌதம புத்தா நகர் மாவட்ட அதிகாரிகள் கூறுகையில், ''இந்த சேவையை பெற விரும்பினால், மருந்து சீட்டு மற்றும் சிகிச்சைக்கான ஆதாரம் போன்ற ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். அத்துடன் சேவையை பெறுவதற்கு ஒரு நாள் முன்னதாகவே விண்ணப்பிக்குபடி நோயாளிகளை கேட்டு கொண்டுள்ளோம்.

சூப்பர்... நோயாளிகள் மருத்துவமனை செல்வதற்கு இலவச கேப் வசதி... பஸ்கள் இல்லாததால் அதிரடி அறிவிப்பு...

இதன் மூலம் தேவையற்ற குழப்பங்களையும், சிரமங்களையும் தவிர்க்கலாம்'' என்றனர். அதே சமயம் இந்த சேவை, நான்-எமர்ஜென்ஸி நோயாளிகளுக்கானது மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. அவசரம் இருந்தால், மக்கள் வழக்கம் போல ஆம்புலன்ஸ் சேவைகளை பெற்று கொள்ளலாம். கௌதம புத்தா நகர் மாவட்ட நிர்வாகத்தின் இந்த நடவடிக்கை நோயாளிகளுக்கு பலன் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சூப்பர்... நோயாளிகள் மருத்துவமனை செல்வதற்கு இலவச கேப் வசதி... பஸ்கள் இல்லாததால் அதிரடி அறிவிப்பு...

நொய்டா மற்றும் டெல்லிக்கு இடையே மக்கள் பயணம் செய்வதற்கு, கௌதம புத்தா நகர் மாவட்ட நிர்வாகம் அதிரடியாக தடை விதித்திருப்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் பத்திரிக்கையாளர்கள், மருத்துவர்கள் மற்றும் கோவிட்-19 தொடர்பான அத்தியாவசிய பணிகளில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

சூப்பர்... நோயாளிகள் மருத்துவமனை செல்வதற்கு இலவச கேப் வசதி... பஸ்கள் இல்லாததால் அதிரடி அறிவிப்பு...

அதேபோல் சரக்கு போக்குவரத்திற்கும் விலக்கு வழங்கப்பட்டிருக்கிறது. கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே கொரோனா வைரஸால் மிக கடுமையாக பாதிக்கப்பட்ட இடங்களில் ஒன்றாக தலைநகர் டெல்லி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Note: Images used are for representational purpose only.

More from DriveSpark

Article Published On: Tuesday, April 28, 2020, 21:30 [IST]
English summary
Covid-19 Lockdown: Free Taxi Service From Noida To Delhi For Non-emergency Patients Announced. Read in Tamil
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+