கொரோனா ஊரடங்கால் இப்படி ஒரு முடிவு... கையில் குழந்தையை வைத்து கொண்டு ரிஸ்க் எடுத்த பெற்றோர்...

கொரோனா ஊரடங்கு காரணமாக, கையில் குழந்தையை வைத்து கொண்டு பெற்றோர் ரிஸ்க் எடுத்துள்ளனர். இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

கொரோனா ஊரடங்கால் இப்படி ஒரு முடிவு... கையில் குழந்தையை வைத்து கொண்டு ரிஸ்க் எடுத்த பெற்றோர்...

கொரோனா வைரஸ் (கோவிட்-19) தற்போது உலகையே ஆட்டி படைத்து வருகிறது. சீனாவில் இருந்து பரவ தொடங்கியதாக கருதப்படும் கோவிட்-19 வைரஸ் தற்போது உலகம் முழுவதும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகள்தான் மிக கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளன.

கொரோனா ஊரடங்கால் இப்படி ஒரு முடிவு... கையில் குழந்தையை வைத்து கொண்டு ரிஸ்க் எடுத்த பெற்றோர்...

கோவிட்-19 வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக உலகின் பல்வேறு நாடுகளிலும் தற்போது ஊரடங்கு உத்தரவு அமலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதனால் தொழில்கள் முடங்கி பொருளாதாரம் பாதிப்படைந்துள்ளது. இந்தியாவும் இதற்கு விதி விலக்கு அல்ல. இந்தியாவில் முதலில் கடந்த ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

கொரோனா ஊரடங்கால் இப்படி ஒரு முடிவு... கையில் குழந்தையை வைத்து கொண்டு ரிஸ்க் எடுத்த பெற்றோர்...

இதற்கான அறிவிப்பு கடந்த மார்ச் 23ம் தேதி இரவு வெளியாகி, 24ம் தேதி முதல் அமலுக்கு வந்தது. இது அதிக நாட்கள் என்பதால், வெளியூர்கள், வெளிமாநிலங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள் பலர் அப்போதே தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்ப தொடங்கினர். ஆனால் ஒரு சிலர் தாங்கள் இருக்கும் இடத்திலேயே அப்படியே நாட்களை நகர்த்த ஆரம்பித்தனர்.

கொரோனா ஊரடங்கால் இப்படி ஒரு முடிவு... கையில் குழந்தையை வைத்து கொண்டு ரிஸ்க் எடுத்த பெற்றோர்...

ஆனால் ஊரடங்கு காரணமாக அவர்களில் பலர் வேலையை இழக்க நேரிட்டது. மேலும் உணவும் கிடைக்காத காரணத்தால், அவர்களும் தங்கள் சொந்த ஊர்களை நோக்கி படையெடுக்க ஆரம்பித்தனர். ஆனால் அந்த சமயத்தில், பஸ், ரயில் சேவைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு விட்டதால், ஒரு சிலர் நடந்தே சொந்த ஊருக்கு பயணிக்க ஆரம்பித்தனர்.

கொரோனா ஊரடங்கால் இப்படி ஒரு முடிவு... கையில் குழந்தையை வைத்து கொண்டு ரிஸ்க் எடுத்த பெற்றோர்...

மூட்டை, முடிச்சுகளை கட்டி கொண்டு நடந்தே பல நூறு கிலோ மீட்டர்கள் பயணம் செய்யும் தொழிலாளர்கள் பற்றிய செய்திகள் வெளியாகி கவலையை ஏற்படுத்தின. இன்னும் சிலரோ சைக்கிளில் நூற்றுக்கணக்கான கிலோ மீட்டர்கள் பயணிக்க ஆரம்பித்தனர். இந்த வகையில் மும்பையில் இருந்து ஒடிசா மாநிலத்தில் உள்ள தனது சொந்த ஊருக்கு சைக்கிளில் பயணித்த இளைஞர் பற்றிய செய்தியை நாம் வெளியிட்டிருந்தோம்.

கொரோனா ஊரடங்கால் இப்படி ஒரு முடிவு... கையில் குழந்தையை வைத்து கொண்டு ரிஸ்க் எடுத்த பெற்றோர்...

சைக்கிளில் அவர் பயணம் செய்த தொலைவு 1,800 கிலோ மீட்டர்களுக்கும் அதிகம். போக்குவரத்து வசதிகள் இல்லாத காரணத்தால், தொழிலாளர்கள் இவ்வாறு சிரமப்பட்டு சொந்த ஊர்களுக்கு சென்று வருகின்றனர். இந்த சூழலில் தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்புவது தற்போது அதிகரித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கொரோனா ஊரடங்கால் இப்படி ஒரு முடிவு... கையில் குழந்தையை வைத்து கொண்டு ரிஸ்க் எடுத்த பெற்றோர்...

கடந்த ஏப்ரல் 14ம் தேதியுடன் இந்தியாவில் ஊரடங்கு தளர்த்தி கொள்ளப்படவில்லை. அதற்கு பதிலாக வரும் மே 3ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாகதான் தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்புவது அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. ஆனால் இன்னமும் பஸ் மற்றும் ரயில் போக்குவரத்து தொடங்கப்படவில்லை.

கொரோனா ஊரடங்கால் இப்படி ஒரு முடிவு... கையில் குழந்தையை வைத்து கொண்டு ரிஸ்க் எடுத்த பெற்றோர்...

எனவே சைக்கிளில் தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்பி வருகின்றனர். இந்த வகையில் மஹாராஷ்டிராவில் இருந்து தொழிலாளர்கள் சிலர் தங்கள் சொந்த மாநிலமான மத்திய பிரதேசத்துக்கு சைக்கிளில் பயணத்தை தொடங்கியுள்ளனர். மஹாராஷ்டிர மாநிலம் நாசிக் நகரில் இருந்து பயணத்தை தொடங்கியுள்ள மத்திய பிரதேச தொழிலாளர்கள் சிலர் இதுகுறித்து கூறுகையில், ''பயணத்தை தொடங்கி 5 நாட்கள் ஆகிறது.

கொரோனா ஊரடங்கால் இப்படி ஒரு முடிவு... கையில் குழந்தையை வைத்து கொண்டு ரிஸ்க் எடுத்த பெற்றோர்...

எங்கள் சொந்த ஊருக்கு சென்று சேர்வதற்கு இன்னும் தோராயமாக 6 நாட்கள் வரை ஆகலாம். கடந்த ஏப்ரல் 14ம் தேதியுடன் ஊரடங்கு முடிவுக்கு வரும் என எதிர்பார்த்தோம். மேலும் எங்கள் ஊருக்கு செல்ல பேருந்து வசதிகள் தொடங்கப்படும் எனவும் நினைத்து கொண்டிருந்தோம். ஆனால் அது நடக்கவில்லை. எனவே சைக்கிளிலேயே பயணத்தை தொடங்கியுள்ளோம்'' என்றனர்.

கொரோனா ஊரடங்கால் இப்படி ஒரு முடிவு... கையில் குழந்தையை வைத்து கொண்டு ரிஸ்க் எடுத்த பெற்றோர்...

இதேபோன்று மஹாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் இருந்தும் தொழிலாளர்கள் சிலர் மத்திய பிரதேச மாநிலம் நோக்கி சென்று கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அப்படி பயணம் செய்யும் ஒரு பெண் இதுகுறித்து கூறுகையில், ''நான், எனது கணவர் மற்றும் எங்களது ஒரு வயது குழந்தை என மூன்று பேர் சைக்கிளில் பயணத்தை ஆரம்பித்துள்ளோம்.

கொரோனா ஊரடங்கால் இப்படி ஒரு முடிவு... கையில் குழந்தையை வைத்து கொண்டு ரிஸ்க் எடுத்த பெற்றோர்...

மத்திய பிரதேச மாநிலம் சியோனிதான் எங்களது சொந்த ஊர். பேருந்து வசதி இல்லாததால், சைக்கிளில் பயணம் செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது'' என்றார். இந்தியாவில் கோவிட்-19 வைரஸ் பரவி வரும் நிலையில், தொழிலாளர்கள் இதுபோல் பயணம் செய்து கொண்டிருப்பது கவலையை அளிப்பதாக இருக்கிறது.

கொரோனா ஊரடங்கால் இப்படி ஒரு முடிவு... கையில் குழந்தையை வைத்து கொண்டு ரிஸ்க் எடுத்த பெற்றோர்...

தொழிலாளர்களுக்கு ஏற்பட்டுள்ள இத்தகைய நிலைமை ஒரு பக்கம் கவலையை அளித்தாலும், மறுபக்கம் இதன் காரணமாக கொரோனா வைரஸ் பரவி விடக்கூடிய அபாயமும் இருக்கிறது. எனவே மத்திய அரசும், அந்தந்த மாநில அரசுகளும் இந்த பிரச்னைக்கு உடனடியாக தீர்வு காண வேண்டிய தேவை உள்ளது.

More from DriveSpark

Article Published On: Saturday, April 18, 2020, 22:13 [IST]
English summary
Covid-19 Lockdown: Maharashtra Migrant Workers Riding Cycle To Reach Home In Madhya Pradesh. Read in Tamil
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+