ஆட்டிபடைக்கும் கொரோனா... ஊருக்கு திரும்பும் வழியில் தொழிலாளர்களுக்கு நடந்த சோகம்... என்னனு தெரியுமா?

கொரோனா வைரஸால் ஏற்கனவே வேலையிழப்பு உள்ளிட்ட பிரச்னைகளை சந்தித்து வரும் புலம்பெயரும் தொழிலாளர்களின் வாழ்க்கையில் மற்றொரு சோகம் நிகழ்ந்துள்ளது.

ஆட்டிபடைக்கும் கொரோனா... ஊருக்கு திரும்பும் வழியில் தொழிலாளர்களுக்கு நடந்த சோகம்... என்னனு தெரியுமா?

ஒட்டுமொத்த உலகத்தையும் கொரோனா வைரஸ் (கோவிட்-19) ஆட்டி படைத்து வருகிறது. கொரோனாவின் கோர பிடியில் இருந்து இந்தியாவும் தப்பவில்லை. இந்தியாவில் தற்போது கொரோனா வைரஸ் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. மஹாராஷ்டிரா, தமிழ்நாடு, குஜராத், டெல்லி, ராஜஸ்தான், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்கள் கொரோனா வைரஸால் நிலைகுலைந்து போயுள்ளன.

ஆட்டிபடைக்கும் கொரோனா... ஊருக்கு திரும்பும் வழியில் தொழிலாளர்களுக்கு நடந்த சோகம்... என்னனு தெரியுமா?

கொரோனா வைரஸ் உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருவதுடன், இந்தியாவின் பொருளாதாரத்தையும் சேர்த்தே தாக்கியுள்ளது. குறிப்பாக வெளி மாநிலங்களில் பணியாற்றி வந்த சாதாரண கூலி தொழிலாளர்கள் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்காக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக, லட்சக்கணக்கான கூலி தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளனர்.

MOST READ: பருவமழை வரப்போகுது... உங்க வண்டிக்கு எக்ஸ்ட்ரா கவனிப்பு ரொம்ப முக்கியம்... என்ன பண்ணணும்னு தெரியுமா?

ஆட்டிபடைக்கும் கொரோனா... ஊருக்கு திரும்பும் வழியில் தொழிலாளர்களுக்கு நடந்த சோகம்... என்னனு தெரியுமா?

இதன் காரணமாக அவர்கள் தற்போது மீண்டும் தங்கள் சொந்த ஊர்களுக்கே திரும்பி வருகின்றனர். ஆனால் நடந்தும், சைக்கிளிலும்தான் அவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. பொது போக்குவரத்து சேவைகள் இன்னும் சீராக காரணத்தால்தான், அவர்களுக்கு இந்த இக்கட்டான நிலை ஏற்பட்டுள்ளது.

ஆட்டிபடைக்கும் கொரோனா... ஊருக்கு திரும்பும் வழியில் தொழிலாளர்களுக்கு நடந்த சோகம்... என்னனு தெரியுமா?

இந்தியாவில் ஊரடங்கு அமலுக்கு வந்த மார்ச் 24ம் தேதி முதலே பொது போக்குவரத்து சேவைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு விட்டன. பஸ், ரயில், விமானம் ஆகியவற்றுடன், ஆட்டோ, டாக்ஸிகளை இயக்குவதற்கும் அதிரடியாக தடை விதிக்கப்பட்டது. எனவே ஊரடங்கு அமலுக்கு வந்தது முதலே நடந்தும், சைக்கிளிலும் வெளி மாநில தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பி வருகின்றனர்.

MOST READ: புதிய ஸ்கோடா ரேபிட் விற்பனைக்கு அறிமுகம்... நம்ப முடியாத விலை... மிரண்டு நிற்கும் போட்டியாளர்கள்!

ஆட்டிபடைக்கும் கொரோனா... ஊருக்கு திரும்பும் வழியில் தொழிலாளர்களுக்கு நடந்த சோகம்... என்னனு தெரியுமா?

கோடை வெயில் சுட்டெரிக்கும் நிலையில், ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர்களை நடந்தும், சைக்கிளிலும் கடப்பது மிகவும் சிரமமான காரியம். ஆனால் வேறு வழி இல்லாத காரணத்தால், இந்த சவாலான வழியை வெளி மாநில தொழிலாளர்கள் தேர்வு செய்துள்ளனர். கொரோனா ஒரு பக்கம் வேகம் எடுத்து வரும் நிலையில், மறுபக்கம் ஊரடங்கில் அரசு படிப்படியாக தளர்வுகளை வழங்கி வருகிறது.

ஆட்டிபடைக்கும் கொரோனா... ஊருக்கு திரும்பும் வழியில் தொழிலாளர்களுக்கு நடந்த சோகம்... என்னனு தெரியுமா?

இதன் காரணமாக தற்போது இந்தியாவின் ஒரு சில பகுதிகளில் பேருந்து, ஆட்டோ, டாக்ஸி சேவைகளுக்கு மீண்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் மாநிலத்திற்கு மாநிலம் இந்த அனுமதி மாறுபடுகிறது. சில மாநிலங்களில் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஆனால் சில மாநிலங்களில் இயக்கப்படுவதில்லை. இதனால் இந்த சேவைகளை வெளி மாநில தொழிலாளர்கள் பயன்படுத்துவதில் சிக்கல்கள் உள்ளன.

MOST READ: சூப்பரா இருக்கு... இந்தியாவை அசத்த வரும் புத்தம் புதிய எலெக்ட்ரிக் பைக்... விலை எவ்ளோனு பாத்தீங்களா?

ஆட்டிபடைக்கும் கொரோனா... ஊருக்கு திரும்பும் வழியில் தொழிலாளர்களுக்கு நடந்த சோகம்... என்னனு தெரியுமா?

மறுபக்கம் வெளி மாநில தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்புவதற்காக சிறப்பு ரயில்களை அரசு இயக்கி வருகிறது. இதில், பயணிக்கும் வாய்ப்பையும் சிலரால் பெற முடியவில்லை. எனவே அவர்கள் இன்னமும் நடந்து கொண்டும், சைக்கிள் மிதித்து கொண்டும்தான் உள்ளனர். ஏற்கனவே வேலையிழப்பு உள்ளிட்ட காரணங்களால் துவண்டு போயுள்ள நிலையில், இந்த பயணத்தை அவர்கள் மேற்கொண்டுள்ளனர்.

ஆட்டிபடைக்கும் கொரோனா... ஊருக்கு திரும்பும் வழியில் தொழிலாளர்களுக்கு நடந்த சோகம்... என்னனு தெரியுமா?

இதை விட கொடுமையாக இந்த சவாலான பயணத்தின்போது அவர்கள் சாலை விபத்துக்களில் அதிகளவில் சிக்க நேரிடுகிறது. இது குறித்த புள்ளி விபரங்கள் தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. ஊரடங்கு அமலுக்கு வந்த கடந்த மார்ச் 24ம் தேதியில் இருந்து 196 புலம்பெயரும் தொழிலாளர்கள் சாலை விபத்துக்களில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.

MOST READ: இத்தாலியில் இருந்து இறக்குமதியான சைலென்சரை நொறுக்கிய போலீஸ்... விலை தெரிஞ்சா மயக்கமே போட்ருவீங்க...

ஆட்டிபடைக்கும் கொரோனா... ஊருக்கு திரும்பும் வழியில் தொழிலாளர்களுக்கு நடந்த சோகம்... என்னனு தெரியுமா?

சேவ் லைஃப் பவுண்டேஷன் (SaveLife Foundation) நடத்திய ஆய்வில் இந்த தகவல் தெரியவந்துள்ளது. இதே காலகட்டத்தில் 1,346 சாலை விபத்துக்களில் மொத்தமாக 601 பேர் உயிரிழந்திருப்பதாகவும் இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதில் சாலை விபத்துக்களில் காயமடைந்த புலம்பெயரும் தொழிலாளர்களின் எண்ணிக்கை 866.

ஆட்டிபடைக்கும் கொரோனா... ஊருக்கு திரும்பும் வழியில் தொழிலாளர்களுக்கு நடந்த சோகம்... என்னனு தெரியுமா?

உலகிலேயே இந்திய சாலைகள்தான் மிகவும் அபாயகரமானவை என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயம்தான். இந்தியாவில் சாலை விபத்துக்களால் ஒரு ஆண்டுக்கு சுமார் 1.50 லட்சம் பேர் உயிரிழந்து வருகின்றனர். ஆனால் ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையிலும், நம் சாலைகள் இவ்வளவு அபாயகரமானவையாக இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆட்டிபடைக்கும் கொரோனா... ஊருக்கு திரும்பும் வழியில் தொழிலாளர்களுக்கு நடந்த சோகம்... என்னனு தெரியுமா?

இந்தியாவில் ஊரடங்கிற்கு பின்னர் கடந்த சில நாட்களாகதான் வாகன போக்குவரத்து மீண்டும் அதிகரித்து வருகிறது. அதற்கு முன்பு வரை சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி கிடந்தன. இதை பயன்படுத்தி பலர் அதிவேகத்தில் வாகனங்களை இயக்கினர். இதுவே இந்த விபத்துக்களுக்கு மிக முக்கியமான காரணமாக கூறப்படுகிறது.

ஆட்டிபடைக்கும் கொரோனா... ஊருக்கு திரும்பும் வழியில் தொழிலாளர்களுக்கு நடந்த சோகம்... என்னனு தெரியுமா?

இந்த காலகட்டத்தில், இடம்பெயரும் தொழிலாளர்கள் தவிர, அத்தியாவசிய பணியில் ஈடுபட்டிருந்த 35 பேரும் சாலை விபத்துக்களில் சிக்கி உயிரிழந்துள்ளனர். அதே சமயம் இந்த சாலை விபத்துக்களில் அத்தியாவசிய பணிகளில் ஈடுபட்டிருந்த 31 பேர் காயமும் அடைந்துள்ளனர். இந்தியாவின் சாலைகளில் நாம் பாதுகாப்பை இன்னும் எந்த அளவிற்கு உயர்த்த வேண்டியுள்ளது என்பதை இந்த புள்ளி விபரங்கள் எடுத்து காட்டுகின்றன.

Note: Images used are for representational purpose only.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
During Covid-19 Lockdown, 196 Migrants Died In Road Accidents: SaveLife Foundation. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X