கொரோனா வைரஸ் ஹாட்-ஸ்பாட் மும்பையில் நடந்த சம்பவத்தை பாருங்க... கரண்ட் ஷாக் அடிச்ச மாதிரி இருக்கு...

கொரோனா ஹாட்-ஸ்பாட் மும்பையில் மக்கள் செய்த காரியம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

கொரோனா வைரஸ் ஹாட்-ஸ்பாட் மும்பையில் நடந்த சம்பவத்தை பாருங்க... கரண்ட் ஷாக் அடிச்ச மாதிரி இருக்கு...

கொரோனா வைரஸ் (கோவிட்-19) பிரச்னை இன்னும் கொஞ்ச நாட்களில் சரியாகி விடும் என்ற நம்பிக்கை தகர்ந்துள்ளது. கோவிட்-19 வைரஸ் நம்முடனே இருப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும், அதற்கு ஏற்ப வாழ பழகி கொள்ள வேண்டும் எனவும் வெளியாகி வரும் செய்திகள் மக்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.

கொரோனா வைரஸ் ஹாட்-ஸ்பாட் மும்பையில் நடந்த சம்பவத்தை பாருங்க... கரண்ட் ஷாக் அடிச்ச மாதிரி இருக்கு...

ஆனால் கோவிட்-19 வைரஸை கண்டு பயப்படாமல் ஒரு சிலர் தேவை இல்லாமல் வெளியே தெனாவெட்டாக சுற்றி வருகின்றனர். இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக கடந்த மார்ச் 24ம் தேதி முதல் ஊரடங்கு அமலுக்கு கொண்டு வரப்பட்டது. பின் இது மே 3ம் தேதி வரை, மே 17ம் தேதி வரை என தொடர்ச்சியாக நீட்டிக்கப்பட்டது.

கொரோனா வைரஸ் ஹாட்-ஸ்பாட் மும்பையில் நடந்த சம்பவத்தை பாருங்க... கரண்ட் ஷாக் அடிச்ச மாதிரி இருக்கு...

இந்த ஊரடங்கு கால கட்டத்தில் தேவை இல்லாமல் வெளியே வர வேண்டாம் என்று மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் அந்த எச்சரிக்கையை காதில் வாங்கி கொள்ளாமல் ஒரு சிலர் தேவை இல்லாமல் வாகனங்களில் ஜாலி ரைடு சென்றதை நம்மால் பார்க்க முடிந்தது. அத்தியாவசியமான பணிகளில் ஈடுபட்டிருந்தவர்களுக்கு வாகனங்களில் பயணிப்பதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டிருந்தது.

கொரோனா வைரஸ் ஹாட்-ஸ்பாட் மும்பையில் நடந்த சம்பவத்தை பாருங்க... கரண்ட் ஷாக் அடிச்ச மாதிரி இருக்கு...

ஆனால் அவர்களை தவிர, தேவை இல்லாமலும் பலர் வாகனங்களில் ஜாலியாக சுற்றி திரிந்தனர். அவர்கள் மீது இந்தியா முழுவதும் அந்தந்த மாநில போலீசார் கடும் நடவடிக்கைகளை எடுத்தனர். தமிழகத்தை பொறுத்தவரை, தேவையில்லாமல் சுற்றியவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் அவர்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டது.

கொரோனா வைரஸ் ஹாட்-ஸ்பாட் மும்பையில் நடந்த சம்பவத்தை பாருங்க... கரண்ட் ஷாக் அடிச்ச மாதிரி இருக்கு...

தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக, 3.50 லட்சத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் காவல் துறையால் அதிரடியாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த வரிசையில் ஊரடங்கு உத்தரவை மீறியவர்கள் மீது மஹாராஷ்டிர மாநிலம் மும்பையில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விபரங்கள் தற்போது வெளியாகியுள்ளன.

கொரோனா வைரஸ் ஹாட்-ஸ்பாட் மும்பையில் நடந்த சம்பவத்தை பாருங்க... கரண்ட் ஷாக் அடிச்ச மாதிரி இருக்கு...

இதன்படி ஊரடங்கு உத்தரவை மீறியவர்களிடம் இருந்து, மும்பை போக்குவரத்து போலீசார் சுமார் 9 கோடி ரூபாயை அபராதமாக வசூலித்துள்ளனர். இது ஊரடங்கு அமலுக்கு வந்த மார்ச் மாதம் முதல் சலான்கள் மூலமாக வசூலிக்கப்பட்ட அபராத தொகையாகும். அதாவது மார்ச் 20ம் தேதியில் இருந்து மே 13ம் தேதி வரையில் இந்த அபராத தொகை வசூலிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் ஹாட்-ஸ்பாட் மும்பையில் நடந்த சம்பவத்தை பாருங்க... கரண்ட் ஷாக் அடிச்ச மாதிரி இருக்கு...

ஹெல்மெட் அணியாத குற்றத்திற்காக 73,735 டூவீலர் ரைடர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பொது உத்தரவை மதிக்காத காரணத்திற்காக 36,248 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் உரிய லைசென்ஸை சமர்ப்பிக்காத காரணத்திற்காக 11,611 பேருக்கும், லைசென்ஸே இல்லாமல் வாகனம் ஓட்டியதற்காக 6,354 பேருக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் ஹாட்-ஸ்பாட் மும்பையில் நடந்த சம்பவத்தை பாருங்க... கரண்ட் ஷாக் அடிச்ச மாதிரி இருக்கு...

இவ்வாறு ஒட்டுமொத்தமாக 2,09,188 சலான்கள் ஜெனரேட் செய்யப்பட்டுள்ளன. இந்தியாவிலேயே கொரோனா வைரஸால் மிக கடுமையான பாதிப்பை சந்தித்திருப்பது மும்பை மாநகரம்தான். இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலின் ஹாட்-ஸ்பாட்டாக மும்பை மாறியுள்ளது. இப்படிப்பட்ட சூழலில் அங்கு பொதுமக்கள் ஊரடங்கை இந்த அளவிற்கு மீறியிருக்கும் தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா வைரஸ் ஹாட்-ஸ்பாட் மும்பையில் நடந்த சம்பவத்தை பாருங்க... கரண்ட் ஷாக் அடிச்ச மாதிரி இருக்கு...

ஊரடங்கு காலகட்டத்தில் பல்வேறு குற்றங்களுக்காக, போக்குவரத்து காவல் துறையினரால் 3,37,136 பேருக்கு இதுவரை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் ஊரடங்கு கால கட்டத்தில் மும்பை மாநகரில் சாலை விபத்துக்களும் நடந்துள்ளன. இதன்படி கடந்த மார்ச் 23ம் தேதி முதல் மே 12 வரை மும்பையில் நடந்த சாலை விபத்துக்களில் 18 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் ஹாட்-ஸ்பாட் மும்பையில் நடந்த சம்பவத்தை பாருங்க... கரண்ட் ஷாக் அடிச்ச மாதிரி இருக்கு...

தொடர்ச்சியாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு கொண்டே வந்த நிலையிலும் கூட, தற்போது கோவிட்-19 வைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. எனினும் பொருளாதார சூழல்களை மனதில் வைத்து ஊரடங்கில் படிப்படியாக தளர்வுகள் வழங்கப்பட்டு வருகின்றன. எனவே அவசியம் இருப்பவர்கள் மட்டும் பயணங்களை மேற்கொள்வது நல்லது.

கொரோனா வைரஸ் ஹாட்-ஸ்பாட் மும்பையில் நடந்த சம்பவத்தை பாருங்க... கரண்ட் ஷாக் அடிச்ச மாதிரி இருக்கு...

கூடுமான வரை தேவை இல்லாமல் வாகனங்களில் உலா வருவதை தவிர்த்து விடுங்கள். ஊரடங்கில் தளர்வு இருந்தாலும் கூட, தேவை இல்லாமல் வெளியே சுற்றுபவர்களின் மீது, முன்பு போலவே காவல் துறையினர் கடும் நடவடிக்கைகளை எடுப்பார்கள் என்றே தகவல்கள் தெரிவிக்கின்றன.

Note: Images used are for representational purpose only.

Article Published On: Friday, May 15, 2020, 8:30 [IST]
English summary
Covid-19 Lockdown: Mumbai Traffic Police Collect Rs.9 Crore Fine From Violators. Read in Tamil
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+