வல்லரசுகளையும் ஆட்டி படைக்கும் கொரோனா... இந்தியாவில் நிலைமை அப்படியே தலைகீழாக மாறியது... நல்ல செய்தி

அமெரிக்கா உள்ளிட்ட உலக வல்லரசுகளை கொரோனா வைரஸ் ஆட்டி படைத்து வரும் நிலையில், இந்தியாவில் நிலைமை அப்படியே தலைகீழாக மாறியுள்ளது.

வல்லரசுகளையும் ஆட்டி படைக்கும் கொரோனா... இந்தியாவில் நிலைமை அப்படியே தலைகீழாக மாறியது... நல்ல செய்தி

சீனாவில் இருந்து பரவ தொடங்கியதாக கருதப்பட்டு வரும் கோவிட்-19 வைரஸ் மனித குலத்திற்கே தற்போது பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. கொரோனா வைரஸ் வகையை சேர்ந்த கோவிட்-19 வைரஸால் உயிர் இழப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. அதேபோல் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது.

வல்லரசுகளையும் ஆட்டி படைக்கும் கொரோனா... இந்தியாவில் நிலைமை அப்படியே தலைகீழாக மாறியது... நல்ல செய்தி

எனவே வீடுகளுக்கு உள்ளேயே மக்கள் முடங்கி கிடக்கின்றனர். உலகின் பெரும்பாலான நாடுகளில் தற்போது ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் வாகன போக்குவரத்து இன்றி சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. இந்தியாவும் இதற்கு விதிவிலக்கு அல்ல. இங்கு தற்போது 21 நாட்கள் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

வல்லரசுகளையும் ஆட்டி படைக்கும் கொரோனா... இந்தியாவில் நிலைமை அப்படியே தலைகீழாக மாறியது... நல்ல செய்தி

இதனால் அத்தியாவசிய பணிகளுக்காக மட்டுமே மக்கள் வெளியே வர முடியும். தேவை இல்லாமல் வெளியே வருபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் வெறிச்சோடி உள்ள சாலைகளில், ஒரு சிலர் ஜாலி ரைடு சென்று கொண்டுதான் இருக்கின்றனர். அவர்கள் மீது காவல் துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

வல்லரசுகளையும் ஆட்டி படைக்கும் கொரோனா... இந்தியாவில் நிலைமை அப்படியே தலைகீழாக மாறியது... நல்ல செய்தி

இதுபோல் ஒரு சிலர் வாகனங்களில் வெளியே சுற்றி வந்தாலும், பொதுவாக பார்த்தால் இந்தியாவில் வாகன போக்குவரத்து அப்படியே முடங்கி போயுள்ளது. ஊரடங்கு காரணமாக தற்போது பஸ்கள் இயக்கப்படுவது கிடையாது. வாகனங்களில் வேலைக்கு சென்று வருவோரின் எண்ணிக்கையும் அப்படியே சரிந்துள்ளது. அத்தியாவசிய பணிகளுக்கு மட்டுமே பெரும்பாலானோர் வாகனங்களை பயன்படுத்துகின்றனர்.

வல்லரசுகளையும் ஆட்டி படைக்கும் கொரோனா... இந்தியாவில் நிலைமை அப்படியே தலைகீழாக மாறியது... நல்ல செய்தி

இதன் எதிரொலியாக பெட்ரோல், டீசல் நுகர்வு மிக கடுமையாக சரிந்துள்ளது. ஊரடங்கு காரணமாக தேவை குறைந்துள்ளதால், நாடு முழுவதும் எரிபொருள் நுகர்வு குறைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த மார்ச் மாதம் எரிபொருள் விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டதால், ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கவே திணறுவதாக ஒரு சில பெட்ரோல் பங்க் நிர்வாகங்கள் கூறியுள்ளன.

வல்லரசுகளையும் ஆட்டி படைக்கும் கொரோனா... இந்தியாவில் நிலைமை அப்படியே தலைகீழாக மாறியது... நல்ல செய்தி

நடப்பு ஏப்ரல் மாதமும் இதே நிலை நீடிக்குமா? என நினைத்து பெட்ரோல் பங்க் நிர்வாகங்கள் கவலைப்பட்டு வருகின்றன. ஊரடங்கு அமலில் இருந்தாலும், பெட்ரோல் பங்க்குகள் வழக்கம் போல இயங்கி வருகின்றன. இந்தியாவில் தற்போது கோவிட்-19 மிக வேகமாக பரவி வரும் நிலையில், பெட்ரோல் பங்க் ஊழியர்கள் வீடுகளுக்கு முடங்காமல், உயிரை பணயம் வைத்து வேலை செய்து வருகின்றனர்.

வல்லரசுகளையும் ஆட்டி படைக்கும் கொரோனா... இந்தியாவில் நிலைமை அப்படியே தலைகீழாக மாறியது... நல்ல செய்தி

இப்படிப்பட்ட சூழலில், அவர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாமல் ஒரு சில பெட்ரோல் பங்க் நிர்வாகங்கள் தடுமாறுவதாக வெளியாகியிருக்கும் தகவல் கவலையை அளிக்கிறது. இந்த சூழலில், உயிரை பணயம் வைத்து வேலை செய்து வரும் பெட்ரோல் பங்க்குகளின் ஊழியர்களுக்கு, குறிப்பாக பெட்ரோல் நிரப்புபவர்களுக்கு, இன்சூரன்ஸ் வசதி செய்து தர வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

வல்லரசுகளையும் ஆட்டி படைக்கும் கொரோனா... இந்தியாவில் நிலைமை அப்படியே தலைகீழாக மாறியது... நல்ல செய்தி

தெலங்கானா மாநிலத்தில் அவர்களுக்கு 5 லட்ச ரூபாய் இன்சூரன்ஸ் அறிவிக்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் மற்ற பகுதிகளை போலவே, தெலங்கானாவிலும் பெட்ரோல், டீசல் விற்பனை சரிந்து வருகிறது. தெலங்கானாவில் கடந்த 2019ம் ஆண்டு மார்ச் மாதம் 1.45 லட்சம் கிலோ லிட்டர் பெட்ரோல் விற்பனை செய்யப்பட்டிருந்தது.

வல்லரசுகளையும் ஆட்டி படைக்கும் கொரோனா... இந்தியாவில் நிலைமை அப்படியே தலைகீழாக மாறியது... நல்ல செய்தி

ஆனால் நடப்பாண்டு மார்ச் மாதம் இந்த எண்ணிக்கை 1.27 லட்சம் கிலோ லிட்டர்களாக குறைந்துள்ளது. அதே போல் டீசல் விற்பனையும் சரிந்துள்ளது. தெலங்கானா மாநிலத்தில் கடந்த 2019ம் ஆண்டு மார்ச் மாதம், 2.84 லட்சம் கிலோ லிட்டர் டீசல் விற்பனை செய்யப்பட்டிருந்தது. ஆனால் நடப்பாண்டு மார்ச் மாதம் இந்த எண்ணிக்கை 2.07 லட்சம் கிலோ லிட்டர்களாக குறைந்துள்ளது.

வல்லரசுகளையும் ஆட்டி படைக்கும் கொரோனா... இந்தியாவில் நிலைமை அப்படியே தலைகீழாக மாறியது... நல்ல செய்தி

உலகில் அதிக அளவிலான வாகனங்களை கொண்ட நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. எனவே உலகில் பெட்ரோல், டீசல் ஆகிய எரிபொருட்களை அதிக அளவில் நுகரும் நாடுகளில் ஒன்றாகவும் இந்தியா இருந்து வருகிறது. ஆனால் தற்போது கொரோனா வைரஸ் எதிரொலியால், நிலைமை அப்படியே தலைகீழாக மாறி, எரிபொருள் நுகர்வு குறைந்து வருகிறது.

வல்லரசுகளையும் ஆட்டி படைக்கும் கொரோனா... இந்தியாவில் நிலைமை அப்படியே தலைகீழாக மாறியது... நல்ல செய்தி

இதில், ஒரு நல்ல விஷயமும் அடங்கியுள்ளது. தலைநகர் டெல்லி உள்பட இந்தியாவின் பல நகரங்கள் காற்று மாசுபாட்டால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. ஆனால் தற்போது வாகன போக்குவரத்து முற்றிலுமாக முடங்கியுள்ளதால், காற்றின் தரம் வெகுவாக மேம்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. இந்தியாவிற்கு இது நிச்சயம் நல்ல செய்திதான்.

Note: Images used are for representational purpose only.

Article Published On: Saturday, April 4, 2020, 18:40 [IST]
English summary
Covid-19 Lockdown: Petrol, Diesel Consumption Sees Drastic Drop. Read in Tamil
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+