சல்யூட்... 120 கிமீ கஷ்டப்பட்டு சைக்கிள் ஓட்டிய தொழிலாளி... காரணத்தை கேட்டு கண் கலங்கும் தமிழ்நாடு

தொழிலாளி ஒருவர் சுமார் 120 கிமீ தூரம் சைக்கிள் ஓட்டிய சம்பவம் அனைவரையும் நெகிழ வைத்துள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

சல்யூட்... 120 கிமீ கஷ்டப்பட்டு சைக்கிள் ஓட்டிய தொழிலாளி... காரணத்தை கேட்டு கண் கலங்கும் தமிழ்நாடு

உலகையே ஆட்டி படைத்து வரும் கொரோனா வைரஸ் (கோவிட்-19), நம் அனைவர் வாழ்க்கையையும் முடக்கி போட்டுள்ளது. முன் எப்போதும் இல்லாத வகையில் நாம் அனைவரும் தற்போது வீடுகளுக்கு உள்ளேயே முடங்கி கிடக்கிறோம். சீனாவின் வுஹானில் இருந்து பரவ தொடங்கியதாக கூறப்படும் கொரோனா, இந்தியாவிலும் தற்போது வேகம் எடுத்து வருகிறது.

சல்யூட்... 120 கிமீ கஷ்டப்பட்டு சைக்கிள் ஓட்டிய தொழிலாளி... காரணத்தை கேட்டு கண் கலங்கும் தமிழ்நாடு

இதனால் மத்திய, மாநில அரசுகள் ஊரடங்கை நீட்டித்து கொண்டே செல்கின்றன. இந்தியாவில் கடந்த மார்ச் 24ம் தேதி முதல் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. கொரோனா பரவலின் வேகம் அதிகரித்துள்ளதால், மே 17ம் தேதி வரை மத்திய அரசு ஊரடங்கை நீட்டித்துள்ளது. இதனால் பஸ், ரயில், விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன.

சல்யூட்... 120 கிமீ கஷ்டப்பட்டு சைக்கிள் ஓட்டிய தொழிலாளி... காரணத்தை கேட்டு கண் கலங்கும் தமிழ்நாடு

ஆட்டோ மற்றும் டாக்ஸிகளும் முன்பு போல் இயங்குவதில்லை. கார், பைக் உள்ளிட்ட சொந்த வாகனங்களில் பயணம் செய்வதற்கும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஆனால் ஊரடங்கு காரணமாக வேலை இழந்த வெளி மாநில தொழிலாளர்கள் பலர் நடந்தே தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்ற நிகழ்வுகளை நம்மால் கடந்த காலங்களில் பார்க்க முடிந்தது.

சல்யூட்... 120 கிமீ கஷ்டப்பட்டு சைக்கிள் ஓட்டிய தொழிலாளி... காரணத்தை கேட்டு கண் கலங்கும் தமிழ்நாடு

ஒரு சிலர் ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர் தொலைவை சைக்கிள் மூலம் கடந்தனர். அதேபோல் மற்ற அவசர தேவைகளுக்காகவும் ஒரு சிலர் ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர்கள் சைக்கிள் பயணம் மேற்கொண்டனர். இந்த வரிசையில் தமிழகத்தை சேர்ந்த அச்சக தொழிலாளி ஒருவர் தற்போது சுமார் 120 கிலோ மீட்டர் தூரம் சைக்கிள் பயணம் மேற்கொண்டுள்ளார். இதற்கான காரணம் அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.

சல்யூட்... 120 கிமீ கஷ்டப்பட்டு சைக்கிள் ஓட்டிய தொழிலாளி... காரணத்தை கேட்டு கண் கலங்கும் தமிழ்நாடு

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள எஸ்.ஆர்.பட்டிணம் எனும் பகுதியை சேர்ந்தவர் கருப்பையா. இவருக்கு 50 வயதாகிறது. இவரது தாயார் வள்ளியம்மாள் (70). பிழைப்புக்காக தாய், மனைவி, மகன், மகள் ஆகியோருடன் கருப்பையா கடந்த சில ஆண்டுகளுக்கு முன் திருச்சியில் குடியேறினார். ஆனால் அந்த சமயத்தில் அவரது தாய் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டார்.

சல்யூட்... 120 கிமீ கஷ்டப்பட்டு சைக்கிள் ஓட்டிய தொழிலாளி... காரணத்தை கேட்டு கண் கலங்கும் தமிழ்நாடு

ஆனால் திருச்சியில் அவர்கள் வசித்த வீடு மிகவும் சிறியதாக இருந்தது. இதனால் தாயை அவரால் சரியாக கவனித்து கொள்ள முடியவில்லை. எனவே தாயை கவனித்து கொள்வதற்காக, மீண்டும் சொந்த ஊரான எஸ்.ஆர்.பட்டிணத்திற்கே கருப்பையா வந்து விட்டார். தாயை சொந்த ஊர் அழைத்து வந்து விட்டாலும், மனைவி மற்றும் குழந்தைகள் திருச்சியில்தான் உள்ளனர்.

சல்யூட்... 120 கிமீ கஷ்டப்பட்டு சைக்கிள் ஓட்டிய தொழிலாளி... காரணத்தை கேட்டு கண் கலங்கும் தமிழ்நாடு

வாரத்திற்கு ஒரு முறை அவர் திருச்சிக்கு சென்று மனைவி, குழந்தைகளை பார்த்து விட்டு வருவார். இதன்படி சமீபத்தில் அவர் திருச்சிக்கு சென்றார். ஆனால் கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக அவரால் சொந்த ஊருக்கு திரும்பி வர இயலவில்லை. எனவே கவனித்து கொள்ள ஆள் இல்லாமல், அவரது தாய் வள்ளியம்மாள் சிரப்பட்டு வந்தார்.

சல்யூட்... 120 கிமீ கஷ்டப்பட்டு சைக்கிள் ஓட்டிய தொழிலாளி... காரணத்தை கேட்டு கண் கலங்கும் தமிழ்நாடு

அந்த ஊரை சேர்ந்த சிலர் இதுகுறித்து செல்போன் மூலம் கருப்பையாவிடம் கூறினர். ஊர் திரும்ப பஸ், ரயில் வசதிகள் எதுவும் இல்லாததால், கருப்பையான மனம் நொந்து போனார். எனினும் சைக்கிளிலேயே சொந்த ஊர் சென்று விட முடிவு செய்தார். இதன்படி கடந்த ஓரிரு நாட்களுக்கு முன் காலை 7 மணியளவில் அவர் திருச்சியில் இருந்து சைக்கிளில் சொந்த ஊருக்கு புறப்பட்டார்.

சல்யூட்... 120 கிமீ கஷ்டப்பட்டு சைக்கிள் ஓட்டிய தொழிலாளி... காரணத்தை கேட்டு கண் கலங்கும் தமிழ்நாடு

திருச்சியில் இருந்து அவரது சொந்த ஊர் சுமார் 120 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. மதியத்திற்குள் இந்த தொலைவை கடந்து விட முடியும் என கருப்பையா நினைத்தார். ஆனால் வழியில் நடந்த சம்பவங்கள் அவரது பயணத்தில் தாமதத்தை ஏற்படுத்தின. புதுக்கோட்டைக்கு அருகே வந்த சமயத்தில் அவரது சைக்கிளின் டயர் பஞ்சரானது.

சல்யூட்... 120 கிமீ கஷ்டப்பட்டு சைக்கிள் ஓட்டிய தொழிலாளி... காரணத்தை கேட்டு கண் கலங்கும் தமிழ்நாடு

ஆனால் ஊரடங்கு காரணமாக பஞ்சர் கடை எதுவும் தென்படவில்லை. எனவே சுமார் 6 கிலோ மீட்டர் நடந்தே வந்த அவர் ஒரு சைக்கிள் கடைக்காரரிடம் பஞ்சர் போட்டார். இதன்பின் மீண்டும் பயணத்தை தொடங்கிய கருப்பையா, இரவு சுமார் 7 மணியளவில் வீடு வந்து சேர்ந்தார். அத்துடன் தாய்க்கு பணிவிடை செய்யும் பணிகளை மீண்டும் தொடங்கினார்.

சல்யூட்... 120 கிமீ கஷ்டப்பட்டு சைக்கிள் ஓட்டிய தொழிலாளி... காரணத்தை கேட்டு கண் கலங்கும் தமிழ்நாடு

தாயை கவனித்து கொள்வதற்காக, சுமார் 120 கிலோ மீட்டர் சைக்கிளில் வந்த கருப்பையாவின் தாய் பாசம் அப்பகுதி மக்களின் மனதை நெகிழ வைத்துள்ளது. இதுகுறித்து நியூஸ் 18 செய்தி வெளியிட்டுள்ளது. இவரை போல் இன்னும் பலர் இப்படி சைக்கிள் பயணம் செய்து கொண்டுதான் உள்ளனர். கடந்த சில வாரங்களுக்கு முன்பு இளைஞர் ஒருவர் தன் தங்கையை அழைத்து வருவதற்காக சைக்கிளில் 85 கிமீ பயணம் செய்தார்.

சல்யூட்... 120 கிமீ கஷ்டப்பட்டு சைக்கிள் ஓட்டிய தொழிலாளி... காரணத்தை கேட்டு கண் கலங்கும் தமிழ்நாடு

அவரது தாய்க்கு உடல் நிலை சரியில்லாமல் போனது. எனவே தேனியில் பணியாற்றும் தங்கையை அழைத்து வரும்படி தன் மகனிடம் கூறியுள்ளார். பஸ் வசதிகள் இல்லாததால், அந்த இளைஞர் மதுரையில் இருந்து தேனிக்கு சைக்கிளில் சென்று தங்கையை அழைத்து வந்தார். ஆனால் ஊரடங்கில் தற்போது தளர்வு வழங்கப்பட்டு வருகிறது.

சல்யூட்... 120 கிமீ கஷ்டப்பட்டு சைக்கிள் ஓட்டிய தொழிலாளி... காரணத்தை கேட்டு கண் கலங்கும் தமிழ்நாடு

இதன் காரணமாக இந்தியா படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பும் எனவும், பொது போக்குவரத்து கூடிய விரைவில் தொடங்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. ஊரடங்கில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகள் காரணமாக, தற்போது சாலைகளில் அதிக அளவில் வாகனங்களை பார்க்க முடிகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More from DriveSpark

Article Published On: Tuesday, May 12, 2020, 12:46 [IST]
English summary
Covid-19 Lockdown: Tamil Nadu Man Cycles 120 KM To Take Care His Mother. Read in Tamil
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+