கலெக்ஸனை அள்ள ரெடியாகும் டோல்கேட்கள்... கட்டண வசூல் பட்டைய கௌப்ப போகுது... காரணம் என்னனு தெரியுமா?
டோல்கேட்களில் கட்டண வசூல் மீண்டும் உயரும் சூழல் உருவாகியுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவில் தற்போது கொரோனா வைரஸ் இரண்டாவது அலை வீசி வருகிறது. இதனை கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு மாநில அரசுகள் ஊரடங்கு அமலுக்கு கொண்டு வந்துள்ளன. இதன் காரணமாக கடந்த ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடுகையில் நடப்பு மே மாதத்தில் தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்க கட்டண வசூல் 25 முதல் 30 சதவீதம் வரை குறையலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

ரேட்டிங் ஏஜென்சியான ஐசிஆர்ஏ இதனை கணக்கிட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதத்திலும் கூட இந்தியாவில் டோல்கேட் கட்டண வசூல் குறைந்திருந்தது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. அதாவது கடந்த மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில் ஏப்ரல் மாதம் இந்தியாவில் டோல்கேட் கட்டண வசூல் 10 சதவீதம் குறைந்திருந்தது.

ஆனால் இந்தியாவில் தற்போது கொரோனா வைரஸ் இரண்டாவது அலையின் தாக்கம் மெல்ல மெல்ல குறைந்து வருகிறது. கொரோனா வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து கொண்டே இருப்பது சற்று நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக ஊரடங்கில் தளர்வுகள் வழங்கப்படுவதற்கான சூழல் உருவாகியுள்ளது.

மாநில அரசுகள் வரும் நாட்களில் ஊரடங்கை படிப்படியாக தளர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே வரும் ஜூன் மாதத்தில் இருந்து தேசிய நெடுஞ்சாலைகளில் வாகன போக்குவரத்து மீண்டும் உயர்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. இதன் காரணமாக சுங்க கட்டண வசூலும் மீண்டும் உயரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் கடந்த 2020ம் ஆண்டு கொரோனா வைரஸ் முதல் அலை வீசியபோது, நாடு தழுவிய அளவில் மத்திய அரசு ஊரடங்கை பிறப்பித்தது. இதன் காரணமாக நாடு முழுவதும் முடங்கி, வாகன போக்குவரத்து முடங்கியது. ஆனால் இம்முறை மத்திய அரசு நாடு தழுவிய அளவில் ஊரடங்கு உத்தரவை அமலுக்கு கொண்டு வரவில்லை.

அதற்கு பதிலாக மாநில அரசுகள் மட்டுமே கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. எனவே கடந்த ஆண்டை போல் இம்முறை டோல்கேட் கட்டண வசூல் மிக கடுமையாக பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் இல்லை என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் கடந்த ஆண்டு நாடு தழுவிய ஊரடங்கால் வாகன போக்குவரத்து முடங்கி டோல்கேட் கட்டண வசூல் மிக கடுமையாக பாதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே இந்தியாவில் கடந்த 2019-20ம் நிதியாண்டில் தேசிய நெடுஞ்சாலைகளில் 26,851 கோடி ரூபாய் டோல்கேட் கட்டணமாக வசூல் செய்யப்பட்டிருந்தது. ஆனால் அதற்கு முந்தைய நிதியாண்டில் 24,396 கோடி ரூபாய் மட்டுமே வசூல் செய்யப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. டோல்கேட் கட்டண வசூல் தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், கொரோனா பிரச்னையால் தொய்வு ஏற்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பிரச்னையால் டோல்கேட் வசூல் மட்டுமின்றி, தனியார் நிறுவனங்களை போல் மத்திய, மாநில அரசுகளுக்கும் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. எனினும் இந்தியாவில் இரண்டாவது அலையின் தாக்கம் தற்போது மெல்ல மெல்ல குறைந்து வருகிறது. எனவே வரும் நாட்களில் நிலைமை சீராகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Note: Images used are for representational purpose only.


Click it and Unblock the Notifications








