சூப்பர்... மாருதி சுஸுகி ஊழியர் செய்த காரியத்தால் வியந்து போன யூ-டியூப் பிரபலம்... என்னனு தெரியுமா?
யூ-டியூபில் மிகவும் பிரபலமாக இருக்கும் நபரை, மாருதி சுஸுகி நிறுவன ஊழியர் ஒருவர் வியக்க வைத்துள்ளார்.

மனித குலத்திற்கே பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ள கொரோனா வைரஸ் (கோவிட்-19), தற்போது உக்கிரம் காட்ட தொடங்கியுள்ளது. அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ், இங்கிலாந்து, ஈரான், பிரேசில் மற்றும் ரஷ்யா என உலகின் பல்வேறு நாடுகளை நிலைகுலைய வைத்த கொரோனா வைரஸ், இந்தியாவிலும் தற்போது வேகமாக பரவி வருகிறது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுபவர்கள் மற்றும் உயிரிழப்பவர்கள் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்வதால், மக்கள் அச்சமடைந்துள்ளனர். எனவே கொரோனா பரவலை தடுப்பதற்காக, மத்திய அரசு ஊரடங்கை நீட்டித்து கொண்டே செல்கிறது. இந்தியாவில் கடந்த மார்ச் 24ம் தேதியில் இருந்து ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது.

தற்போதைய நிலவரப்படி வரும் மே 17ம் தேதி வரை ஊரடங்கு அமலில் இருக்கும். எனினும் ஊரடங்கில் ஒரு சில தளர்வுகளை அரசு வழங்கியுள்ளது. பொருளாதாரம் நலிவடைவதை தடுப்பதற்காக வழங்கப்பட்டுள்ள இந்த தளர்வுகள் காரணமாக நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது வர்த்தக நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன.

கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக அதிகம் பாதிக்கப்பட்ட துறைகளில் ஆட்டோமொபைல் துறையும் ஒன்று. இந்தியாவில் கடந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே ஆட்டோமொபைல் துறையில் மந்த நிலை நிலவி வருகிறது. போதாக்குறைக்கு தற்போது கொரோனா வைரஸ் பிரச்னையும் புதிதாக சேர்ந்து கொண்டுள்ளதால், ஆட்டோமொபைல் துறை நலிவடைந்துள்ளது.

ஊரடங்கு உத்தரவு காரணமாக முன்னணி நிறுவனங்களின் தொழிற்சாலைகள் அனைத்தும் தற்காலிகமாக மூடப்பட்டன. அங்கு வாகன உற்பத்தி அடியோடு நிறுத்தப்பட்டது. அதே போன்று வாகன டீலர்ஷிப்களும் அடைக்கப்பட்டன. இதனால் வாகன விற்பனை பலத்த அடியை வாங்கியிருந்தது. எனினும் தற்போது ஊரடங்கில் தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளதால், வாகன உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது.

முழு வீச்சில் இல்லை என்றாலும், ஒரு சில முன்னணி நிறுவனங்கள் தற்போது வாகன உற்பத்தியை மீண்டும் தொடங்கியுள்ளன. அரசு வழங்கியுள்ள பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி வாகன உற்பத்தி நடைபெற்று வருகிறது. அத்துடன் வழக்கமான அளவை காட்டிலும் குறைவான பணியாளர்கள் மட்டுமே உற்பத்தி பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அத்துடன் டீலர்ஷிப்கள் மற்றும் சர்வீஸ் ஸ்டேஷன்களும் அரசின் அனுமதியுடன் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. நாடு முழுவதும் இல்லை என்றாலும், கொரோனா வைரஸின் தாக்கம் குறைவாக உள்ள பகுதிகளில் மட்டும் விதிகளை பின்பற்றி, குறைவான பணியாளர்களுடன் டீலர்ஷிப்களும், வாகன சர்வீஸ் நிலையங்களும் மீண்டும் செயல்பாட்டிற்கு வந்துள்ளன.

ஆனால் பாதுகாப்பு தொடர்பாக பணியாளர்களுக்கு பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. அதை மாருதி சுஸுகி பணியாளர்கள் எந்த அளவிற்கு பின்பற்றுகின்றனர்? என்பதற்கு உதாரணமாக ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. கிரிதர் என்பவர் தனது காரை சர்வீசுக்கு விட்டுள்ளார். அதை பிக்அப் செய்ய வந்த மாருதி சுஸுகி பணியாளர், பாதுகாப்பு விதிமுறைகளை முறையாக பின்பற்றியுள்ளார்.

எனவே மாருதி சுஸுகி நிறுவனத்திற்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில், கிரிதர் தனது டிவிட்டர் பக்கத்தில் நடந்த சம்பவத்தை பதிவாக வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: எனது காரை சர்வீசுக்கு பிக்அப் செய்வதற்காக மாருதி நிறுவனம் பணியாளரை அனுப்பியது. முதல் வேலையாக அவர் எனது கைகளை கிருமிநாசினி மூலம் சுத்தம் செய்வதற்கு உதவினார்.

அத்துடன் டோர் ஹேண்டில்கள், கியர் மற்றும் ஸ்டியரிங் வீல் ஆகியவற்றையும் அவர் சுத்தம் செய்தார். அதன் பின்னர் இன்டீரியரை கவரால் மூடினார். அதற்கு பிறகுதான் அவர் காரை சர்வீசுக்கு எடுத்து சென்றார். இது அருமையான பணி. இவ்வாறு கிரிதர் தனது பதிவில் கூறியுள்ளார். இவர் பிரபலமான யூ-டியூபர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தற்போது தனது கோர முகத்தை காட்ட தொடங்கியுள்ளது. இப்படிப்பட்ட சூழலில் நீண்ட நாட்களுக்கு பிறகு, வர்த்தக செயல்பாடுகளை தொடங்கியுள்ள வாகன நிறுவனங்களின் பணியாளர்கள் இப்படி பாதுகாப்பு விதிமுறைகளை முறையாக பின்பற்றுவது பாராட்டப்பட வேண்டிய ஒன்றுதான்.


Click it and Unblock the Notifications








