போலீஸ் அதிரடி... வீட்டில் இருந்து 2 கிலோ மீட்டர் தாண்டி போனா அவ்ளோதான்... எந்த ஊரில் தெரியுமா?

உரிய காரணம் இல்லாமல், வீட்டில் இருந்து 2 கிலோ மீட்டர் தொலைவை தாண்டி சென்றால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்துள்ளனர்.

போலீஸ் அதிரடி... வீட்டில் இருந்து 2 கிலோ மீட்டர் தாண்டி போனா அவ்ளோதான்... எந்த ஊரில் தெரியுமா?

இந்தியாவில் கொரோனா வைரஸ் (கோவிட்-19) தற்போது விஸ்வரூபம் எடுத்து வருகிறது. நாட்டிலேயே மிக கடுமையான பாதிப்பை சந்தித்திருக்கும் மாநிலம் மஹாராஷ்டிராதான். அம்மாநில தலைநகர் மும்பை, கொரோனா வைரஸ் பரவலின் ஹாட்-ஸ்பாட்டாக மாறியுள்ளது. தற்போது ஊரடங்கில் தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளதால், மக்கள் அதிகளவில் வெளியே நடமாடுகின்றனர்.

போலீஸ் அதிரடி... வீட்டில் இருந்து 2 கிலோ மீட்டர் தாண்டி போனா அவ்ளோதான்... எந்த ஊரில் தெரியுமா?

ஊரடங்கிற்கு முன்னர் இருந்த நிலைமையை போன்று, மும்பையில் தற்போது வாகனங்களும் அதிகளவில் இயக்கப்படுகின்றன. கொரோனா வைரஸ் பரவலுக்கு இதுவும் ஒரு காரணமாக அமைந்துள்ளது. எனவே வாகன ஓட்டிகளுக்கு பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை, மும்பை பெரு நகர போலீசார் தற்போது அறிவித்துள்ளனர்.

போலீஸ் அதிரடி... வீட்டில் இருந்து 2 கிலோ மீட்டர் தாண்டி போனா அவ்ளோதான்... எந்த ஊரில் தெரியுமா?

இதன்படி உங்கள் வீட்டில் இருந்து, உரிய காரணம் இல்லாமல், 2 கிலோ மீட்டர் சுற்றளவை கடந்து சென்றால், உங்கள் வாகனம் பறிமுதல் செய்யப்படும். அதாவது அலுவலகம் செல்வது மற்றும் இதர அத்தியாவசிய தேவைகள் இருந்தால், உங்கள் வீட்டில் இருந்து, 2 கிலோ மீட்டர் சுற்றளவை கடந்து செல்லலாம். ஆனால் தேவையில்லாமல் 2 கிலோ மீட்டர் சுற்றளவை கடக்க கூடாது.

போலீஸ் அதிரடி... வீட்டில் இருந்து 2 கிலோ மீட்டர் தாண்டி போனா அவ்ளோதான்... எந்த ஊரில் தெரியுமா?

அப்படி உரிய காரணம் எதுவும் இல்லாமல், வீட்டில் இருந்து 2 கிலோ மீட்டர் சுற்றளவை தாண்டி இயக்கப்படும் வாகனங்கள் அதிரடியாக பறிமுதல் செய்யப்படும். கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து கொண்டே வரும் நிலையில், பீச் மற்றும் பொது இடங்களில் மக்கள் இன்னமும் அதிகளவில் கூடுகின்றனர். இதன் காரணமாகதான் இப்படி ஒரு கட்டுப்பாட்டை மும்பை போலீசார் அறிவித்துள்ளனர்.

போலீஸ் அதிரடி... வீட்டில் இருந்து 2 கிலோ மீட்டர் தாண்டி போனா அவ்ளோதான்... எந்த ஊரில் தெரியுமா?

அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கு ஷாப்பிங் செல்வதாக இருந்தாலும் அல்லது உடற்பயிற்சி செய்ய செல்வதாக இருந்தாலும், அவை அனைத்தும் வீட்டில் இருந்து 2 கிலோ மீட்டர் சுற்றளவிற்குள் நடக்க வேண்டும் என போலீசார் தெரிவித்துள்ளனர். மும்பை காவல் துறையினர் தற்போது அறிவித்துள்ள புதிய கட்டுப்பாடுகள் பின்வருமாறு:

போலீஸ் அதிரடி... வீட்டில் இருந்து 2 கிலோ மீட்டர் தாண்டி போனா அவ்ளோதான்... எந்த ஊரில் தெரியுமா?

1. அத்தியாவசிய தேவைகள் இருந்தால் மட்டுமே பொதுமக்கள் வீடுகளில் இருந்து வெளியே வர வேண்டும். அனாவசியமாக வெளியே வரக்கூடாது.

2. வெளியிடங்களில் பயணம் செய்யும்போது, முக கவசம் அணிவது கட்டாயம்.

போலீஸ் அதிரடி... வீட்டில் இருந்து 2 கிலோ மீட்டர் தாண்டி போனா அவ்ளோதான்... எந்த ஊரில் தெரியுமா?

3. மார்க்கெட், சலூன் உள்ளிட்ட இடங்களுக்கு மக்கள் செல்லலாம். ஆனால் அது வீட்டில் இருந்து 2 கிலோ மீட்டர் சுற்றளவிற்குள் இருக்க வேண்டும். ஷாப்பிங் செய்வதற்காக வீட்டில் இருந்து 2 கிலோ மீட்டர் சுற்றளவை கடப்பதற்கு தடை விதிக்கப்படுகிறது.

4. அதேபோல் உடற்பயிற்சி செய்வதற்கும் மக்கள் செல்லலாம். ஆனால் அதுவும் வீட்டில் இருந்து 2 கிலோ மீட்டர் சுற்றளவிற்குள் இருக்க வேண்டும்.

போலீஸ் அதிரடி... வீட்டில் இருந்து 2 கிலோ மீட்டர் தாண்டி போனா அவ்ளோதான்... எந்த ஊரில் தெரியுமா?

5. அலுவலகம் செல்வது மற்றும் மருத்துவ ரீதியிலான அவசர தேவைகள் இருப்பவர்கள் மட்டும் 2 கிலோ மீட்டர் சுற்றளவை கடந்து செல்வதற்கு அனுமதிக்கப்படுவார்கள்.

6. அனைத்து நேரங்களிலும், சமூக விலகல் விதிகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.

7. மேற்கண்ட விதிமுறைகளை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

8. உரிய காரணம் இல்லாமல், வீட்டில் இருந்து 2 கிலோ மீட்டர் சுற்றளவிற்கு அப்பால் இயக்கப்படும் வாகனங்கள் கண்டிப்பாக பறிமுதல் செய்யப்படும்.

போலீஸ் அதிரடி... வீட்டில் இருந்து 2 கிலோ மீட்டர் தாண்டி போனா அவ்ளோதான்... எந்த ஊரில் தெரியுமா?

இந்த விதிமுறைகளை எல்லாம் மக்கள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் எனவும், தேவையில்லாமல் பயணம் மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும் எனவும் காவல் துறையினர் கேட்டு கொண்டுள்ளனர். அத்துடன் சமூக விலகல் விதிகளை முறையாக பின்பற்றுவதன் மூலம் கொரோனா வைரஸை வீழ்த்த முடியும் எனவும், அந்த பொறுப்பு நமக்கு இருக்கிறது எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

போலீஸ் அதிரடி... வீட்டில் இருந்து 2 கிலோ மீட்டர் தாண்டி போனா அவ்ளோதான்... எந்த ஊரில் தெரியுமா?

மும்பை போலீசார் மட்டுமல்லாது, சென்னை உள்பட நாட்டின் அனைத்து பகுதிகளிலும், அந்தந்த போலீசார் தேவையில்லாத வாகன இயக்கத்தை கட்டுப்படுத்துவதற்கு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தை பொறுத்தவரை ஊரடங்கு விதிமுறைகளை மீறியதாக 5 லட்சத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் அதிரடியாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

Note: Images used are for representational purpose only.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Covid-19: Mumbai Police Announce Travel Restrictions For Motorists. Read in Tamil
Story first published: Monday, June 29, 2020, 14:44 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X