ஆம்புலன்ஸ் டிரைவராக களத்தில் இறங்கி உதவி செய்யும் பிரபல மனிதர்... யார் என தெரிந்தால் சத்தியமா நம்ப மாட்டீங்க!

கோவிட்-19 வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், பிரபல மனிதர் ஒருவர் ஆம்புலன்ஸ் டிரைவராக களத்தில் இறங்கி நோயாளிகளுக்கு உதவி வருகிறார். இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஆம்புலன்ஸ் டிரைவராக களத்தில் இறங்கி உதவி செய்யும் பிரபல மனிதர்... யார் என தெரிந்தால் சத்தியமா நம்ப மாட்டீங்க!

கொரோனா வைரஸ் பிரச்னையால் இந்தியாவின் நிலைமை நாளுக்கு நாள் மோசமடைந்து கொண்டே செல்கிறது. இந்த நேரத்தில் பிரபலங்கள் பலர் மக்களுக்கு உதவிக்கரம் நீட்டி வருகின்றனர். கோவிட்-19 மருத்துவமனைகளை அமைப்பதற்கும், தேவைப்படுபவர்களுக்கு ஆக்ஸிஜன் ஏற்பாடு செய்வதற்கும் பிரபலங்கள் பலர் உதவி செய்து கொண்டுள்ளனர்.

ஆம்புலன்ஸ் டிரைவராக களத்தில் இறங்கி உதவி செய்யும் பிரபல மனிதர்... யார் என தெரிந்தால் சத்தியமா நம்ப மாட்டீங்க!

இந்த சூழலில், கன்னட திரையுலக நடிகர் அர்ஜூன் கவுடா ஆம்புலன்ஸ் டிரைவராக உருவெடுத்துள்ளார். நடிகர்கள் பலர் லட்சக்கணக்கிலும், கோடிக்கணக்கிலும் நன்கொடைகளை வழங்கி வரும் நிலையில், அர்ஜூன் கவுடா ஆம்புலன்ஸ் ஓட்டுனராக களத்தில் இறங்கியிருப்பது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

ஆம்புலன்ஸ் டிரைவராக களத்தில் இறங்கி உதவி செய்யும் பிரபல மனிதர்... யார் என தெரிந்தால் சத்தியமா நம்ப மாட்டீங்க!

கொரோனா வைரஸ் பெருந்தொற்று பிரச்னையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்வதற்காக, நடிகர் அர்ஜூன் கவுடா தற்போது ஆம்புலன்ஸ் ஓட்டுனராக மாறியுள்ளார். நோயாளிகளை மருத்துவமனைகளுக்கு அழைத்து செல்வது, உயிரிழந்தவர்களுக்கு இறுதி சடங்கு செய்வது என பல்வேறு விதங்களிலும் நடிகர் அர்ஜூன் கவுடா உதவி செய்து வருகிறார்.

ஆம்புலன்ஸ் டிரைவராக களத்தில் இறங்கி உதவி செய்யும் பிரபல மனிதர்... யார் என தெரிந்தால் சத்தியமா நம்ப மாட்டீங்க!

இதுகுறித்து நடிகர் அர்ஜூன் கவுடா கூறுகையில், ''நான் ஆம்புலன்ஸ் ஓட்டுனராக ஏற்கனவே மாறி விட்டேன். தற்போது வரை பலருக்கும் உதவி செய்துள்ளேன். எங்கிருந்து வருகிறார்கள்? எந்த மதத்தை பின்பற்றுகிறார்கள்? என்பதை எல்லாம் கடந்து, பாதிக்கப்பட்டவர்கள் யாராக இருப்பினும் அவர்களுக்கு உதவி கிடைப்பதை உறுதி செய்வதற்கு முயற்சித்து வருகிறோம்'' என்றார்.

ஆம்புலன்ஸ் டிரைவராக களத்தில் இறங்கி உதவி செய்யும் பிரபல மனிதர்... யார் என தெரிந்தால் சத்தியமா நம்ப மாட்டீங்க!

தற்போது நிலைமை மிகவும் மோசமாக உள்ளதால், அடுத்த சில மாதங்களுக்கு இந்த உதவியை தொடர்ந்து செய்வதற்கு நடிகர் அர்ஜூன் கவுடா திட்டமிட்டுள்ளார். எந்தெந்த வழிகளில் எல்லாம் முடியுமோ, அந்த வழிகளில் எல்லாம் மக்களுக்கு உதவி செய்வது தனது விருப்பம் எனவும் நடிகர் அர்ஜூன் கவுடா தெரிவித்துள்ளார்.

ஆம்புலன்ஸ் டிரைவராக களத்தில் இறங்கி உதவி செய்யும் பிரபல மனிதர்... யார் என தெரிந்தால் சத்தியமா நம்ப மாட்டீங்க!

இந்த உதவியை செய்வதற்கு தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் பயிற்சியை எடுத்து கொண்டுள்ளதாகவும் நடிகர் அர்ஜூன் கவுடா சமூக வலை தளங்களில் கூறியுள்ளார். இதற்காக நடிகர் அர்ஜூன் கவுடாவிற்கு சமூக வலை தளங்களில் ரசிகர்கள் தங்களது பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

ஆம்புலன்ஸ் டிரைவராக களத்தில் இறங்கி உதவி செய்யும் பிரபல மனிதர்... யார் என தெரிந்தால் சத்தியமா நம்ப மாட்டீங்க!

நடிகர் அர்ஜூன் கவுடா ஆம்புலன்ஸ் முன் நின்று புகைப்படம் எடுத்து கொண்டுள்ளார். பாராட்டு தெரிவித்து வரும் அதே நேரத்தில், அந்த புகைப்படங்களையும் ரசிகர்கள் சமூக வலை தளங்களில் வைரலாக்கி வருகின்றனர். பெருந்தொற்று ஆட்டி படைத்து வரும் நிலையில், ஆம்புலன்ஸ்களுக்கு தற்போது பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

ஆம்புலன்ஸ் டிரைவராக களத்தில் இறங்கி உதவி செய்யும் பிரபல மனிதர்... யார் என தெரிந்தால் சத்தியமா நம்ப மாட்டீங்க!

மேலும் ஆம்புலன்ஸ் டிரைவர்கள் பலரும் கோவிட்-19 தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். குறிப்பாக தலைநகர் டெல்லியில் ஆம்புலன்ஸ் டிரைவர்கள் பலருக்கு கோவிட்-19 தொற்று ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதுபோன்ற இக்கட்டான நேரத்தில் ஆம்புலன்ஸ் டிரைவராக களத்தில் இறங்கியிருக்கும் நடிகர் அர்ஜூன் கவுடா பாராட்டுக்கு உரியவர்தான்.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Covid-19 Second Wave: Kannada Actor Arjun Gowda Turns Ambulance Driver. Read in Tamil
Story first published: Friday, April 30, 2021, 16:39 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X