வேகமெடுக்கும் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை!! தினமும் சுமார் 6,000 ஸ்டீல்பேர்டு முக கவசங்கள் விற்பனை!

ஸ்டீல்பேர்டு நிறுவனத்தின் முக கவச விற்பனை தினமும் 6,000 யூனிட்களை கடப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இதுகுறித்த சுவாரஸ்யமான தகவல்களை இந்த செய்தியில் தொடர்ந்து பார்ப்போம்.

வேகமெடுக்கும் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை!! தினமும் சுமார் 6,000 ஸ்டீல்பேர்டு முக கவசங்கள் விற்பனை!

இந்தியாவில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனால் முக கவசங்களின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக ஸ்டீல்பேர்டு ஹெல்மெட்கள் நிறுவனத்தின் முக கவசங்களின் விற்பனை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது.

வேகமெடுக்கும் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை!! தினமும் சுமார் 6,000 ஸ்டீல்பேர்டு முக கவசங்கள் விற்பனை!

கடந்த ஆண்டு ஏப்ரலில் ஸ்டீல்பேர்டு நிறுவனம் மோட்டார்சைக்கிள் ஹெல்மெட்களுடன் தற்போதைய அசாதாரண சூழலை கருத்தில் கொண்டு மருத்துவ துறைக்கு தேவையான ஹெல்மெட்களையும் தயாரிக்க போவதாக அறிவித்தது.

வேகமெடுக்கும் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை!! தினமும் சுமார் 6,000 ஸ்டீல்பேர்டு முக கவசங்கள் விற்பனை!

இதன்படி ஐந்து வெவ்வேறு விதமான முக கவசங்கள் இந்த நிறுவனத்தில் இருந்து அறிமுகப்படுத்தப்பட்டன. இந்த ஸ்டீல்பேர்டு முக கவசங்கள் மோட்டார்சைக்கிள் பயணத்திற்கானது இல்லை.

வேகமெடுக்கும் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை!! தினமும் சுமார் 6,000 ஸ்டீல்பேர்டு முக கவசங்கள் விற்பனை!

போலீஸார், மருந்தக ஊழியர்கள், சுகாதார துறை பணியாளர்கள் மற்றும் சுத்திகரிப்பு பணியாளர்கள் மட்டுமின்றி பொது மக்களும் வெளியில் வரும் போது அணிந்து வரும் வகையில் ஸ்டீல்பேர்டு நிறுவனம் இந்த முக கவசங்களை வடிவமைத்து விற்பனை செய்து வருகிறது.

வேகமெடுக்கும் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை!! தினமும் சுமார் 6,000 ஸ்டீல்பேர்டு முக கவசங்கள் விற்பனை!

கொரோனா வைரஸின் தாக்கம் மிக அதிகமாக இருந்த கடந்த ஆண்டு மத்தியில் தினமும் 10,000 முக கவசங்களை இந்த ஹெல்மெட் தயாரிப்பு நிறுவனம் விற்பனை செய்தது. அதன்பின் வைரஸ் பரவல் சற்று குறைய ஆரம்பித்ததால் ஸ்டீல்பேர்டு முக கவசங்களின் தேவை சற்று குறைய ஆரம்பித்தது.

வேகமெடுக்கும் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை!! தினமும் சுமார் 6,000 ஸ்டீல்பேர்டு முக கவசங்கள் விற்பனை!

ஆனால் தற்போது கொரோனாவின் இரண்டாவது அலையால், மீண்டும் நோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரிக்க துவங்கியுள்ளதால் ஸ்டீல்பேர்டு முக கவசங்களின் விற்பனை சூடுப்பிடிக்க ஆரம்பித்துள்ளது.

வேகமெடுக்கும் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை!! தினமும் சுமார் 6,000 ஸ்டீல்பேர்டு முக கவசங்கள் விற்பனை!

கடந்த சில வாரங்களாக தினமும் 6,000 முக கவசங்களை ஸ்டீல்பேர்டு நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. இதுகுறித்து ஸ்டீல்பேர்டு ஹெல்மெட்கள் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ராஜீவ் கபூர் கருத்து தெரிவிக்கையில், கடந்த வருடத்தை காட்டிலும் இந்த எண்ணிக்கை இந்த வருடத்தில் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.

வேகமெடுக்கும் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை!! தினமும் சுமார் 6,000 ஸ்டீல்பேர்டு முக கவசங்கள் விற்பனை!

அனைவரும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவும். முகமூடிகளுடன் முக கவசங்களை அணிய வேண்டும் என்று ஸ்டீல்பேர்டு அனைவரை கேட்டு கொள்கிறது என தெரிவித்தார்.

வேகமெடுக்கும் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை!! தினமும் சுமார் 6,000 ஸ்டீல்பேர்டு முக கவசங்கள் விற்பனை!

ஸ்டீல்பேர்டு முக கவசங்கள் அனைத்தும் ஹிமாச்சல பிரதேசத்தில் உள்ள இந்த நிறுவனத்தின் தொழிற்சாலையில் உருவாக்கப்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டு ஆகஸ்ட்டில் மொபைல் போன் இணைப்பு வசதி உடன் புதிய முக கவசத்தை ஸ்டீல்பேர்டு அறிமுகப்படுத்தி இருந்தது.

வேகமெடுக்கும் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை!! தினமும் சுமார் 6,000 ஸ்டீல்பேர்டு முக கவசங்கள் விற்பனை!

இதில் மொபைல் போனிற்கு வரும் அழைப்புகளையும் பாடல்களையும் மொபைல் போனை தொடமலேயே கண்ட்ரோல் செய்ய முடியும் என்கிறது ஸ்டீல்பேர்டு. இது மட்டுமின்றி குழந்தைகளுக்கான முக கவசங்களையும் இந்த நிறுவனம் விற்பனை செய்கிறது.

Most Read Articles

மேலும்... #ஹெல்மெட் #helmet
English summary
Steelbird Face-Shield Daily Sales Cross 6,000 In COVID-19 Second Wave.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X