Just In
- 6 hrs ago
சூப்பர்... மஹிந்திரா நிறுவனத்தின் பாதுகாப்பான கார் செய்த தரமான சம்பவம்... என்னனு தெரியுமா?
- 8 hrs ago
ப்பா... பைக்குகள் என்ன இப்படி இருக்கு!! உலகளவில் அறிமுகமான 2021 மோட்டோ குஸ்ஸி வி9 ரோமர் & வி9 பாப்பர்
- 8 hrs ago
செம கம் பேக்... புதிய தலைமுறை மாடல் வருகைக்கு பின் தூள் கிளப்பும் ஹூண்டாய் கிரெட்டா கார் விற்பனை...
- 10 hrs ago
பிரம்மிப்பா இருக்கு... இந்த நிஸான் டீலர்ஷிப் ஒரே நாளில் இத்தனை மேக்னைட் கார்களை டெலிவரி செய்துள்ளதா?
Don't Miss!
- Lifestyle
வார ராசிபலன் 17.01.2021 முதல் 23.01.2021 வரை – இந்த ராசிக்காரர்களுக்கு லாபம் நிறைந்த வாரமிது…
- Movies
பிக் பாஸ் ஃபினாலேவில் முகேன் ராவ்.. லீக்கான கிராண்ட் ஃபினாலே புகைப்படம்.. ஷூட் ஓவரா?
- News
பிடன் பதவியேற்பதற்கு முன்னர் விமானத்தில் பறக்க தயாராகும் ட்ரம்ப் - எங்கே குடியேறுவார் தெரியுமா
- Sports
அவர்கிட்டயே சிக்குறீங்களே.. இது தேவையா? ஆஸி. வீரரின் வலையில் ரோஹித் சர்மா!
- Finance
ரூ.12,000 கோடி வெயிட்டிங்.. இந்தியாவின் ஒப்புதலுக்காக காத்திருக்கும் சீனா..!
- Education
உள்ளூரிலேயே தமிழக அரசு வேலை ரெடி! விண்ணப்பிக்கலாம் வாங்க!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
20 ஆயிரம் கார்களில் உபேர் செய்து வரும் அதிரடி... கொரோனா வைரஸ் அச்சம் இல்லாமல் நீங்கள் பயணிக்கலாம்...
கொரோனா வைரஸ் அச்சம் இல்லாமல் பயணம் செய்வதற்கான நடவடிக்கைகளை உபேர் நிறுவனம் எடுத்து வருகிறது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் (கோவிட்-19) தற்போது கட்டுக்கடங்காமல் பரவ தொடங்கியுள்ளது. இதன் காரணமாக பலரின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால், ஏராளமான தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளனர். பலருக்கு சம்பளம் குறைக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பிரச்னையால் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளவர்களில், ஆட்டோ மற்றும் டாக்ஸி ஓட்டுனர்கள் முக்கியமானவர்கள். ஊரடங்கு அமலுக்கு வந்த கடந்த மார்ச் 24ம் தேதி முதல் ஆட்டோ, டாக்ஸி ஓட்டுனர்கள் வேலையிழந்தனர். தற்போது ஊரடங்கில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகள் காரணமாக ஆட்டோ, டாக்ஸிகள் ஓட தொடங்கியிருந்தாலும் அவற்றில் பயணிக்க மக்கள் அச்சப்படுகின்றனர்.

எனவே அவற்றின் பாதுகாப்பை அதிகரிப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதன்படி உபேர் நிறுவனம் சுமார் 20 ஆயிரம் கார்களில், பாதுகாப்பு திரைகளை பொருத்தி வருவதாக அறிவித்துள்ளது. உபேர் கார்களில் பயணம் செய்பவர்கள் மற்றும் ஓட்டுனர்களின் பாதுகாப்பை மனதில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

உபேர் நிறுவனம் தெரிவித்துள்ள தகவல்களின்படி, சுமார் 8 ஆயிரம் கார்களில் ஏற்கனவே பாதுகாப்பு திரை பொருத்தப்பட்டு விட்டது. பாதுகாப்பு திரைகளை பொருத்துவதற்கான செலவை உபேர் நிறுவனமே ஏற்றுக்கொள்கிறது. எனவே ஓட்டுனர்கள் இலவசமாக பொருத்தி கொள்ளலாம். கொரோனா வைரஸ் பரவுவதற்கான வாய்ப்புகளை இந்த பாதுகாப்பு திரை குறைக்கும்.

டிரைவர் மற்றும் பயணிகளுக்கு இடையே பொருத்தப்படும் கண்ணாடி போன்ற பிளாஸ்டிக் திரைகள்தான், பாதுகாப்பு திரை என குறிப்பிடப்படுகிறது. இந்த பாதுகாப்பு திரை மூலம் காரின் உட்புறத்தை தனித்தனி பிரிவுகளாக பிரிக்க முடியும். எனவே சமூக இடைவெளியை கடைபிடிக்கவும் இந்த பாதுகாப்பு திரைகள் உதவி செய்கின்றன.

இந்த புதுமையான மற்றும் பாதுகாப்பான முயற்சியை, உபேர் மட்டுமல்லாது, ஆட்டோ, டாக்ஸி ஓட்டுனர்கள் பலரும் முன்னெடுத்து வருகின்றனர். மேலும் சொந்த பயன்பாட்டிற்கு கார் வைத்துள்ளவர்கள் பலரும் கூட தங்கள் வாகனத்தில் இந்த பாதுகாப்பு திரையை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொருத்தி கொண்டிருப்பதை தற்போது காண முடிகிறது.

தமிழக அமைச்சர் சரோஜா கூட தற்போது தனது காரில் இந்த பாதுகாப்பு திரைகளை பொருத்தியுள்ளார். கார் வைத்திருக்கும் பலரும் ஆர்வம் காட்டுவதால், பாதுகாப்பு திரைகளை பொருத்தி தரும் தொழில் தற்போது சூடுபிடித்துள்ளது. ஆனால் பாதுகாப்பு திரை உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும், பொது போக்குவரத்தை பயன்படுத்த மக்கள் அதிகளவில் முன்வருவார்களா? என்பது சந்தேகமே.

கொரோனா அச்சம் காரணமாக சொந்த வாகனங்களில் பயணம் செய்வதைதான் பொதுமக்கள் தற்போது பாதுகாப்பானதாக கருதுகின்றனர். எனவே வரும் மாதங்களில் புதிய கார், பைக் உள்ளிட்ட வாகனங்களின் விற்பனை கணிசமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் பயன்படுத்தப்பட்ட வாகனங்களின் விற்பனை அதிகரிப்பதற்கான வாய்ப்புகளும் உள்ளன.
Note: Images used are for representational purpose only.