கொரோனாவைவிட ஆபத்தானது வேறொன்று இருக்காம்.. டுவிட்டை போட்டு வாங்கி கட்டி கொண்ட பிரபல நிறுவன தலைவர்..

ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் டெஸ்லா தானியங்கி வாகன உற்பத்தி நிறுவனங்களின் தலைவரான எலன் மஸ்க் கொரோனோவைவிட அச்சுறுத்தல் நிறைந்த ஒன்றைப் பற்றி வெளிப்படையாக தெரிவித்திருக்கின்றார். இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

கொரோனாவைவிட ஆபத்தானது வெறொன்று இருக்காம்.. டுவிட்டை போட்டு வாங்கி கட்டி கொண்ட பிரபல நிறுவன தலைவர்..

உலகமே கொரோனோ (கோவிட்-19) வைரஸின் அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ளநிலையில் பிரபல தானியங்கி வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் ஆகிய நிறுவனங்களின் சிஇஓ-வான எலன் மஸ்க், "இந்த வைரஸ் வெறும் அழுத்தம்தான். இந்த தொற்று நோய்குறித்த தேவையற்ற பயம் மனித குலத்திற்கு நல்லதல்ல" என்று கூறியிருக்கின்றார். மேலும், "இதன் வீணான பயம் மனதை கொல்லும்" என்றும் தெரிவித்திருந்தார்.

கொரோனாவைவிட ஆபத்தானது வெறொன்று இருக்காம்.. டுவிட்டை போட்டு வாங்கி கட்டி கொண்ட பிரபல நிறுவன தலைவர்..

கொரோனா வைரஸின் தொற்றால் லட்சக் கணக்கானோர் பாதிக்கப்பட்டிருக்கும்நிலையில், எலன் மஸ்க்-இன் இந்த கருத்து அவரின் டுவிட்டர் பின்தொடர்பவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சையை ஏற்படுத்தியிருக்கின்றது.

தொடர்ந்து இந்த கருத்துக்கான எதிர்ப்புகளை, அந்த டுவிட்டர் பதிவின்ஊடாகவே அவரவர் தங்களின் பதிலடியையும் கொடுத்து வருகின்றனர்.

கொரோனாவைவிட ஆபத்தானது வெறொன்று இருக்காம்.. டுவிட்டை போட்டு வாங்கி கட்டி கொண்ட பிரபல நிறுவன தலைவர்..

அந்தவகையில், எலன் மஸ்க்-இன் டுவிட்டர் தொடர்பாளரான ஒருவர், "உங்களின் 32 மில்லியன் பின்தொடர்பாளர்களையும் சமூகத்தின் பாதிப்புகளை புரிந்து கொள்வதற்கு மட்டும் அறிவுறுத்துங்கள்" என பதிலடி கருத்து தெரிவித்தார்.

அதாவது, அச்சமான சூழ்நிலையை மிகவும் அசாதாரணமானதாக எண்ண வழி வகுக்க வேண்டாம் என்பதன் பொருளாக இந்த கருத்தை அந்த இளைஞர் பதிவிட்டுள்ளார்.

கொரோனாவைவிட ஆபத்தானது வெறொன்று இருக்காம்.. டுவிட்டை போட்டு வாங்கி கட்டி கொண்ட பிரபல நிறுவன தலைவர்..

மற்றொருவர், "விரைவில் மருத்துவமனைகளில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் கூட்டம் அலைமோத இருக்கின்றது. ஆகையால், மருத்துவமனைகளுக்கு உதவி கரங்கள் தேவைப்படுகின்றன. இதுமாதிரியான இக்கட்டான சூழ்நிலையில் உதவுவதற்கான தகவல்களை பரப்புங்கள். சுகாதாரத்துறை பணியாளர்களுக்கு தேவையான உதவியை செய்ய முற்படுங்கள். அவர்களுக்கு தேவையான வளங்களைத் திரட்ட உதவுங்கள்" என கூறியிருந்தார்.

கொரோனாவைவிட ஆபத்தானது வெறொன்று இருக்காம்.. டுவிட்டை போட்டு வாங்கி கட்டி கொண்ட பிரபல நிறுவன தலைவர்..

இவ்வாறு, எலன் மஸ்க்-கின் டுவிட்டர் பதிவிற்கு பல தரப்பில் இருந்து எதிர்ப்பலைகள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன.

இதேபோன்று, கடந்த வாரம் எலன் மஸ்க் அவரின் ஊழியர்களுக்கு மின்னஞ்சல் மெமோவில், கொரோனாவால் இறப்பவர்களைவிட, வாகன விபத்துகளால் இறப்பவர்களே அதிகம் என குறிப்பிட்டிருந்தார். இந்த சர்ச்சை ஓய்வதற்குள்ளாக, தற்போது புதிய சர்ச்சையை அவர் எழுப்பியிருக்கின்றார்.

கொரோனாவைவிட ஆபத்தானது வெறொன்று இருக்காம்.. டுவிட்டை போட்டு வாங்கி கட்டி கொண்ட பிரபல நிறுவன தலைவர்..

கோவிட்-19 வைரஸ் தாக்கத்தால் இதுவரை 6 ஆயிரத்திற்கும் அதிகமானோர் இறந்துவிட்டதாக தகவல்கள் வெளியவந்த வண்ணம் இருக்கின்றது. மேலும், 157 நாடுகளில் பரவிய இந்த கொரோனாவால் இதுவரை 1,69,415 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் தகவல் தெரிவிக்கின்றன. இது நாளுக்கு நாள் புதிய எண்ணிக்கையை அடைந்து வருவதாகவும் அதிர்ச்சி மிகுந்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

கொரோனாவைவிட ஆபத்தானது வெறொன்று இருக்காம்.. டுவிட்டை போட்டு வாங்கி கட்டி கொண்ட பிரபல நிறுவன தலைவர்..

ஆகையால், மக்கள் அனைவரும் வெளியே செல்வதற்கே அஞ்சுகின்றனர். இந்நிலையில், மக்களை அச்சத்தில் இருந்து வெளியேக் கொண்டு வரும் நோக்கில், மிகவும் அக்கரையற்ற தன்மையில் எலன் மஸ்க் கூறியிருப்பது சற்றே வேதனையளிக்கும் வகையில் இருக்கின்றது.

கொரோனாவைவிட ஆபத்தானது வெறொன்று இருக்காம்.. டுவிட்டை போட்டு வாங்கி கட்டி கொண்ட பிரபல நிறுவன தலைவர்..

இருப்பினும், மக்கள் கொரோனாவை நினைத்து வாட வேண்டாம் என்ற நோக்கில் அவர் இந்த கருத்துகளை வெளியிட்டிருக்கலாம் என ஒரு சிலர் எலனிற்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அதேசமயம், எலன் மஸ்க் அவர் வெளியிட்ட பணியாளர்களுக்கான மெமோவில், "கோவிட்-19 வைரஸை அமெரிக்காவின் முதல் 100 சுகாதார அபாயங்களுள் ஒன்றாககூட நினைக்கவில்லை என்று கூறியுள்ளார்.

கொரோனாவைவிட ஆபத்தானது வெறொன்று இருக்காம்.. டுவிட்டை போட்டு வாங்கி கட்டி கொண்ட பிரபல நிறுவன தலைவர்..

ஆனால், அமெரிக்காவிலோ இந்த வைரஸின் தாக்கத்தால் இதுவரை 40க்கும் அதிகமானோர் இறந்திருக்கின்றனர். மேலும், 1,600க்கும் மேற்பட்டோருக்கு வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ஆகையால், நாட்டின் முக்கிய அதிகாரிகள் பலரை அந்நாட்டு அரசு அதிக பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவந்திருக்கின்றது.

கொரோனாவைவிட ஆபத்தானது வெறொன்று இருக்காம்.. டுவிட்டை போட்டு வாங்கி கட்டி கொண்ட பிரபல நிறுவன தலைவர்..

இதைத்தொடர்ந்து, அந்நாட்டின் பிரபல பத்திரிக்கை நிறுவனமான நியூயார்க் டைம்ஸ், "கொரோனாவின் தொற்று வேகமாக இல்லை. அப்படி இருந்திருந்தால் தற்போது வரை 160 மில்லியன் முதல் 214 மில்லியன் வரையிலான அமெரிக்கர்கள் பாதிக்கப்பட்டிருப்பார்கள். இது மிக மோசமான நிலைக்கு வழி வகுத்திருக்கும்" என்று குறிப்பிட்டுள்ளது.

இதனை அந்நாட்டு மருத்துவர்களின் அறிக்கையின் அடிப்படையில் அந்த பத்திரிக்கை நிறுவனம் வெளியிட்டுள்ளது.

கொரோனாவைவிட ஆபத்தானது வெறொன்று இருக்காம்.. டுவிட்டை போட்டு வாங்கி கட்டி கொண்ட பிரபல நிறுவன தலைவர்..

பத்திரிக்கை நிறுவனத்தின் இந்த கூற்றை வைத்தே எலன் மஸ்க் மேற்கூறிய கருத்துகளை வெளியிட்டிருக்கலாம் என தெரிகின்றது.

இருப்பினும், உலக நாடுகள் அனைத்தும் தங்களின் மக்களை பாதுகாப்பான சூழலில் இருக்கும்படி அறிவுறுத்தி வருகின்றது. குறிப்பாக, தேவையற்ற பயணங்கள் மற்றும் அதிக மக்கள் கூடும் இடத்தைத் தவிர்க்கும்படியும் அறிவுறுத்தி வருகின்றன.

Source: ET Auto

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X