மாட்டு பாலில் இருந்து காருக்கு எரிபொருள்? கனடா நிறுவனத்தின் புதிய முயற்சி... சிக்கல்கள் இவ்வளவு இருக்கா!!
பால் மூலம் உற்பத்தி செய்யப்படும் எரிபொருளையும் கார்களுக்கு பயன்படுத்தலாம் என அமெரிக்காவை சேர்ந்த பால் உற்பத்தியாளர் சங்கம் ஒன்று ஓர் சுவாரஸ்யமான தகவலை தெரிவித்துள்ளது. இது சாத்தியமா? என்ற கேள்விக்கான பதிலாக இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி பார்க்கலாம்.
மனிதனுக்கு மிகவும் அத்தியாவசியமான ஒன்று பால். இதனால்தான் நமது தமிழக அரசாங்கத்தில் கூட இதற்கென்றே பால்வளத்துறை பிரத்யேகமாக உள்ளது. ஆனால் தினந்தோறும் நமது டம்ளர்களில் வரும் பாலை பைக்கிலோ அல்லது காரிலோ பயன்படுத்தலாம் என்று என்றாவது யோசித்துள்ளீர்களா? ஆனால் அமெரிக்காவை சேர்ந்த பால் வியாபாரிகள் யோசித்துள்ளனர்.

அமெரிக்கர்கள் உலகிற்கு பல்வேறு புதிய கண்டுப்பிடிப்புகளை வழங்கியுள்ளனர். ஆதலால், அமெரிக்கர்கள் இவ்வாறு யோசிக்கவில்லை என்றால்தான் ஆச்சிரியம். அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தை சேர்ந்த பால் உற்பத்தியாளர்கள் சங்கம் (MMPA) கனடா நாட்டின் ஒண்டாரியோ மாகாணத்தை சேர்ந்த டேரி டிஸ்டில்லர் (Dairy Distiller) என்ற நிறுவனத்துடன் கூட்டணி சேர்ந்துள்ளது.
கனடாவில் இயங்கிவரும் டேரி டிஸ்டில்லர் நிறுவனம் பால் சார்ந்த வோட்காவை உற்பத்தி செய்வதில் பிரபலமானதாக விளங்குகிறது. பாலை மிகவும் வடிக்கட்டிய பின்னர் கிடைக்கக்கூடிய லாக்டோஸை கொண்டு பால்-சார்ந்த வோட்காவை இந்த நிறுவனம் தயாரிக்கிறது. இதற்கு பதிலாக ஈஸ்ட்டை சேர்ப்பதன் மூலம் எத்தனாலை உருவாக்க முடியும் என கூறும் டேரி டிஸ்டில்லர் நிறுவனம் இதற்காகவே அமெரிக்காவை சேர்ந்த மிச்சிகன் பால் உற்பத்தியாளர்கள் சங்கத்துடன் கூட்டணி சேர்ந்துள்ளது.
நமக்கு கிடைத்துள்ள தகவலின்படி, இதற்காக சுமார் 4.1 கோடி டாலர்கள் (இந்திய ரூபாயில் 338 கோடி) செலவில் எத்தனால் தயாரிக்கும் திட்டத்தில் இந்த கூட்டணி உள்ளது. பெட்ரோல் & டீசல் என்ஜின் வாகனங்களை மக்கள் பயன்படுத்துவதை குறைக்கும் முயற்சியில் நமது இந்தியா உள்பட உலகின் பல்வேறு நாடுகள் ஈடுப்பட்டு வருகின்றன. எலக்ட்ரிக் தான் இதற்கு சிறந்த மாற்று எரிபொருள் என உறுதியாகிவிட்டது

இருந்தாலும், அத்தகைய நிலையை எட்டும் வரையில் பெட்ரோல் & டீசலின் பயன்பாட்டை குறைக்கும் முயற்சியும் நடைபெற்று வருகிறது. இந்த முயற்சியில் உருவாகும் வாகனங்களே ஃப்ளக்ஸ்-ஃப்யுல் வாகனங்கள் ஆகும். அதாவது வழக்கமான பெட்ரோல் உடன் எத்தனாலை கலந்து பயன்படுத்தக்கூடிய வாகனங்களே ஃப்ளக்-ஃப்யுல் வாகனங்கள் ஆகும். இதற்கு தேவைப்படும் எத்தனால்கள் பல்வேறு வழிகளில் பெறப்படுகின்றன.
அதில் ஒரு முறையாக பால் மூலம் பெறப்படும் எத்தனால் இருக்கலாம் என்பது ஒண்டாரியோவை சேர்ந்த டேரி டிஸ்டில்லரின் யோசனை ஆகும். இருப்பினும் இது பசுமையான சுற்றுச்சூழலுக்கு ஏற்ற முறையாக இருக்காது. ஏனெனில் பால் மூலம் இவ்வாறான பொருட்களை உற்பத்தி செய்யும்போது கார்பன் உருவாகிறது. கார்பன் பசுமையான சுற்றுச்சூழலுக்கு ஏற்றது கிடையாது.
டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: டேரி டிஸ்டில்லர் நிறுவனம் கூறுவது போல் பால் மூலம் வாகனங்களுக்கான எரிபொருளை பெறுவது தேவையற்ற ஒன்று என்றே நினைக்கிறோம். இதற்கு மேற்கூறப்பட்ட பசுமையற்ற சூழல் ஒரு காரணம். மற்றொரு காரணம் எத்தனாலின் குறைந்த தேவை. தற்சமயம் ஃப்ளக்-ஃப்யுல் வாகனங்களில் வழக்கமான பெட்ரோலில் வெறும் குறைந்த சதவீத அளவிலேயே எத்தனாலை கலந்து பயன்படுத்துகிறோம்.


Click it and Unblock the Notifications