காட்டு கணக்கா சாலையில் அதிக வேகத்தில் சீறி பாய்ந்த கார்! கண்ணிமைக்கும் நேரத்தில் குட்டி உடன் குறுக்கே வந்த பசு
அதிக வேகத்தில் நெடுஞ்சாலையில் கார் ஒன்று சென்றுக் கொண்டிருக்கும் போது குறுக்கே மாடு ஒன்று அதன் குட்டி உடன் நுழையும் வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றது. இந்த சம்பவம் குறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.
சமீப சில காலமாக தெருவில் சுற்றி திரியும் மாடுகளால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதாகக் கூறி சென்னை மாநகராட்சி கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தொடங்கி இருக்கின்றது. குறிப்பாக சாலையில் சுற்றி திரியும் மாடுகளை பறிமுதல் செய்தல் மற்றும் அந்த மாட்டின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்தல் போன்ற நடவடிக்கைகளையே மாநகாட்சி மேற்கொண்டு வருகின்றது.

சாலையில் சுற்றி திரிந்த மாடுகள் சில பொதுமக்களை அச்சுறுத்தும் வகையிலும், சில நிகழ்வுகளில் மனிதர்களை தாக்கியதனாலுமே இந்த கடுமையான நடவடிக்கையில் சென்னையை மாநகராட்சி களமிறங்கி இருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. இதுமட்டுமில்லைங்க, சாலையில் சுற்றி திரியும் மாடுகளால் வாகன ஓட்டிகளும் கடும் சிரமமங்களுக்கு ஆளாகி வருகின்றனர்.
சில நேரங்களில் பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் சாலையில் சுற்றி திரியும் மாடுகள் அமைந்துவிடுகின்றன. இதை உறுதிப்படுத்தும் சமீபத்தில் ஓர் சம்பவம் அரங்கேறி இருக்கின்றது. அதுகுறித்த வீடியோவே தற்போது இணையத்தில் வைரலாகிக் கொண்டிருக்கின்றது. அந்த வீடியோவில், கார் ஒன்று நெடுஞ்சாலையில் அதிக வேகத்தில் பயணித்துக் கொண்டிருக்கும்போது, குறுக்கே மாடு ஒன்று அதன் குட்டியுடன் வந்திருக்கின்றது.

இந்த பதைபதைக்கச் செய்யும் காட்சிகளே இணையத்தில் வெளியாகி இருக்கின்றன. நாட்டில் இதுபோன்ற மாடுகளால் விபத்து சம்பவங்கள் பல அரங்கேறி இருக்கின்றன. அதிர்ஷ்டவசமாக இந்த சம்பவத்தில் யாருக்கும் எந்த ஆபத்தும் ஏற்படவில்லை. குறிப்பாக, மாடு அதன் குட்டியுடன் மீண்டும் சாலையின் மறுபுறத்திற்கு செல்வதை நம்மால் பார்க்க முடிகின்றது.
இதேபோல், வாகனங்களுக்கும் எந்த ஆபத்தும் ஏற்படவில்லை. காரை ஓட்டி வந்த நபர் சாதூர்யமாக செயல்பட்டதனாலேயே பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. மாடுகளால் விபத்தில் சிக்க இருந்திருந்த அந்த கார் கியா செல்டோஸ் என கூறப்படுகின்றது. இந்தியாவின் பெஸ்ட் செல்லிங் எஸ்யூவி ரக கார் மாடல்களில் இதுவும் ஒன்றாகும்.

இந்த காரை ஆபத்தான நேரத்தில் மிக சிறந்த கன்ட்ரோலை அதன் டிரைவருக்கு வழங்கி உதவி இருக்கின்றது. இந்த காரில் பாதுகாப்பான பயண அனுபவத்தை உறுதிப்படுத்தும் விதமாக பல்வேறு பாதுகாப்பு கருவிகள் வழங்கப்பட்டு இருக்கின்றன. ஆறு ஏர் பேக்குகள், அனைத்து வீல்களிலும் டிஸ்க் பிரேக்குகள், டயர் பிரஷ்ஷர் மானிட்டரிங் சிஸ்டம், இஎஸ்சி, விஎஸ்எம் மற்றும் எச்ஏசி என ஏகப்பட்ட அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.
இதுபோன்று இன்னும் சில பாதுகாப்பு அம்சங்கள் கியா செல்டோஸில் வழங்கப்பட்டு இருக்கின்றது. இத்தகைய அம்சங்களே தக்க நேரத்தில் மிக சிறந்த கன்ட்ரோல்களை வழங்கி பெரும் ஆபத்தில் இருந்து காப்பாற்றி இருக்கின்றது. அதேநேரத்தில், ஓட்டுநரின் சாமர்த்தியமும் இந்த விபத்தில் இருந்து அந்த கார் தப்பிக்க மிக முக்கியமான காரணமாக இருக்கின்றது.
இருப்பினும், அந்த கார் மாடின்மீது லேசாக மோதி இருக்கின்றது. இதனால், செல்டோஸின் முன் மற்றும் பக்கவாட்டு பகுதிகளில் லேசாக பாதிப்பு ஏற்பட்டு இருக்கின்றது. அதேநேரத்தில், மாடும் அதன் குட்டியும் ஆபத்தின்றி தப்பி இருப்பது பலருக்கு ஆறுதலாக அமைந்திருக்கின்றது. அடுத்தடுத்த வந்த வாகனங்களும் மாட்டின் வருகையை சுதாரித்துக் கொண்டதன் விளைவாகவே அவை தப்பின என்பது கவனிக்கத்தகுந்தது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் வாகன ஓட்டிகளுக்கு தெருவில் சுற்றி திரியும் நாய், மாடு மற்றும் ஹாயாக நடந்து செல்லும் பாதசாரிகளால் மிக பெரிய சிக்கல்கள் ஏற்பட்ட வண்ணம் இருக்கின்றன. இதனால் தான் சாலையில் பயணிக்கும்போது அதிக கவனம் தேவை என கூறப்படுகின்றது. குறிப்பாக, நெடுஞ்சாலைகளில் பயணிக்கும்போது கட்டுப்படுத்தும் வேகத்தில் பயணிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்படுகின்றது.


Click it and Unblock the Notifications









