அந்த 30,179 பேருல இவரும் ஒருத்தரா!.. நிறுவனத்த விட்டு வெளியே வந்திருந்தாலும் அதோட காரை தேடி போயி வாங்கிட்டாரு!

டெக் மஹிந்திரா (Tech Mahindra) நிறுவனத்தின் முன்னாள் சிஇஓ சிபி குருநானி. இவர் புதிதாக விற்பனைக்கு வந்திருக்கும் மஹிந்திரா எக்ஸ்இவி 9இ எலெக்ட்ரிக் கார் (Mahindra XEV 9e Electric Car)-ஐ வாங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதை உறுதிப்படுத்தக் கூடிய ஓர் பதிவையே அவர் அவருடைய எக்ஸ் கணக்கின் வாயிலாக பகிர்ந்திருக்கின்றார். 'தன்னுடைய அலுவலகத்திற்கு முதல் முறையாக நெபுலா நீல நிறம் கொண்ட எக்ஸ்இவி 9இ காரில் சென்றேன்' என்றே அந்த பதிவில் அவர் தெரிவித்திருக்கின்றார்.

மேலும், அந்த காரில் அவர் பயணிக்கும் வீடியோவையும் வெளியிட்டுள்ளார். இதன் வாயிலாகவே அவர் எக்ஸ்இவி 9இ காரை வாங்கி இருக்கின்றார் என்பது உறுதியாகி உள்ளது. மேலும், இதுவே அவருடைய முதல் மின்சார கார் மாடல் என்பதும் தெரிய வந்திருக்கின்றது. இந்தியாவில் மஹிந்திரா நிறுவனத்தின் இந்த மின்சார கார் மாடலுக்கு மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.

Tech mahindra ex ceo cp gurnani buys xev 9e

இந்த காரை குருநானி மட்டுமல்ல, மஹிந்திரா நிறுவனத்தின் முன்னாள் சிஇஓ பவன் கோயன்கா-வும் சமீபத்தில் வாங்கினார் என்பது கவனிக்கத்தகுந்தது. மஹிந்திரா நிறுவனம் இந்தியாவில் எக்ஸ்இவி 9இ எலெக்ட்ரிக் காரை மட்டுமல்ல அதனுடன் சேர்த்து பிஇ 6 (BE 6) எனும் இ-கார் மாடலையும் நாட்டில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியிருக்கின்றது.

இந்த இரண்டு கார் மாடல்களுக்கும் சிறப்பான வரவேற்பு இ-கார் பிரியர்கள் மத்தியில் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இதை உறுதிப்படுத்தும் விதமாக இந்த கார்களுக்கு புக்கிங் பணிகள் தொடங்கிய முதல் 24 மணி நேரத்திலேயே 30,179 பேர் புக் செய்தனர். எக்ஸ்இவி 9இ மற்றும் பிஇ 6 இரண்டு கார்களுக்கும் கிடைத்த புக்கிங் எண்ணிக்கை ஆகும்.

இதில் 15 ஆயிரத்திற்கும் அதிகமான புக்கிங் எக்ஸ்இவி 9இ காருக்கு கிடைத்தவை ஆகும். இந்த 15 ஆயிரம் பேர்களில் ஒருவராக சிபி குருநானி இருந்திருக்கின்றார். எக்ஸ்இவி 9இ காரை டெலிவரி பெற்றதன் வாயிலாகவே இது உறுதியாகி இருக்கின்றது. எக்ஸ்இவி 9இ இந்தியாவில் ரூ. 21.9 லட்சம் என்கிற ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கின்றது.

இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். பிஇ 6 மாடலைக் காட்டிலும் பெரிய உருவம் கொண்ட எஸ்யூவி காரே எக்ஸ்இவி 9இ ஆகும். இதன் காரணத்தினாலேயே இதனை புக் செய்வோரின் எண்ணிக்கை சற்றே அதிகமாக உள்ளது. இந்த காரை 59 kWh மற்றும் 79 kWh ஆகிய பேட்டரி பேக் ஆப்ஷன்களில் வாங்கிக் கொள்ள முடியும்.

Tech mahindra ex ceo cp gurnani with xev 9e

முதல் பேட்டரி பேக்கில் ஓர் முழு சார்ஜில் 542 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். இரண்டாவது பேட்டரி பேக் தேர்வில் ஓர் முழு சார்ஜில் 656 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும் என்பது கவனிக்கத்தகுந்தது. இப்போதைய நிலவரப்படி மஹிந்திரா நிறுவனம் எக்ஸ்இவி 9இ காரை ரியர் வீல் டிரைவ் வசதியுடன் மட்டுமே விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது.

விரைவில் அனைத்து வீல் இயக்கம் கொண்ட ஆப்ஷனை இந்த காரில் மஹிந்திரா நிறுவனம் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. ஆனால், அது எப்போது அறிமுகம் செய்யப்படும் என்பது பற்றிய விபரங்கள் இன்னும் வெளியாகவில்லை. மிகப் பெரிய உருவம் கொண்ட இந்த எஸ்யூவி காரில் 12.3 அங்குல திரை வழங்கப்பட்டு இருக்கின்றது.

Tech mahindra ex ceo cp gurnani

இது வீட்டில் டிவி பார்க்கின்ற மாதிரியான அனுபவத்தை நமக்கு வழங்கும். இத்துடன், பின் இருக்கையாளர்களுக்கான பொழுதுபோக்கு திரை, ஹெட்ஸ் அப் திரை, ஏஐ (AI) வசதி, 7 ஏர் பேக்குகள் மற்றும் லெவல் 2 வகை அடாஸ் உள்ளிட்டவற்றை வழங்கி இருக்கின்றனர்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மேலே பார்த்ததுபோன்று ஏகப்பட்ட சிறப்பு மற்றும் ஆடம்பர அம்சங்களை எக்ஸ்இவி 9இ கார் மாடல் தன்னுள் தாங்கியிருக்கின்றது. இத்தகைய வாகனத்தையே டெக் மஹிந்திராவின் முன்னாள் சிஇஓ வாங்கி இருக்கின்றார். இவரை போலவே இன்னும் பல பிரபலங்கள் வரும் நாட்களில் வாங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Wednesday, March 26, 2025, 17:03 [IST]
English summary
Cp gurnani former tech mahindra ceo celebrates purchase of mahindra xev 9e electric suv
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X