டன் கணக்கில் எடைக்கொண்ட கிரேன் விழுந்ததால் நசுங்கி போன ஆடி கார்... ஒரு அதிர்ச்சி வீடியோ..!!
டன் கணக்கில் எடைக்கொண்ட கிரேன் விழுந்ததால் நசுங்கி போன ஆடி கார்... ஒரு அதிர்ச்சி வீடியோ..!!
சாலையில் சென்று கொண்டு இருக்கும் ஆடம்பர கார் மீது கிரேன் விழுந்து காரை நசுக்கும் வீடியோ தற்போது சமூகவலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

சீனாவின் சூசாய் மாகாணத்தில் பரபரப்பான சாலையில் வழக்கம் போல கார்கள் சென்றுகொண்டு இருந்தன.
அப்போது அதே சாலையில் 29 வயது இளைஞர் ஒருவர் தனது ஆடம்பர ஆடி கார் மாடலில் சென்று கொண்டு இருந்தார்.

குறைந்த வேகத்தில் சென்ற அந்த கார் மீது, திடீரென மிக நீளமான அதிக கனம் பொருந்திய ராட்சத கிரேன் தவறி விழுந்தது.

கிரேன் விழுந்த மறுகனமே, அந்த ஆடி கார் அப்பளம் போல நொறுங்கியது. கிட்டத்தட்ட 3 விநாடிகளில் காரின் முன்பகுதி முழுவதும் நசுங்கிவிட்டது.

தெள்ளத்தெளிவான காட்சிகளுடன் இந்த விபத்தை விவரிக்கும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளது.

இளைஞர் ஆடி காரை ஓட்டிவந்த பகுதி டிராஃபிக் சிக்னல் இருந்த சாலை என்பதால், இந்த விபத்து அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
அதுவே தற்போது வெளியாகி, சமூக வலைதளங்கள், ஊடகங்கள் மற்றும் சீனாவின் முக்கிய செய்தி நிறுவனங்களில் பரபரப்பாக காட்ட்பட்டு வருகிறது.

இப்படி ஒரு பெரிய விபத்தில் ஆடி காரை ஒட்டி வந்த இளைஞர் படுகாயமடைந்தார். மேலும் எந்த உயிர் சேதமும் ஏற்படவில்லை. கிரேன் காரின் பான்னட் பகுதியில் விழுந்ததால், டிரைவர் இருக்கும் பகுதியில் பெரிய ஆபத்து இருக்கவில்லை என போலீசார் சார்பில் கூறப்பட்டுள்ளது.

கிரேன் விழுந்த அதிர்வில் காரின் சன்ரூஃப் முழுவதுமாக திறந்துகொண்டது. நிலைமையை உணர்ந்து ஓட்டுநர் காரில் இருந்து சட்டென வெளியேறிவிட்டார்.

இந்த விபத்து பற்றி அவர் ஊடகங்களிடம் கூறியிருப்பதாவது
"சாலையில் கிரேன் நிறுத்தப்பட்டு இருப்பதற்கான அறிகுறி எதுவுமில்லை. கிரேன் கார் மீது விழுந்த உடன் எனக்கும் காயங்கள் ஏற்பட்டன".

"சன்ரூஃப் உடைந்திருந்ததால், நிலைமையை உணர்ந்து வலியை பொறுத்துக்கொண்டு நானாக வெளியே வந்தேன்" என்று கூறியுள்ளார்.

விபத்தில் சிக்கிய ஆடி காரின் உரிமையாளர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கால் முறிவு ஏற்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் நின்றுகொண்டு இருந்த கிரேன் திடீரென சாலையில் விழக்காரணம் என்ன? தொழில்நுட்ப கோளாறு ஏதேனும் நடந்துள்ளதா? என்ற ரீதியில் இந்த விபத்து பற்றி சீனாவின் சூசாய் மாகாண காவல்துறை விசாரணையை தொடங்கியுள்ளது.


Click it and Unblock the Notifications