இந்த பிராண்ட் கார் தான் அதிகமா விபத்தில் சிக்குதாம்! வெளியான திடுக்கிடும் தகவல்!

என்னதான் பாதுகாப்பான காராக இருந்தாலும் அதை ஓட்டும் டிரைவருக்கு நல்ல அனுபவம், முதிர்ச்சி மற்றும் தன்நம்பிக்கை கொண்ட டிரைவராக இருக்க வேண்டும். அப்பொழுதுதான் காரை பாதுகாப்பாக அவரால் ஓட்ட முடியும். காரில் ஏகப்பட்ட பாதுகாப்பு அம்சங்கள் இருந்தாலும் அது காரின் பாதுகாப்பிற்கான கேரண்டியை வழங்காது. டிரைவர் தவறு செய்தால் கார் விபத்தில் சிக்க நேரிடும்.

கார் தயாரிப்பு பிராண்டுகளுக்கு தகுந்தார் போல் வாகனம் விபத்தில் சிக்கும் எண்ணிக்கை என்பது மாறுபடுகிறது என சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா. ஆம் குறிப்பிட்ட பிராண்ட் கார்கள் அதிக அளவில் விபத்தில் சிக்குகின்றன என்றும் குறிப்பிட்ட பிராண்டு கார்கள் மிகக் குறைவான எண்ணிக்கையில் தான் விபத்தில் சிக்குகின்றன என்றும் சமீபத்தில் வெளியான ஆய்வில் தெரியவந்துள்ளது.

crash prone car brand

அமெரிக்காவைச் சேர்ந்த லெண்டிங் ட்ரீ என்ற நிறுவனம் சமீபத்தில் ஒரு ஆய்வு ஒன்றை நடத்தியது. இந்நிறுவனம் ஆன்லைன் மூலம் கடன்களை வழங்கும் நிறுவனமாக செயல்பட்டு வருகிறது. குறிப்பாக மோட்டார் வாகனங்களுக்கான கடன்களை இந்நிறுவனம் வழங்குகிறது. இதனால் மோட்டார் துறை குறித்த ஒரு ஆய்வு ஒன்றை நடத்தியது. இந்த ஆய்வில் தான் இப்படியான திடுக்கிடும் தகவல்கள் எல்லாம் வெளியாகி உள்ளன.

இந்த ஆய்வின் முடிவுகளின் படி ஆயிரம் டிரைவர்களில் 23% ஓட்டுனர்கள் டெஸ்லா கார் ஓட்டுநர்கள் தான் விபத்தில் சிக்கி உள்ளார்கள் என தெரியவந்துள்ளது. அதைத் தொடர்ந்து ராம் நிறுவனம் 22% பிடித்துள்ளது. இந்த ஆய்வில் அமெரிக்காவில் விற்பனையாகி வரும் கார் பிராண்டுகள் மட்டுமே உட்படுத்தப்பட்டன விபத்துக்கான காரணம் குறித்த ஆய்வுகள் எல்லாம் நடத்தப்படவில்லை.

crash prone car brand

இதன் மூலம் டெஸ்லா கார்கள் அதிகமாக விபத்தில் சிக்குவது நமக்கு தெரிய வந்துள்ளது. டெஸ்லா கார் தற்போது சர்வதேச அளவில் எலெக்ட்ரிக் வாகன சந்தையில் மிகப்பெரிய நிறுவனமாக இருக்கிறது. மிக அதிக எண்ணிக்கையிலான கார்களை விற்பனை செய்து வருகிறது. இந்த காரில் ஆட்டோ பைலட் மோடு இருக்கிறது. ஆட்டோ பைலட்டில் செல்ல வேண்டிய இடத்திற்கு சரியாக மார்க் செய்து விட்டால் கார் தானாக செல்லும்.

காரை முதன்முதலாக அறிமுகப்படுத்தியது டெஸ்லா நிறுவனம் தான். இதனால் டெஸ்லா நிறுவனத்தின் கார்கள் மீது மக்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. தானாக இயங்கும் கார் என்றால் விபத்தில் சிக்காது என்ற பெயர் இந்த காருக்கு கிடைத்தது. ஆனால் தற்போது வெளியான முடிவுகளின் படி அதிகமாக விபத்து சிக்கும் காராக இது இருக்கிறது.

crash prone car brand

டெஸ்லா நிறுவனம் தற்போது உலகம் முழுவதும் தனது கார்களை விற்பனை செய்ய பல்வேறு திட்டங்களை செய்து வருகிறது. இந்தியாவிலும் டெஸ்லா கார்களை கொண்டு வருவதற்காக இந்தியாவில் ஆலையை அமைத்து கார்களை கொண்டு வர திட்டமிட்டுள்ளது. இதற்காக மத்திய அரசின் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது. டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் இறக்குமதி செய்வதற்கான வரியை குறைக்க சொல்லி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

ஆனால் மத்திய அரசு டெஸ்லா நிறுவனத்திற்காக எந்த வித சிறப்பு சலுகை வழங்காமல் வழக்கமான இறக்குமதி வரியை செலுத்தி காரை விற்பனை செய்ய அறிவுறுத்தியுள்ளது. இதனால் டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் ஆலையை அமைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அந்நிறுவனம் ஆலய அமைத்தால் சென்னை போன்ற தென் மாநிலங்களில் தான் எனது ஆலையை அமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் டெஸ்லா கார்கள் வந்தால் விபத்து எண்ணிக்கை குறையுமா என்பது நிறுவனம் இந்தியாவிற்கு கொண்டுவரும் தொழில்நுட்பத்தை பொறுத்துதான் மாறுபடும். அமெரிக்காவில் டெஸ்லா கார்கள் தானியங்கி கார்களாகவும் மேனுவலாக இயக்கப்படும் கார்களாகவும் விற்பனையாகி வருகின்றன. இதனால் எந்த வகையில் இந்த விபத்து நடந்தது என்ற விவரம் இதுவரை சரியாக தெரியவில்லை.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் தானியங்கி தொழில்நுட்பம் கொண்ட கார்கள் பயன்பாட்டிற்கு வருவது சிரமம் தான் என மத்திய அரசு தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு தொழில்நுட்ப பாதுகாப்பு சிக்கல்கள் இருக்கும் காரணத்தால் மத்திய அரசு அதற்கான அனுமதியை வழங்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் டெஸ்லா கார் இந்தியாவிற்கு வந்தாலும் மேனுவல் டிரைவிங் ஆப்ஷன் மட்டுமே விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கலாம்.

More from DriveSpark

Article Published On: Wednesday, December 20, 2023, 17:32 [IST]
English summary
Crash prone car brand global accident analysis ranking
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X