ட்ரெயிலரில் குற்றுயிரும், கொலை உயிருமாக கிடந்த பிஎம்டபிள்யூ கார்கள்!!
உளவுத் துறை குழுவினரின் சாகசங்களை அடிப்படையாகக் கொண்டு வெளியிடப்பட்டு வரும் மிஷன் இம்பாஸிபிள் ஹாலிவுட் படங்கள் உலக அளவில் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவை பெற்றவை. அந்த வரிசையில், டாம் க்ரூஸ் கதாநாயகனாக நடித்து வரும் மிஷன் இம்பாஸிபிள் படத்தின் 5ம் பாகத்தின் படப்பிடிப்புகள் தற்போது தீவிரமாக நடந்து வருகின்றன.
அடுத்த ஆண்டு டிசம்பர் 25ந் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகையன்று மிஷன் இம்பாஷிபிள் படத்தின் 5ம் பாகம் திரைக்கு வர இருக்கிறது. இந்த நிலையில், இந்த படத்தின் சாகச காட்சிகளுக்காக புதிய பிஎம்டபிள்யூ கார்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அப்படி படப்பிடிப்பின்போது பயன்படுத்தப்பட்டு கடுமையாக சேதமடைந்த கார்களின் புகைப்படங்களை இணையதளம் ஒன்று வெளியிட்டுள்ளது. இந்த கார்களின் பின்னணியில் இருக்கும் ஒரு சில பின்னணி தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

மொராக்கோவில் படப்பிடிப்பு
மொராக்கோவில் நடந்த படப்பிடிப்பின்போது இந்த கார்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.

கார் மாடல்
ட்ரெயிலரில் குற்றுயிராக இருந்த கார்கள் புதிய தலைமுறை பிஎம்டபிள்யூ எம்3 எஃப்80 மாடல்கள் என்பது தெரியவந்துள்ளது.

பிஎம்டபிள்யூ 3 சீரிஸ்
இந்த கார்கள் அடிப்படையில் பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் கார்கள் என்றும், அதில் எம்3 காரின் பாடி, வீல்கள், பிரேக்குகளை பொருத்தி மாற்றியுள்ளனர்.

தயாரிப்பு செலவீனம்
இதுபோன்று கார் சேஸிங் காட்சிகளில் பன்படுத்தப்படும் கார்கள் கடுமையாக சேதமடையம். இதை கருத்தில்கொண்டு தயாரிப்பு செலவீனத்தை கட்டுப்படுத்தும் வகையில் பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் கார்களை எம்3 கார்களை போன்று மாற்றி படப்பிடிப்பை நடத்தி வருகின்றனர்.

சகஜம்...
ஹாலிவுட் படங்களில் விலையுயர்ந்த கார்களை சேஸிங் என்ற பெயரில் அள்ளி நொறுக்குவது சகஜம். ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் படத்தின் ஒரு காட்சிக்காக 132 கார்களை நொறுக்கித் தள்ளியதாக செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.
Source: motor.es


Click it and Unblock the Notifications








