காயலான் கடைக்கு போக வேண்டிய கார ஷோரூம் கண்டிஷனுக்கு மாத்தீட்டாங்க! இவ்ளோதான் செலவு ஆச்சா!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று மஹிந்திரா ஸ்கார்பியோ (Mahindra Scorpio). இது எஸ்யூவி (SUV) ரகத்தை சேர்ந்த கார் ஆகும். இதன் முரட்டுத்தனமான தோற்றமும், அட்டகாசமான செயல்திறனும்தான், வாடிக்கையாளர்களை வெகுவாக கவர்ந்து இழுக்கும் முக்கியமான அம்சங்களாக இருக்கின்றன.

அப்படி வாடிக்கையாளர் ஒருவர் ஆசை ஆசையாக வாங்கிய மஹிந்திரா ஸ்கார்பியோ கார் ஒன்று விபத்தில் உருக்குலைந்து போய் விட்டது. ஆனால் புனே (Pune) நகரில் இயங்கி வரும் ப்ரோட்டோமோட்டிவ் (Brotomotiv) என்ற நிறுவனம் விபத்தில் சிக்கிய மஹிந்திரா ஸ்கார்பியோ காரை ஷோரூம் கண்டிஷனுக்கு மாற்றி அசத்தியுள்ளது.

Crashed Mahindra Scorpio SUV

சாலை விபத்தில் சிக்கிய மஹிந்திரா ஸ்கார்பியோ கார், எப்படி படிப்படியாக ஷோரூம் கண்டிஷனுக்கு மாற்றப்பட்டது? என்பதை விளக்கும் விரிவான வீடியோ, யூடியூப் (YouTube) தளத்தில் உள்ள ப்ரோட்டோமோட்டிவ் நிறுவனத்தின் சேனலில் பதிவிடப்பட்டுள்ளது. இது குறித்த சுவாரஸ்யமான தகவல்களின் தொகுப்புதான் இந்த செய்தி.

ப்ரோட்டோமோட்டிவ் என்பது கார் பெயிண்டிங், டீடெய்லிங் மற்றும் ரிப்பேர் ஆகிய விஷயங்களில் நிபுணத்துவம் பெற்ற நிறுவனம் ஆகும். எனவே உருக்குலைந்த மஹிந்திரா ஸ்கார்பியோ காரை அவர்கள் நம்பவே முடியாத அளவிற்கு புத்தம் புதிது போல மாற்றி விட்டனர். இது அவர்களின் கடின உழைப்பை காட்டுகிறது என்பதில் துளியும் சந்தேகம் இல்லை.

Mahindra Scorpio SUV

இத்தனைக்கும் இது மஹிந்திரா ஸ்கார்பியோ காரின் பழைய தலைமுறை மாடல் ஆகும். எனவே மஹிந்திரா நிறுவனத்திடம் இருந்து உண்மையான பாகங்களை (Genuine Parts) பெறுவதில் நிறைய பிரச்னைகள் இருந்துள்ளன. இந்த சவால்கள் அனைத்தையும் கடந்து, மஹிந்திரா ஸ்கார்பியோ காரை அவர்கள் ஷோரூம் கண்டிஷனுக்கு கொண்டு வந்துள்ளனர்.

நிறைய டெக்னீசியன்கள் ஒன்றிணைந்து இந்த சவாலான விஷயத்தை சாத்தியப்படுத்தியுள்ளனர். க்ரில், ஹெட்லைட், பம்பர் மற்றும் ஃபெண்டர்கள் என சேதம் அடைந்த பாகங்கள் அனைத்தையும் அவர்கள் முதலில் அகற்றி விட்டனர். இதன் பின் பணிகளை எளிதாக மேற்கொள்ள ஏதுவாக இருதயம் போன்ற இன்ஜினையும் அவர்கள் அகற்றி விட்டனர்.

விபத்தில் சேதம் அடைந்த மஹிந்திரா ஸ்கார்பியோ காரின் சேஸிஸ் கூட 'பெண்ட்' ஆகியிருந்தது. அதுவும் இந்த பணிகளில், ரீஅலைன் செய்யப்பட்டுள்ளது. தேவையான பணிகள் எல்லாம் முடிந்த பிறகு, இன்ஜின் உள்ளிட்ட பாகங்களை அவர்கள் மஹிந்திரா ஸ்கார்பியோ காரிலேயே மீண்டும் பொருத்தி விட்டனர்.

இயந்திர மற்றும் கட்டமைப்பு ரீதியிலான பணிகள் எல்லாம் முடிந்த பிறகு, மஹிந்திரா ஸ்கார்பியோ காரில் முழு பெயிண்ட் வேலைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த மஹிந்திரா ஸ்கார்பியோ காரில், பியர்ல் ஒயிட் பெயிண்ட் அடிக்கப்பட்டுள்ளது. இறுதியில் நம்பவே முடியாத அளவிற்கு இந்த மஹிந்திரா ஸ்கார்பியோ கார், புத்தம் புதியது போல மாறி விட்டது.

இந்த வீடியோவை பார்க்கும்போதே, டெக்னீசியன்கள் எவ்வளவு கடுமையாக உழைத்துள்ளனர்? என்பது நமக்கு நன்றாக புரிகிறது. ஆனால் வெறும் 1.80 லட்ச ரூபாய் செலவில் அவர்கள் இந்த மேஜிக்கை நிகழ்த்தியுள்ளனர் என்பது சற்று ஆச்சரியமாகதான் உள்ளது. இதில் முழு பெயிண்ட் வேலைப்பாடுகளுக்கான கட்டணம் அடங்காது என்பது குறிப்பிடத்தக்கது.

விபத்தில் சேதம் அடைந்த மஹிந்திரா ஸ்கார்பியோ காரின் உரிமையாளர் அதற்கு தனியாக கட்டணம் செலுத்தியுள்ளார். எப்படியோ ஓரளவிற்கு குறைவான செலவில், அவர் தனது காரை மீண்டும் புதியது போல மாற்றி விட்டார். மஹிந்திரா ஸ்கார்பியோ காருக்கு புத்துயிர் கொடுக்கும் பணிகளின் வீடியோ சமூக வலை தளங்களில் பலரையும் கவர்ந்துள்ளது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: பல்வேறு கட்ட பணிகள் முடிந்த பின்னர், இந்த வீடியோவின் இறுதியில், மஹிந்திரா ஸ்கார்பியோ கார் புதிய அவதாரம் எடுத்திருப்பதை நம் கண்களுக்கு காட்டுகின்றனர். இதை பார்க்கும்போதே டெக்னீசியன்கள் எவ்வளவு கடுமையான உழைத்துள்ளனர்? என்பது நமக்கு தெளிவாக புரிகிறது. இதற்காக அவர்களுக்கு பாராட்டுக்கள்.

More from DriveSpark

Article Published On: Saturday, December 2, 2023, 19:26 [IST]
English summary
Crashed mahindra scorpio suv restored to showroom condition viral video
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+