மஹிந்திரா நிறுவனத்துக்கு இது பெரிய அசிங்கம் - ராட் கம்பியால் இந்த அளவிற்கு பண்ண முடியுமா?

இன்றைய கால வாகனங்களில் பயன்படுத்தப்படும் உலோகங்கள் மிகுந்த விவாதத்திற்கு உள்ளானதாக உள்ளன. ஏனெனில், அதிக மைலேஜ் கிடைக்க வேண்டும் என்பதற்காகவும், வேகமாக இயங்க வேண்டும் என்பதற்காகவும் முடிந்தவரையில் வாகனங்கள் எடை குறைவானதாக உருவாக்கப்படுகின்றன. இருப்பினும், மஹிந்திரா வாகனங்கள் வலிமையானவை என்கிற பேச்சு உள்ள நிலையில், மஹிந்திரா வாகனங்களின் தரத்தை சந்தேகிக்கும் வகையில் ஒரு சம்பவம் ராஜஸ்தானில் நடந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக இணையத்தில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.

இந்திய சாலைகளில் விபத்துகளுக்கு பஞ்சமே கிடையாது என்றே சொல்ல வேண்டும். குறைந்தது ஒரு சாலை விபத்தை பற்றி ஆவது தினந்தோறும் செய்திகளில் பார்க்க முடிகிறது. இதனை தவிர்க்கவே, நாடு முழுவதும் சாலைகள் விரிவாக்கம் செய்யப்பட்டு வருகின்றன. சாலைகள் எவ்வளவு தரமானதாக போடப்பட்டாலும், வாகன ஓட்டிகளின் கைகளில் தான் சாலை விபத்துகள் நடப்பதும், நடக்காததும் இருக்கிறது.

mahindra thar accident in rajasthan

இந்தியாவில் தினந்தோறும் நூற்றுக்கணக்கான சாலை விபத்துகள் நடக்கின்றன. அவற்றிற்கான காரணங்கள் என்ன? என அவை ஒவ்வொன்றை பற்றியும் பார்ப்பது முடியாத காரியம் ஆகும். ஆனால், அவற்றுள் கவனத்தை பெறும் விபத்துகளை பற்றி மறக்காமல் நமது செய்தித்தளத்தில் பார்த்து வருகிறோம். அந்த வகையில், ராஜஸ்தானில் தற்போது ஒரு விபத்து பெரிய அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தில் நெடுஞ்சாலை ஒன்றில் சென்றுக் கொண்டிருந்த மஹிந்திரா தார் வாகனம் ஒன்று சாலையின் ஓரத்தில் இருந்த இரும்பு தடுப்பு கம்பியில் மோதி விபத்திற்கு உள்ளாகி உள்ளது. தினந்தோறும் பல்வேறு விபத்துகள் இவ்வாறுதான் நடக்கின்றன... இதில் என்ன சுவாரஸ்யம் உள்ளது என நீங்கள் கேட்கலாம். ஆனால், இதில்தான் விஷயமே உள்ளது.

mahindra thar accident in rajasthan

ஏனெனில், வாகனம் மோதியதில் அந்த தடுப்பு கம்பி ஆனது தார் வாகனத்தினுள் நுழைந்து மறுபக்கம் வெளியே வந்துள்ளது. பொதுவாக, இவ்வாறு வாகனம் மோதினால் தடுப்பு கம்பி வளைந்து போவது வழக்கம். ஆனால் இந்த சம்பவத்தில், தார் வாகனத்தை கிழித்துக் கொண்டு வாகனத்திற்கு மறுப்பக்கம் வெளியே வந்திருப்பது ஆச்சிரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான வீடியோ இன்ஸ்டாகிராமில் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

ராஜஸ்தானில் சரியாக எந்த இடத்தில் இந்த விபத்து நடந்துள்ளது என்பது தெரியவில்லை. அதேபோல், இந்த விபத்துக்கான உண்மையான காரணம் என்ன என்பதும் தெரியவில்லை. ஏனெனில், இன்ஸ்டாகிராமில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவில், விபத்துக்கு பிந்தைய வாகனத்தின் நிலை மட்டுமே காட்டப்பட்டுள்ளது. இந்த விபத்து நிச்சயமாக அதிவேகத்தில் நடந்திருக்கும்.

mahindra thar accident in rajasthan

ஏனெனில், அப்போதுதான் இந்த அளவிற்கு உலோகத்தால் வாகனத்தை துளைத்துக் கொண்டு சென்றிருக்க முடியும். சம்பவத்தின்போது, இந்த மஹிந்திரா தார் வாகனத்தில் சென்றிருப்பவர்களுக்கு கொஞ்சம் அதிர்ஷ்டம் இருந்துள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். ஏனெனில், இவ்வாறு தடுப்பு கம்பி வாகனத்தினுள் நுழைய நேர்ந்தால், வாகனத்தினுள் இருக்கும் எதாவது ஒரு பாகத்தில் பட்டு வாகனத்தை புரட்டி போட்டிருக்கும்.

ஆனால் இந்த சம்பவத்தில், நல்ல வேளையாக வாகனத்தை துளைத்துக் கொண்டு சென்றுள்ளது. இதில் இருந்து, வாகனத்தினுள் கம்பி நுழைந்த பாதையில் வலிமையான எந்த பொருளும் இல்லை என்பதை அறிய முடிகிறது. இந்த மஹிந்திரா தார் வாகனத்தின் இடதுபக்க முன் சக்கரத்திற்கு மேலே நுழைந்து தடுப்பு கம்பி பின்பக்க வலதுபக்கத்தில் வெளியே வந்துள்ளது. இந்த தடுப்பு கம்பியை டாடா மோட்டார்ஸ் உருவாக்கியது என்றும், டாடா மோட்டார்ஸ் vs மஹிந்திரா என்றும் இந்த சம்பவத்தை நெட்டிசன்கள் பலரும் கிண்டலடித்து வருகின்றனர்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இவ்வாறான சம்பவம் இலட்சத்தில் ஒருமுறை தான் நடக்கும். ஏனெனில், ஏற்கனவே கூறியதுபோல் இத்தகைய மோதலில் வாகனம் ஒருபக்கமாக கவிழ்வதற்கே வாய்ப்புகள் அதிகம் ஆகும். இவ்வாறு நடப்பது மிகவும் அரிது. இந்த சம்பவத்தில், வாகனத்தினுள் இருந்த பயணிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை. எனவே தான் இந்த தாரில் பயணித்தவர்கள் அதிர்ஷ்டம் செய்துள்ளனர் என கூறுகிறோம். இருப்பினும், இந்த தார் வாகனத்தை பழுது பார்ப்பதற்கு இலட்ச ரூபாய் வரையில் செலவாகலாம்.

More from DriveSpark

Article Published On: Wednesday, June 26, 2024, 11:00 [IST]
English summary
Craziest mahindra thar accident in rajasthan video went viral check all details here
மேலும்... #off beat #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X