பஞ்சாபில் பயங்கரம்... கண்மூடித்தனமாக வந்து 2 கார்களை தூக்கிய டிரக்

Written By:

பஞ்சாபில், டிரக் மோதி இரண்டு கார்கள் தாறுமாறாக சேதமடைந்தது. இதில், இரண்டு கார்களில் பயணித்தவர்கள் அதிர்ஷ்டவசமாக சிறு காயங்களுடன் உயிர் தப்பினர்.

பஞ்சாப் மாநிலம், ராஜ்புரா என்ற இடத்தில் நடந்த விபத்தின் படங்களை டீம் பிஎம்சபி தளத்தின் உறுப்பினர் ஒருவர் பகிர்ந்து கொண்டுள்ளார். இந்த விபத்தில் சிக்கிய நிசான் சன்னி கார் மோதல் தாக்கத்தை வெகுவாக உள்வாங்கி பயணிகளை காப்பாற்றியதே இப்போது பெரும் விஷயமாக பார்க்கப்படுகிறது.

 காத்தருளிய செடான் டிசைன்

காத்தருளிய செடான் டிசைன்

அதிக பொருட்களை எடுத்துச் செல்வதற்கு மட்டுமில்லாது, இதுபோன்று பின்னால் வந்து பெரிய வாகனம் மோதிய போதும் நிசான் சன்னி காரில் பயணித்தவர்களுக்கு அதிக பாதிப்பு ஏற்படவில்லை. டிரக் மோதியதன் தாக்கத்தை முழுவதுமாக நிசான் சன்னி காரின் பூட் ரூம் பகுதி உள்வாங்கிக் கொண்டது. அதுமட்டுமில்லை...

இன்னோவாவை தூக்கிய சன்னி

இன்னோவாவை தூக்கிய சன்னி

டிரக் வேகமாக பின்னால் மோதிய வேகத்தில் முன்னால் இருந்த டொயோட்டா இன்னோவா காரின் பின்புறத்தில் சன்னி கார் பலமாக மோதியுள்ளது. அப்போது, மோதிய வேகத்தில் நிசான் சன்னி இன்னோவா காரை அலேக்காக தூக்கியது.

பில்டிங் ஸ்ட்ராங்

பில்டிங் ஸ்ட்ராங்

இந்த பயங்கர விபத்தில் நிசான் சன்னியின் முன்புறத்தில் இருந்தவர்கள் தப்பினர். ஏனெனில், நிசான் சன்னியின் வலுவான ஏ பில்லர் மற்றும் மோதல் தாக்கத்தை உள்வாங்கிக் கொள்ளும் க்ரம்பிள் ஸோன் பகுதிகள் இன்னோவா காரின் எடையை வெகுவாக தாங்கிக் கொண்டதால் பயணிகள் மற்றும் ஓட்டுனர் தப்பியதாக சம்பவத்தை பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

கார்கள் கடும் சேதம்

கார்கள் கடும் சேதம்

இது மிகவும் பயங்கர விபத்தாக இருந்தாலும், அதிர்ஷ்டவசமாக யாருக்கும் அதிக பாதிப்பு ஏற்படவில்லை. ஆனால், இந்த விபத்தில் நிசான் சன்னி மற்றும் டொயோட்டா இன்னோவா கார்களின் முன்புறம் மற்றும் பின்புறம் கடுமையாக சேதமடைந்தது. இருப்பினும், பயணிகளுக்கு ஆபத்து அதிகம் ஏற்படவில்லை என்பதே ஆறுதல்.

 

Images Source: Team BHP

மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Crazy Car Accident In Punjab.
Story first published: Monday, July 20, 2015, 9:52 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark