கூகுளிலும் கிடைக்காத ஆட்டோமொபைல் வரலாற்று சுவாரஸ்யங்கள்!!

Written By:

ஆட்டோமொபைல் உலகின் வரலாற்றைத் தோண்ட தோண்ட ஆச்சரியத்தக்க விஷயங்கள் நம்மை பிரமிக்க வைக்கிறது. 

அந்த வகையில், எமக்கு கிடைத்த சில சுவாரஸ்யங்களை இங்கே பகிர்ந்து கொள்கிறோம். இதுவரை நீங்கள் கேட்டிராத சில சுவாரஸ்யங்களும் இந்த செய்தித் தொகுப்பில் வியக்க வைக்கும்.

01. திண்டாடிய ஃபோக்ஸ்வேகன்

01. திண்டாடிய ஃபோக்ஸ்வேகன்

இரண்டாம் உலகப்போருக்கு முன் ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் மீது செக்கோஸ்லோவாக்கியாவை சேர்ந்த தத்ரா நிறுவனம் காப்புரிமை வழக்கு தொடர்ந்தது. அதாவது, ஃபோக்ஸ்வேகன் தயாரித்த பீட்டில் கார், தத்ராவின் டி97 காரின் டிசைனை ஒத்திருந்ததாக தகராறு ஏற்பட்டது. 1938ம் ஆண்டு செக்கோஸ்லோவாக்கியா மீது ஜெர்மனி படையெடுத்ததையடுத்து, அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

 02. நிசான் நம்பர் ரகசியம்

02. நிசான் நம்பர் ரகசியம்

கார் பந்தயங்களில் நிசான் நிறுவனம் 23 என்ற எண்ணை பயன்படுத்துகிறது. இதில், 2 என்பது ni என்றும், san என்பது மூன்றையும் குறிக்கிறதாம். அதாவது, 23 என்பது நி- சான் என்று பொருள்படுகிறது.

 03. பீட்டில் ஸ்விம்வேகன்

03. பீட்டில் ஸ்விம்வேகன்

ஃபோக்ஸ்வேகன் பீட்டில் கார் உற்பத்திக்கு தயாராக இருந்தநிலையில், இரண்டாம் உலகப் போர் மூண்டுவிட்டது. அப்போது, பீட்டில் கார் தயாரிக்க வைத்திருந்த உதிரிபாகங்களை வைத்து, தரையிலும், தண்ணீரிலும் செல்லும் ஸ்விம்வேகன் வாகனத்தை தயாரித்தனர். அது, பீட்டில் காரின் ஆம்பிபியஸ் வெர்ஷன். மொத்தம் 14,000 கார்கள் போரின்போது பயன்படுத்தப்பட்டதாம்.

04. கடைசி கேசட் ப்ளேயர் கார்

04. கடைசி கேசட் ப்ளேயர் கார்

கேசட் ப்ளேயருடன் வந்த கடைசி கார் மாடல் லெக்சஸ் எஸ்சி430. 2010ம் ஆண்டு வரை இந்த மாடல் விற்பனையில் இருந்தது.

05. பல்பு வாங்கும் சுபரூ

05. பல்பு வாங்கும் சுபரூ

05. அமெரிக்காவில் அதிக அளவில் போலீசாரிடம் பிடிபட்டு, பல்பு வாங்கி மாடல் சுபரூ டபிள்யூஆர்எக்ஸ் கார் மாடல்தானாம். அங்கு விற்பனை செய்யப்பட்டிருக்கும் மூன்றில் ஒரு பங்கு உரிமையாளர்கள் விதிமீறல்களுக்காக அதிக அளவில் பிடிப்பட்டவர்களாக இருக்கின்றனர்.

06. உள்நாட்டு தயாரிப்பு

06. உள்நாட்டு தயாரிப்பு

06. அமெரிக்க பிராண்டான செவர்லே கமாரோவில் பயன்படுத்தப்படும் உள்நாட்டு உதிரிபாகங்களைவிட, அங்கு விற்பனையாகும் ஜப்பானிய பிராண்டு கார்களான டொயோட்டா கேம்ரி மற்றும் ஹோண்டா அக்கார்டு கார்களில் பயன்படுத்தப்படும் அமெரிக்க உதிரிபாகங்கள் அதிகமாம். செவர்லே கமாரோவில் 68 சதவீதமும், டொயோட்டா கேம்ரியில் 78.5 சதவீதம், ஹோண்டா அக்கார்டு காரில் 76 சதவீத உதிரிபாகங்கள் உள்நாட்டிலிருந்து சப்ளை பெறப்படுகின்றது.

07. ஃபோர்டு மஸ்டாங் பெருமை

07. ஃபோர்டு மஸ்டாங் பெருமை

07. ஃபோர்டு மஸ்டாங் காரை வாங்கி முதல் பள்ளி ஆசிரியை கெயில் வைஸ். 1964ம் ஆண்டு 3,419 டாலர் விலையில் அந்த காரை அவர் வாங்கினார். அப்போது, ஒரு பள்ளி ஆசிரியர் விலையுயர்ந்த ஃபோர்டு மஸ்டாங் காரை வாங்கியது பரபரப்பாக பேசப்பட்டது. அந்த காரை இன்னமும் அவர் வைத்திருக்கிறார். இதுவரை 1.10 லட்சம் கிமீ தூரம் அந்த கார் ஓடியிருக்கிறது.

08. போலீஸ் கார்

08. போலீஸ் கார்

2008ம் ஆண்டு இத்தாலி போலீசாருக்கு அந்நாட்டை சேர்ந்த பிரபல சூப்பர் கார் தயாரிப்பு நிறுவனமான லம்போர்கினி கல்லார்டோ எல்பி560-4 கார் ஒன்றை வழங்கியது. விசேஷமாக தயாரிக்கப்பட்ட அந்த காரில் கண்காணிப்பு கேமரா, துப்பாக்கி ஸ்டான்டு, ஜிபிஎஸ் சாதனம், தானமாக பெறப்படும் உறுப்புகளை எடுத்துச் செல்வதற்கான குளிர்சாதன பெட்டி போன்ற வசதிகள் இருந்தன. அதுதான் உலகின் அதிவேக போலீஸ் கார் என்ற பெருமையை அப்போது பெற்றிருந்தது. ஆனால், துரதிருஷ்டவசமாக அந்த ஆண்டிலேயே அந்த கார் விபத்தில் சிக்கி நொறுங்கியது.

09. டுபாக்கூர் சவுண்டு

09. டுபாக்கூர் சவுண்டு

பெர்ஃபார்மென்ஸ் கார்களை வாங்குவோர் அதன் எக்ஸ்சாஸ்ட் சப்தம் பற்றி பெருமைபட பேசுவர். நாமும் சில வேளைகளில் சூப்பர் கார்களின் எக்ஸ்சாஸ்ட் சப்தத்தை எங்கேயாவது கேட்டால் லயித்து போவதுண்டு. அதுபோன்ற, அதிசக்திவாய்ந்த பிஎம்டபிள்யூ எம்-5 காரில் பயன்படுத்தப்படும் எஞ்சின் மிகவும் சப்தம் குறைவானது. எனவே, ஓட்டுனருக்கு செயல்திறனை உணர்வதற்கும், திருப்தியை வழங்குவதற்கும், எஞ்சின் சப்தம் ஸ்பீக்கர்கள் மூலம் வழங்கப்படும். ஆக்சிலரேட்டரை அதிகரிக்கும்போது ஸ்பீக்கர்களிலிருந்துதான் எக்ஸ்சாஸ்ட் சப்தம் போலியாக வெளியில் கேட்கும்.

10. ஜாம்பவான் ஏற்பட்ட நிலை

10. ஜாம்பவான் ஏற்பட்ட நிலை

செவி வேகா, போன்டியாக் ஜிடிஓ, ஃபயர்பேர்டு, டிலோரியன் டிஎம்சி -12 போன்ற கார்களை வடிவமைத்து புகழ்பெற்ற ஜான் டீலோரியன் 1982ல் போதை மருந்து கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணையில், நொடித்து போன தனது நிறுவனத்திற்கு நிதி ஆதாரம் திரட்டவே இந்த செயலில் இறங்கியதாக தெரிவித்தார்.

11. ஃபோர்டு டி மாடல்

11. ஃபோர்டு டி மாடல்

அனைவருக்கும் கார் என்ற கொள்கையுடன் ஹென்றி ஃபோர்டு வடிவமைத்த புரட்சிகர கார் மாடல்தான் ஃபோர்டு டி மாடல். வரலாற்றில் முக்கிய இடம்பிடித்த இந்த காரை ஒரு பர்ஃபெர்ட்டான கார் மாடலாக ஆட்டோமொபைல் துறையினர் கூறுவதில்லை. அதற்கு காரணம். இந்த காரை ஏற்றமான சாலைகளில் ஓட்டும்போது எஞ்சினுக்கு எரிபொருள் செல்லாமல் நின்றுவிடும். அதனால், மலைச் சாலைகளில் செல்லும்போது இந்த காரை ரிவர்ஸில்தான் ஏற்ற முடியுமாம்.

 

மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Crazy Facts About Automobiles.
Story first published: Tuesday, August 18, 2015, 16:40 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark