கடலுக்குள் ஒளிந்து கொள்ளும் மேஜிக் சாலை: இது பிரான்ஸ் அதிசயம்!

Written By:

உலகின் அழகான சாலைகள், அபாயகரமான சாலைகளை பார்த்திருப்பீர்கள். ஆனால், இப்போது பார்க்கப்போகும் பிரான்ஸ் நாட்டிலுள்ள மேஜிக் சாலை சற்றே விந்தையானது.

ஆம், இந்த சாலையில் தினசரி இரண்டு முறை மட்டுமே போக்குவரத்து நடைபெறும். மீதமுள்ள நேரங்களில் கடல் நீர் மட்டம் அதிகரித்து சாலை தண்ணீருக்குள் மறைந்து போகிறது. இந்த விந்தையான சாலையின் படங்கள், கூடுதல் தகவல்களை தொடர்ந்து காணலாம்.

மேஜிக் சாலை: இது பிரான்ஸ் அதிசயம்!

பிரான்ஸ் நாட்டின் வட அட்லாண்டிக் கடல் பகுதியில் உள்ள பர்னெப் வளைகுடாவிலிருந்து நோயிர்மோட்டியர் தீவை இந்த சாலை இணைக்கிறது. இந்த சாலை 4 கிமீ நீளம் கொண்டது.

மேஜிக் சாலை: இது பிரான்ஸ் அதிசயம்!

பேசேஜ் டு கோயிஸ் என்று இந்த சாலை அழைக்கப்படுகிறது. கோயிஸ் என்றால் ஈரமான காலணிகளுடன் சாலையை கடந்து செல்வது என்று பொருள் கூறப்படுகிறது.

மேஜிக் சாலை: இது பிரான்ஸ் அதிசயம்!

காற்று வீச்சு காரணமாக அலைகள் உயரே எழும்பும்போது இந்த சாலை கடல் நீருக்குள் மூழ்கிவிடுகிறது. சுமார் 13 அடி உயரத்திற்கு கடல் நீர் மட்டம் ஏறி விடுகிறது.

மேஜிக் சாலை: இது பிரான்ஸ் அதிசயம்!

தினசரி இரண்டு முறை மட்டுமே சாலையில் நீர் வடிந்து போக்குவரத்திற்கு பயன்படும். அதுவும் அதிகபட்சமாக இரண்டு மணிநேரம் வரை மட்டுமே தண்ணீர் விலகி காணப்படும். அப்போது வேக வேகமாக வாகனஙகளும், மக்களும் இந்த சாலையை கடந்து செல்கின்றனர்.

மேஜிக் சாலை: இது பிரான்ஸ் அதிசயம்!

இந்த சாலை 1701ம் ஆண்டிலிருந்து வரைபடத்தில் இடம்பெற்றிருக்கிறதாம். 1840ம் ஆண்டு முதல் இந்த சாலையில் குதிரைகள் மூலமாக போக்குவரத்து துவங்கியதாக தெரிவிக்கப்படுகிறது. தற்போது கார்கள் மூலமாக தீவிற்கும், முக்கிய நிலப்பகுதிக்குமான போக்குவரத்து நடக்கிறது.

மேஜிக் சாலை: இது பிரான்ஸ் அதிசயம்!

இந்த சாலையில் செல்வது மிகவும் ஆபத்தானதாக இருக்கிறது. நடுவழியில் செல்லும்போது கடல் நீர் மட்டம் அதிகரித்து பலர் உயிரிழந்துள்ளனர். இதற்காக, இந்த சாலையில் ஆங்காங்கே கோபுரங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. ஒருவேளை தண்ணீர் மட்டம் அதிகரித்தால் இந்த கோபுரத்தில் ஏறி தப்பிக்கலாமாம். மீட்புக் குழுவினர் வரும் வரையிலோ அல்லது தண்ணீர் குறையும்போது கடக்க வேண்டும்.

மேஜிக் சாலை: இது பிரான்ஸ் அதிசயம்!

கடல் நீர் மட்டம் உயர்வது குறித்து எச்சரிக்கை செய்வதற்கான மையமும் இந்த சாலையின் இருபுறத்திலும் செயல்படுகிறது. இந்த சாலையில் பயணிப்பதற்காக உலகம் முழுவதும் இருந்து சாகச பயண பிரியர்கள் இங்கு வருகை தருகின்றனர்.

மேஜிக் சாலை: இது பிரான்ஸ் அதிசயம்!

கடல் நீர் மட்டம் ஏறும்போது பயணிக்க விரும்புவதால், அதில் பலர் அலையில் சிக்கி உயிரிழந்திருக்கின்றனராம். எனவே, மிகுந்த எச்சரிக்கையுடன் செல்ல வேண்டிய சாலையாக குறிப்பிடப்படுகிறது. ராமர் பாலம் போலவே இயற்கையாகவே அமைந்ததுதான் இதன் முக்கிய சிறப்பு. அதில், தற்போது கான்கீரிட் அமைத்து போக்குவரத்திற்கு பயன்படுத்துகின்றனர்.

மேஜிக் சாலை: இது பிரான்ஸ் அதிசயம்!

1999ம் ஆண்டு டூர் டி பிரான்ஸ் சைக்கிள் பந்தயத்தின் இரண்டாவது சுற்றுக்கு இந்த சாலை பயன்படுத்தப்பட்டது. 2011ம் ஆண்டில் டூர் டி பிரான்ஸ் சைக்கிள் பந்தயத்தின் முதல் சுற்றின் துவக்கப் புள்ளியாகவும் இந்த சாலை அமைந்தது குறிப்பிடத்தக்கது.

Via

மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
crazy road in France disappears underwater twice a day. Read in Tamil.
Please Wait while comments are loading...

Latest Photos