இத படிச்சதுக்கு அப்புறமும் சிக்னலில் பிச்சை போடுவீங்க?

Written By:

மோட்டார் வாகனச் சட்டத்தில் பல்வேறு சுவாரஸ்யமான விதிமுறைகளும், சட்டங்களும் வகுக்கப்பட்டு இருக்கின்றன. அதில், சில சட்டங்கள் பற்றி போலீசாருக்கே விழிப்புணர்வு இல்லாத நிலை இருக்கிறது.

 சிக்னல்களில் பொருட்கள் வாங்குவது மோட்டார் வாகனச் சட்டப்படி குற்றம்!

சிக்னல்களில் நிற்கும்போது மொபைல்சார்ஜர், மொபைல் ஸ்டான்ட் மற்றும் திண்பண்டங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இதனை வாங்குவது மோட்டார் வாகனச் சட்டப்படி குற்றமாக வரையறுக்கப்பட்டு இருக்கிறது.

Picture credit: Wiki Commons

 சிக்னல்களில் பொருட்கள் வாங்குவது மோட்டார் வாகனச் சட்டப்படி குற்றம்!

குறிப்பாக, திண்பண்டங்களை வாங்குவதற்கு ரூ.1,000 வரை அபராதம் விதிக்க சட்டத்தில் வழி இருக்கிறது. நீங்கள் காரில் அமர்ந்து திண்பண்டங்கள் வாங்குவதை போக்குவரத்து போலீசார் பார்த்து கையோடு பிடித்ததால் அபராதம் விதிக்க முடியும்.

Recommended Video - Watch Now!
Ford Freestyle Walk-Around In 360
 சிக்னல்களில் பொருட்கள் வாங்குவது மோட்டார் வாகனச் சட்டப்படி குற்றம்!

மேலும், அபாயகரமான வாகனத்தை ஓட்டுவதற்கான குற்றத்தின் கீழ் வழக்கும் பதிவு செய்ய முடியும். கேட்பதற்கு வியப்பாக இருந்தாலும் இதுதான் உண்மை. இதில், பல அடிப்படை விஷயங்களை வைத்தே இந்த சட்டம் வரையறுக்கப்பட்டு இருக்கிறது.

 சிக்னல்களில் பொருட்கள் வாங்குவது மோட்டார் வாகனச் சட்டப்படி குற்றம்!

இதுபோன்று சாலைகளில் வந்து விற்பனை செய்யும் பொருட்களை வாங்குவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் வாய்ப்பு இருக்கிறது. சிலர் பணத்தை எடுப்பதற்குள் சிக்னல் விழுந்துவிடுவதால் போக்குவரத்து நெரிசலுக்கும் வழிகோலுகிறது.

 சிக்னல்களில் பொருட்கள் வாங்குவது மோட்டார் வாகனச் சட்டப்படி குற்றம்!

விற்பனை செய்பவர்கள் மீது வாகனங்கள் மோதி விபத்துக்கள் நிகழவும் வாய்ப்புண்டு. மேலும், திண்பண்டங்களில் விஷப் பொருட்களை கலந்து வழிப்பறி செய்வதற்கும் வாய்ப்புள்ளது. மேலும், வாகனத்தில் உள்ள பொருட்களை அருகில் வந்து திருடிச் செல்வதற்கும் வழிவகுக்கிறது.

 சிக்னல்களில் பொருட்கள் வாங்குவது மோட்டார் வாகனச் சட்டப்படி குற்றம்!

அதேபோன்று, கார்களில் கொடுக்கப்படும் எல்சிடி திரைகள் இருந்தால், அதற்கு ரூ.1,000 வரை அபராதம் விதிக்க வழியுண்டு. பல வாடகை கார்களில் இவ்வாறு கொடுக்கப்பட்டு வருகிறது. இது ஓட்டுனரின் கவனத்தை திசை திருப்புவதாக இருக்கும் என்றும் டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர்.

 சிக்னல்களில் பொருட்கள் வாங்குவது மோட்டார் வாகனச் சட்டப்படி குற்றம்!

சிக்னல்களில் பிச்சை போடுவதும் குற்றமாக மோட்டார் வாகனச் சட்டம் கூறுகிறது. இதேபோன்று, வைப்பர் இல்லாமல் இருந்தாலும் ரூ.100 அபராதமும், மறுமுறை தொடரும் பட்சத்தில் ரூ.300 வரையிலும் அபராதம் விதிக்க வழிவகை உண்டு.

 சிக்னல்களில் பொருட்கள் வாங்குவது மோட்டார் வாகனச் சட்டப்படி குற்றம்!

இந்த விதிமுறைகளை நடைமுறையில் கண்காணித்து அபராதம் விதிப்பதில் சிக்கல்களும், சவால்களும் உள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.

 சிக்னல்களில் பொருட்கள் வாங்குவது மோட்டார் வாகனச் சட்டப்படி குற்றம்!

தடை விதிக்கப்பட்ட பகுதிகளில் ஒலிப்பானை பயன்படுத்தும் போக்கும் அதிகரித்து வருகிறது. இதற்கு முடிவு கட்டுவதற்கும் கடுமையான அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

 சிக்னல்களில் பொருட்கள் வாங்குவது மோட்டார் வாகனச் சட்டப்படி குற்றம்!

எனவே, மோட்டார் வாகனச் சட்டம் குறித்து வாகன ஓட்டிகளிடையே விழிப்புணர்வை அதிகப்படுத்துவதன் மூலமாக இதுபோன்ற விதிமீறல்களை குறைக்க முடியும்.

Picture credit: Wiki Commons

Source: Hindustan Times

மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Crazy Traffic Laws You Wouldn’t Believe Exist.

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark