காரை ஓட்டுவதற்குகூட ஆள் வச்சுக்காத மனுசனா இருக்காரே.. 0007 பதிவெண் கொண்ட 4 கோடி ரூபா காரில் வந்தது அவரா!
பிரபலங்களிடத்தில் விலை உயர்ந்த கார்கள் இருப்பது அபூர்வமான விஷயமல்ல. ஆனால், அதை அவர்களே ஓட்டி வருவதுதான் மிகவும் அரிதான ஒன்று. அதேவேளையில், ஒரு சில முக்கிய பிரபலங்கள் அவர்களே வாகனங்களை ஓட்டிக் கொண்டுதான் இருக்கின்றனர். அந்தவகையில், வாகனங்களை தானே அதிகமாக ஓட்டிச் செல்லக் கூடிய நபராக கிரிக்கெட் விளையாட்டு வீரர் எம்எஸ் தோனி இருக்கின்றார். இவர் கார்களை மட்டுமல்ல டிராக்டர்களையும் அவராகவே ஓட்டிச் சென்ற நாட்கள் உண்டு. இந்த நிலையிலேயே, வழக்கம்போல எம்எஸ் தோனி சமீபத்தில் கருப்பு நிற கார் ஒன்றை தனியாக ஓட்டிச் சென்றிருக்கின்றார்.
அப்போது ரசிகர் ஒருவரால் எடுக்கப்பட்ட வீடியோவே தற்போது இணையத்தில் வெளியாகி இருக்கின்றது. தல தோனி ஓட்டிச் சென்ற அந்த காரின் இந்திய மதிப்பு ரூ. 4 கோடிக்கும் அதிகம் ஆகும். இது ஒரே ஒரு யூனிட்டின் விலை மட்டுமே என்பது இங்கே குறிப்பிடத்தகுந்தது.

மெர்சிடிஸ் பென்ஸ் ஜி63 ஏஎம்ஜி (Mercedes-Benz G63 AMG) காரையே அவர் ஓட்டிச் சென்றிருக்கின்றார். இது ஓர் ஆடம்பர அம்சங்கள் நிறைந்த எஸ்யூவி (SUV) ரக கார் மாடல் ஆகும். இந்த வாகனத்தின் மற்றுமொரு சிறப்பாக அதன் பதிவு எண் இருக்கிறது. '0007' எனும் ஃபேன்சி எண்ணே அந்த காரில் இடம் பெற்றிருக்கின்றது.
'7' என்பது தோனியின் ஜெர்சியின் நம்பர் ஆகும். பெருமை மிகுந்த கார் மாடலுக்கு கூடுதல் பெருமிதம் சேர்க்கும் விதமாக இந்த பதிவெண் அமைந்து உள்ளது. இந்த பதிவெண்ணுக்கு என தனியாக அவர் இன்னும் சில லட்ச ரூபாய்களை செலவழித்திருப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதனால்தான் தல தோனி இந்த காரை ஓட்டி வந்த வீடியோ இணையத்தில் தற்போது காட்டு தீயை போல பரவிக் கொண்டிருக்கின்றது. மேலும், தோனியே காரை தனியாகவே ஓட்டி வந்தார் என்பதையும் வீடியோவில் நம்மால் தெளிவாக காண முடிகின்றது. தல தோனி ஓட்டி வந்த இந்த கார் அதிக ஆடம்பர அம்சங்கள் நிறைந்தது மட்டுமல்ல அதிக ஆற்றலை வெளியேற்றக் கூடியதும் ஆகும்.
இந்த காரில் 4.0 லிட்டர் பை-டர்போ வி8 பெட்ரோல் மோட்டாரே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 585 பிஎச்பி பவரையும், 850 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது என்பது குறிப்பிடத்தகுந்தது. இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 240 கிமீ ஆகும்.
மேலும், இதனால் வெறும் 4.3 செகண்டுகளிலேயே பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ வேகத்தை எட்டிவிட முடியும். இத்தகைய டாப் ஸ்பீடில் இயங்கக் கூடிய காரையே அசால்டாக தல தோனி ஓட்டிச் சென்றிருக்கின்றார். இந்த கார் சிறப்பம்சங்களையும் மிக தாராளமாகக் கொண்டிருக்கும்.
அந்தவகையில், 12.3 அங்குல டிரைவருக்கான திரை, எம்பியூஎக்ஸ் தொழில்நுட்பம் கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், யுஎஸ்பி டைப் சி சார்ஜிங் போர்ட், 18 ஸ்பீக்கர்கள் கொண்ட பர்மெஸ்டர் 3டி சவுண்டு சிஸ்டம் உள்ளிட்டவை மெர்சிடிஸ் பென்ஸ் ஏஎம்ஜி ஜி63 காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன. இதுதவிர, அடாஸ் அம்சம் மற்றும் 360 டிகிரி பார்வை திறன் கேமிரா உள்ளிட்ட அம்சங்களும் இதில் இடம் பெற்றிருக்கும் என்பது கவனிக்கத்தகுந்தது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: தோனியிடத்தில் இதுபோன்ற விலை உயர்ந்த கார் மாடல்கள் பல பயன்பாட்டில் இருக்கின்றன. அவற்றில் தற்போது ஓட்டி வந்த இந்த பென்ஸ் காரும் அடங்கும். முக்கியமாக தோனியிடத்தில் விண்டேஜ் மற்றும் அரிய வகை டூ-வீலர்களும் பல பயன்பாட்டில் இருக்கின்றன. இவர் தன்னுடைய வாகனங்களுக்கு என பெரிய மியூசியத்தையே உருவாக்கி இருக்கின்றார்.


Click it and Unblock the Notifications








