கார் விபத்தில் மூதாட்டி மரணமடைந்த வழக்கில் கிரிக்கெட் வீரர் ரகானேவின் தந்தை கைது..!!
கார் விபத்தில் மூதாட்டி மரணமடைந்த வழக்கில் கிரிக்கெட் வீரர் ரகானேவின் தந்தை கைது..!!
மும்பையில் நடைபெற்ற கார் விபத்தில் பெண் உயிரழந்த வழக்கில் இந்திய கிரிக்கெட் வீரர் அஜிங்யா ரகானேவின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மேனாக இருக்கும் அஜிங்யா ரகானே, தற்போது இலங்கை - இந்தியா இடையிலான ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறார்.

இவரது தந்தை மதுகார் பாபுராவ் கோலாபூர் பகுதியில் ஒரு சிலருடன் ஹூண்டாய் ஐ20 மாடல் காரில் சென்றுக்கொண்டு இருந்தார்.

அப்போது, தேசிய நெடுஞ்சாலையில் காகல் பேருந்து நிலையம் அருகே சென்றபோது மூதாட்டி ஒருவரின் மீது கார் மோதியது.
சாலையில் மூதாட்டி கார் மோதி விழுவதை பார்த்த அப்பகுதியில் இருந்த பொதுமக்கள், உடனே வந்து காரை முற்றுகையிட்டனர்.

மேலும் படுகாயமடைந்த மூதாட்டி அஷாத்தாய் கம்பலேவை சில பொதுமக்கள் தூக்கிக்கொண்டு, அருகிலிருக்கும் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

படுகாயம் அடைந்திருந்ததாலும், அதிகளவில் ரத்தம் வெளியேறியதாலும், மூதாட்டி அஷாத்தாய் கம்பலே சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் இறந்துபோனார்.

ஹூண்டாய் ஐ20 காரில் இருந்தவர்களின் தகவல்களை ஆராய்ந்த போது, அது இந்திய கிரிக்கெட் அணி வீரர் அஜிங்யா ரகானேவின் தந்தை மதுகார் பாபுராவ் இருப்பது தெரியவந்தது.
Recommended Video


சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கோலாபூர் போலீசார், பிரிவு 304A, 337, 338, 279 மற்றும் 184 ஆகிய பகுதிகளில் வழக்கை பதிவு செய்தனர்.

மேலும் கார் மோதி மூதாட்டி உயிரழந்த வழக்கில், தற்போது ரகானேவின் தந்தையை கோலாபூர் பகுதி போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

இதற்கிடையில் ரகானேவின் தந்தை மதுகார் பாபுராவ் தான் கார் ஓட்டினாரா? அல்லது வேறொருவர் கார் ஓட்டினாரா? விபத்து ஏற்படுத்திய கார் யார் பெயரில் உள்ளது என்பது தொடர்பான தகவல்கள் இன்னும் வெளிவரவில்லை.

நமக்கு கிடைத்த தகவலின்படி,ரகானேவின் தந்தை மதுகார் பாபுராவ் தான் ஹூண்டாய் ஐ20 காரை ஓட்டி சென்றது என்றும்,
சம்பவம் நடந்த போது மதுகார் பாபுராவ் உடன் காரில் பயணித்தது கிரிக்கெட் வீரர் அஜிங்கா ரகானேவின் குடும்பத்தினர் என்றும் அதிகாரப்பூர்வமில்லாத தகவல்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications