கோடி கோடியாய் சம்பாதித்தாலும் பழைய காரை விற்க மனம் வரல! கடைசியில் கிரிக்கெட் வீரர் எடுத்த முடிவு!
பொதுவாக, பிரபலங்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் புதிய கார்களை வாங்கவே விரும்புவார்கள். ஆனால், இந்திய வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் (Indian Fast Bowler Arshdeep Singh) தனது பழைய டொயோட்டா ஃபார்ச்சூனர் டைப் 1 (Toyota Fortuner Type 1) காரை மாற்றியமைக்க முடிவு செய்தார். இந்த ஃபார்ச்சூனரின் சிறப்பு என்னவென்றால், இதன் உட்புறம் மற்றும் வெளிப்புறம் என அனைத்தும் முற்றிலும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
காரை தனது விருப்பத்திற்கேற்ப மாற்றியமைத்த பின் அர்ஷ்தீப் சிங் நேரில் வந்து காரை டெலிவிரி (Delivery) பெற்று சென்றுள்ளார். அர்ஷ்தீப் சிங்கின் இந்த டொயோட்டா ஃபார்ச்சூனர் டைப் 1 காரின் டெலிவரி குறித்த விபரங்கள் 'சிகந்த் கார்' (Sikand Car) என்ற இன்ஸ்டாகிராம் (Instagram) பக்கத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.

கார்களை மாற்றியமைப்பதில் நிபுணத்துவம் பெற்ற கடையில் தனது ஃபார்ச்சூனர் காரை கொடுத்து அர்ஷ்தீப் சிங் இவ்வாறு மாற்றிக் கொண்டுள்ளார். கடை என சொல்வதை காட்டிலும் இது கார் ஷோரூம் (Car Showroom) அளவிற்கு பெரியதாக உள்ளது. வேலைப்பாடுகள் முடிந்த பின், சிவப்பு துணியால் மூடப்பட்டிருந்த ஃபார்ச்சூனர் காரை அர்ஷ்தீப் சிங்கும், 'சிகந்த் கார்' கடையின் உரிமையாளரும் இணைந்து திறந்தனர்.
பின்னர், தனித்துவமானதாக மாற்றியமைக்கப்பட்ட தனது டொயோட்டா ஃபார்ச்சூனர் டைப் 1 காரை கிரிக்கெட் வீரர் (Cricket Player) அர்ஷ்தீப் சிங் சுற்றியிருந்த பார்வையாளர்களுக்கு காட்டினார். இந்த டொயோட்டா ஃபார்ச்சூனர் காரின் முன்புறம், லெக்ஸஸ் (Lexus) கார்களுக்கான ஆஃப்டர்-மார்க்கெட் பாடி கிட் மூலம் முழுமையாக மாற்றப்பட்டுள்ளது.

இதனால், இந்த ஃபார்ச்சூனர் கார் ஸ்டாண்டர்ட் மாடலிலிருந்து வேறுபட்டு, ஒரு லெக்ஸஸ் கார் போல காட்சியளிக்கிறது. இதற்கேற்ப, குரோம் பூச்சுடன் கூடிய பளபளப்பான கருப்பு நிறத்திலான முன்பக்க கிரில் பெரிய அளவிலும், லெக்ஸஸ் பாணியிலான எல்.இ.டி டிஆர்எல்களுடன் கூடிய கஸ்டம் எல்இடி ஹெட்லைட்களும் இதில் பொருத்தப்பட்டு உள்ளன.
கூடுதலாக, ஃபாக் விளக்குகள் பகுதியில் பூமெராங் வடிவ எல்இடி டிஆர்எல்களும், புதிய முன்பக்க பம்பரும் பொருத்தப்பட்டுள்ளன. வாகனத்தின் பின்புறத்தில், பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட டெயில்லைட்கள் மற்றும் புதிய பின்புற பம்பர் ஆகியவை இந்த ஃபார்ச்சூனர் காருக்கான லெக்ஸஸ் பாடி கிட்டின் ஒரு பகுதியாக சேர்க்கப்பட்டுள்ளன.

இந்த ஃபார்ச்சூனரின் மற்றொரு முக்கிய அம்சம், பெரிய பளபளப்பான கருப்பு நிற அலாய் சக்கரங்கள் ஆகும். மேலும், இந்த காரில் உட்புற கேபினும் முழுமையாக அர்ஷ்தீப் சிங்கின் விருப்பத்திற்கேற்ப தனிப்பயனாக்கப்பட்டு உள்ளது. இதன்படி, இந்த எஸ்யூவி காரினுள் டேஷ்போர்டு மற்றும் ரூஃப் லைனர் முழுவதும் அடர் நீல நிறத்தில் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளன.
டேஷ்போர்டில் லெதர் பூச்சுடன், உட்புறத்தில் அல்காண்டரா மெட்டீரியல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இவை தவிர, டேஷ்போர்டின் கீழ் பகுதியும், அனைத்து இருக்கைகள் மற்றும் பில்லர்களும் பழுப்பு நிறம் கலந்த வெள்ளை நிற லெதரில் மூடப்பட்டுள்ளன. இவற்றில் இருந்து தனித்து தெரியும் வகையில் மர வேலைப்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.

இவற்றுடன், ஆஃப்டர்-மார்க்கெட் ஆண்ட்ராய்டு மியூசிக் சிஸ்டமும் இந்த காரில் புதியதாக பொருத்தப்பட்டுள்ளது. மேலும், இந்த ஃபார்ச்சூனர் டைப்-1 காரின் ஸ்டீயரிங் சக்கரம் மாற்றப்பட்டு, தற்போது சமீபத்திய தலைமுறை ஃபார்ச்சூனரில் உள்ள அதே ஸ்டீயரிங் வீல் பொருத்தப்பட்டுள்ளது. அர்ஷ்தீப் சிங் புதிய ஃபார்ச்சூனர் காரை வாங்கவில்லை, மாறாக தனது பழைய டைப் 1 ஃபார்ச்சூனரை மாற்றியமைத்துள்ளார்.
இந்த ஃபார்ச்சூனர் டைப் 1 காரில் 3.0 லிட்டர் டர்போ-டீசல் என்ஜின் உள்ளது. இது 169 பிஹெச்பி சக்தியையும், 343 என்எம் டார்க்கையும் உற்பத்தி செய்யும் திறன் கொண்டது. பழைய டொயோட்டா ஃபார்ச்சூனர் டைப் 1 யூஸ்டு கார்களை அவற்றின் மைலேஜ் மற்றும் நிலையைப் பொறுத்து தற்போது சுமார் 9- 15 லட்சம் ரூபாய் விலையில் வாங்கலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: கோடிகளில் சம்பாதிக்கும் கிரிக்கெட் வீரர்களாக இருந்தாலும் சரி, ஒரு சிலருக்கு தங்களது பழைய காரை விற்க மனம் வராது. குறிப்பாக, டொயோட்டா ஃபார்ச்சூனர் போன்ற தரமான கார்களை அவ்வளவு எளிதாக யாரும் விற்பதோ அல்லது ஓரங்கட்டுவதோ செய்ய மாட்டார்கள். இதுதான், இந்திய வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் விஷயத்திலும் நடந்துள்ளது. வரும் காலங்களில் அர்ஷ்தீப் சிங்கை பொது வெளியில் அதிகமாக இந்த கஸ்டமைஸ் (Customize) செய்யப்பட்ட ஃபார்ச்சூனர் காரில் தான் பார்ப்போம் என எதிர்பார்க்கிறோம்.


Click it and Unblock the Notifications









