இவர்கிட்ட இருக்கும் பணத்துக்கு ரோல்ஸ்-ராய்ஸ் காரையே வாங்கலாமே! பனியன் உடன் சாதாரணமான காரில் சென்றது இவரா?

மகேந்திர சிங் தோனி (Mahendra Singh Dhoni) இவருக்கு அறிமுகமே தேவை இருக்காது என நினைக்கிறேன். ஏனெனில், அந்த அளவிற்கு உலக புகழ்பெற்ற கிரிக்கெட் (Cricket) வீரராக தோனி விளங்குகிறார். கிரிக்கெட்டை தாண்டி தோனிக்கு விவசாயம் செய்வதும், பைக் & கார் ஓட்டுவதும் பிடித்த விஷயம் என்பது நம் எல்லாருக்குமே தெரிந்ததே. எம்.எஸ் தோனியின் வீட்டில் பைக் மற்றும் கார்களை நிறுத்தி வைப்பதற்காக பிரம்மாண்டமான குடோன் ஒன்று உள்ளதை சில வருடங்களுக்கு முன் முன்னாள் கிரிக்கெட் வீரர் வெங்கடேஷ் பிரசாத் (Venkatesh Prasadh) வீடியோ உடன் வெளிக்காட்டி இருந்தார்.

பழைய காலத்து பைக் & கார்களில் இருந்து சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட லேட்டஸ்ட் பைக் & கார்கள் வரையில் தோனியிடம் உள்ளன. குறிப்பாக, பைக் ஓட்டுவதை தோனி மிகவும் விரும்பக்கூடியவர். இவரிடம், கவாஸாகி நிஞ்சா இசட்2 (Kawasaki Ninja H2) என்கிற 33 லட்ச ரூபாய் மதிப்பிலான பைக்கும் உள்ளது. பல விதமான பைக்குகளை வைத்திருக்கும் தோனி வெளியில் அதிகமாக பைக் ஓட்டும்போதே அடையாளம் காணப்பட்டுள்ளார்.

cricketer mahendra singh dhoni driving

பெரும்பாலும் ஹெல்மெட் (Helmet) அணிந்து கொண்டுதான் தோனி பைக் ஓட்டுவார் என்றாலும், ஹெல்மெட்டை கழட்டி மாட்டும் அந்த குறுகிய நேரத்திற்குள் எப்படியாவது அவரை ரசிகர்கள் கண்டுப்பிடித்து விடுகின்றனர். சில ரசிகர்கள் தோனி எப்போது வெளியே வருவார் என்பதை காண்பதற்காகவே ஜார்காண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள அவரது வீட்டு வாசலில் தவம் கிடக்கின்றனர்.

இதனால், தோனி எந்த வாகனத்தில் வீட்டில் இருந்து வெளியே வந்தாலும் உடனே அதுகுறித்த படங்கள், வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி விடுகின்றன. அந்த வகையில் தற்போது சிட்ரோன் பசால்ட் (Citroen Basalt) காரில் தோனி வெளியே வந்த போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. இந்த வீடியோவில், வெறுமனே பனியன் மட்டும் அணிந்துக் கொண்டு தோனி கார் ஓட்டும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

cricketer mahendra singh dhoni driving

பிரெஞ்சு கார் நிறுவனமான சிட்ரோன் இந்திய சந்தையில் சில வருடங்களுக்கு முன் நுழைந்ததும், அதன் இந்திய பிராண்ட் தூதராக எம்.எஸ் தோனியை நியமித்தது. இதனாலேயே சிட்ரோன் கார்களின் விளம்பரங்களில் தோனியை பரவலாக பார்க்க முடிகிறது. இதனால், சிட்ரோன் கார் ஒன்றை எம்.எஸ் தோனி வைத்திருப்பதில் ஆச்சிரியம் ஒன்றும் இல்லை.

ஆனால், பல விலையுயர்ந்த கார்களை வைத்திருப்பவர், பசால்ட் போன்ற விலை குறைவான காரில் செல்வதுதான் ஆச்சிரியமாக உள்ளது. சிட்ரோன் பசால்ட் காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் தற்சமயம் ரூ.10.12 லட்சத்தில் இருந்து ரூ.17.66 லட்சம் வரையில் உள்ளன. கடந்த 2024ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனத்தின் கர்வ் காருக்கு போட்டியாக சிட்ரோன் நிறுவனம் பசால்ட்டை அறிமுகம் செய்தது.

cricketer mahendra singh dhoni driving

யு (You), பிளஸ் (Plus) மற்றும் மேக்ஸ் (Max) என மூன்று விதமான வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படும் பசால்ட் காரில் அதிகப்பட்சமாக 108 பிஎச்பி வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் பொருத்தப்படுகிறது. 6 ஏர்பேக்குகள் உடன் கிடைக்கும் பசால்ட் காரில் டயர் பிரஷர் மானிடரிங் சிஸ்டம் மற்றும் ரிவர்ஸில் பார்க் செய்வதற்கு உதவியாக சென்சார்கள் வழங்கப்படுகின்றன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மாடர்ன் சிட்ரோன் காராக இருப்பினும், பசால்ட்டை தோனி பயன்படுத்துகிறார் என்பது சற்று ஆச்சிரியமான விஷயமாகவே உள்ளது. பசால்ட் காரின் ரூ.17.47 லட்சத்தில் விலைமிக்க டார்க் எடிசனை தோனி பயன்படுத்துகிறார் என்பது வீடியோவில் அவரது காரின் கருப்பு நிறத்தை பார்த்தாலே தெரிகிறது. இந்த தொகுப்பில் நாங்கள் குறிப்பிட்டுள்ளவை அனைத்தும் காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் மட்டுமே ஆகும். ஆன்-ரோடு விலை இன்னும் சில லட்ச ரூபாய்கள் அதிகமாக வரும்.

More from DriveSpark

Article Published On: Monday, June 30, 2025, 17:55 [IST]
English summary
Cricketer dhoni spotted while drives citroen basalt car in ranchi check all details here
மேலும்... #celebrity cars #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X