கோடிகளில் சொத்து மதிப்பு கொண்டவர் என்றால் யாரும் நம்ப மாட்டாங்க!! என்ன ஒரு எளிமை... வீடியோ வைரல்!
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி அவரை போன்றே வித்தியாசமான ஒரு எலக்ட்ரிக் சைக்கிளை ஓட்டி பார்த்துள்ளார். இதுதொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அப்படி எந்த மாதிரியான எலக்ட்ரிக் சைக்கிளை தோனி ஓட்டியுள்ளார் என்பதை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணிக்கு 2011இல் உலக கோப்பையை பெற்று தந்தவரான கேப்டன் எம்.எஸ் தோனிக்கு அறிமுகமே தேவையில்லை. ஐபிஎல்-இல் சிஎஸ்கே அணிக்காக விளையாடிக் கொண்டிருக்கும் தோனி சிறிய அளவிலான எலக்ட்ரிக் சைக்கிள் ஒன்றை ஒட்டும் வீடியோ ஒன்று இன்ஸ்டாகிராமில் வெளியாகி பலரது கவனத்தை பெற்றுள்ளது.

கிரிக்கெட்டில் முழு மூச்சுடன் இருக்கும் சமயத்திலேயே தோனிக்கு மோட்டார்சைக்கிள்கள் மீது அதிக ஆர்வம் உண்டு. பல்வேறு விதமான சூப்பர் பைக்குகளில் தோனி காட்சி தந்துள்ளதை இதற்குமுன் பார்த்துள்ளோம். பைக் & கார்களை நிறுத்தி வைப்பதற்காகவே தோனியிடம் மிக பெரிய கேரேஜ் உள்ளது. சுதந்திரம் வாங்கிய சமயத்தில் உருவாக்கப்பட்ட கார் & பைக்குகளில் இருந்து இன்றைய கால கார் & பைக்குகள் வரையிலான கலெக்ஷன்ஸ் தோனியிடம் உள்ளன.
இந்த நிலையில்தான், இமோட்டாராட் டூடில் வி3 (EMotorad Doodle V3) என்கிற எலக்ட்ரிக் சைக்கிளை தோனி ஓட்டியுள்ளார். ஐபிஎல்-இல் விளையாடிக் கொண்டிருக்கும் அதே ஹேர் ஸ்டைலில் இந்த வீடியோவில் தோனி காட்சி தருவதால், இந்த வீடியோ சமீபத்தில் காட்சிப் படுத்தப்பட்டதாகவே இருக்கும். சைக்கிள் ஓட்டும்போது அணிய வேண்டிய ஹெல்மெட் உடன் இந்த வீடியோவில், டூடில் வி3 சைக்கிளை தோனி ஓட்டியுள்ளார்.

டூடில் வி3 ஆனது இமோட்டாராட் நிறுவனத்தின் அளவில்-சிறியதான எலக்ட்ரிக் சைக்கிள் ஆகும். இதன் சில்லறை விற்பனை விலை தற்சமயம் ரூ.52,999 ஆக உள்ளது. எலக்ட்ரிக் பவரின் உதவியுடன் இயங்கக்கூடிய இந்த எலக்ட்ரிக் சைக்கிளின் டாப்-ஸ்பீடு 25kmph ஆகும். ஆதலால், இந்த எலக்ட்ரிக் சைக்கிளை ஓட்டுவதற்கு 2-வீலர் லைசன்ஸ் எதுவும் தேவையில்லை.
இமோட்டாராட் டூடில் வி3 எலக்ட்ரிக் சைக்கிளின் சிறப்பம்சம் என்னவென்றால், இதனை தேவைப்பட்டால் மடக்கியும் வைத்து கொள்ளலாம். இந்த சைக்கிளில் பொருத்தப்படும் 12.75 ஆம்பியர் பேட்டரி பேக்கை முழுவதுமாக சார்ஜ் நிரப்புவதன் மூலம் அதிகப்பட்சமாக 60கிமீ தொலைவிற்கு சைக்கிளை எலக்ட்ரிக் பவரில் ஓட்டி செல்லலாம்.

எலக்ட்ரிக் பவர் இல்லாமல், பெடல் மூலமாகவும் இந்த சைக்கிளை ஓட்ட முடியும். 16-இன்ச் அலுமினியம் அலாய் ஃப்ரேமில் உருவாக்கப்படும் இந்த எலக்ட்ரிக் சைக்கிளில் 20 இன்ச்சில் ஸ்போக்டு அலாய் சக்கரங்கள் கொடுக்கப்படுகின்றன. இந்த சக்கரங்களில் நன்கு அகலமான டயர்கள் பொருத்தப்படுகின்றன. முன் சக்கரத்தில் சஸ்பென்ஷன் ஃபோர்க்குகள் 60மிமீ டிராவல் உடன் வழங்கப்படுகின்றன.
பேட்டரியின் ஆற்றல் ஆனது ஷிமானோ டூர்னே 7-ஸ்பீடு கியர்பாக்ஸ் வாயிலாக சைக்கிளின் பின் சக்கரத்துக்கு செல்கிறது. சைக்கிளை நிறுத்த சக்கரங்களில் டிஸ்க் பிரேக்குகள் உள்ளன. இவற்றுடன் எல்சிடி டிஸ்பிளே மற்றும் யுஎஸ்பி சார்ஜிங் வசதியும் இந்த இ-சைக்கிளில் உள்ளது. இமோட்டாராட் டூடில் வி3 ஆனது மேட்-இன்-இந்தியா எலக்ட்ரிக் சைக்கிள் ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: விலையுயர்ந்த கார் & பைக்குகளை வைத்திருக்கும் எம்.எஸ் தோனிக்கு இவ்வாறான ஒரு எலக்ட்ரிக் சைக்கிளை வாங்குவது எல்லாம் பெரிய விஷயமாகவே இருக்காது. இருப்பினும், இந்த இ-சைக்கிளை தோனி வாங்கியுள்ளாரா என்பது உறுதியாக தெரியவில்லை. தோனி வாங்கியுள்ளார் என்றால் நிச்சயமாக அடுத்தடுத்த வீடியோக்களின் மூலம் நமக்கு தெரிந்துவிடும்.


Click it and Unblock the Notifications
