ஹர்திக் பாண்ட்யா வந்த காரை பற்றி தான் எல்லா பக்கமும் பேச்சு... விலையை கேட்டதும் வாயடைத்து போன நெட்டிசன்கள்!!

லெக்ஸஸ் (Lexus), டொயோட்டாவின் லக்சரி கார் பிராண்ட். அதாவது, கோடிகளில் விலை கொண்ட லக்சரி கார்களை டொயோட்டா நிறுவனம் லெக்ஸஸ் நிறுவனத்தின் மூலமாக விற்பனை செய்கிறது. லெக்ஸஸ் நிறுவனத்தில் இருந்து இந்தியாவில் சமீபத்தில் எல்.எம்350எச் (LM350h) என்கிற கார் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த நிலையில், இந்த காரை பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்ட்யா வாங்கியுள்ளார். லெக்ஸஸ் எல்.எம்350எச் காரை ரூ.2.87 கோடியில் ஹர்திக் பாண்ட்யா வாங்கியுள்ளார். இந்த லெக்ஸஸ் காரில் இருந்து ஹர்திக் பாண்ட்யா வெளியே வரும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது.

ஹர்திக் பாண்ட்யா (Hardik Pandya), இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர். பேட்டிங், பௌலிங் என அனைத்திலும் ஜொலிக்கும் கிரிக்கெட் ஆல்ரவுண்டர். கிரிக்கெட்டை தாண்டி, ஹர்திக் பாண்ட்யா அவரது ஸ்டைலிஷான வாழ்க்கை முறையினால் பிரபலமானவராக விளங்குகிறார். மாடலிங் ஆட்களை போன்று, ஸ்டைலான உடைகள் மற்றும் அணிகலன்கள் உடன் பொது வெளியில் காட்சி தருகிறார்.

hardik pandya in lexus lm350h

சமீப காலமாக, பனியன் உடன் தான் ஹர்திக் பாண்ட்யாவை வெளியில் பார்க்க முடிகிறது. தற்போது இணையத்தில் வெளியாகி உள்ள வீடியோவிலும் பனியன் உடன் தான் ஹர்திக் பாண்ட்யா காட்சி தந்துள்ளார். ஆனால், இந்த வீடியோவில் அவரது உடையை காட்டிலும் நம்மை வசீகரிப்பது அவர் வந்திறங்கிய லெக்ஸஸ் எல்.எம்350எச் கார் ஆகும்.

இதுகுறித்து இணையத்தில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவில், கையில் ஐ-பேட் உடன் ஹர்திக் பாண்ட்யா லெக்ஸஸ் எல்.எம்350எச் காரில் இருந்து வெளியே வருவதை காணலாம். காரில் இருந்து வெளியே வந்ததும் அங்கிருந்த சில மனிதர்களை சந்தித்த பின், அங்கு தயார் நிலையில் இருந்த கேமராமேன்களுக்கு சில போஸ்களை ஹர்திக் பாண்ட்யா கொடுத்துவிட்டு செல்வதை வீடியோவில் காண முடிகிறது.

hardik pandya in lexus lm350h

ஏற்கனவே கூறியதுபோல், எல்.எம்350எச் ஆனது லெக்ஸஸ் இந்தியாவில் கடந்த 2024 மார்ச் மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்ட கார் ஆகும். அளவில் பெரியதாக, பிரம்மாண்டமான எம்பிவி காராக விளங்கும் எல்.எம்350எச் ஆனது மினி தியேட்டர் அளவிற்கு உள்ளே நன்கு விசாலமான இடவசதியை கொண்டுள்ளது. ஐபேட்-ஐ உபயோகித்துக் கொண்டு ஹர்திக் பாண்ட்யா பயணித்து வந்திருப்பதில் இருந்து இந்த கார் எந்த அளவிற்கு மென்மையான பயணத்தை வழங்கக்கூடியது என்பதை அறியலாம்.

லெக்ஸஸ் எல்.எம்350எச் காரில் 2.5 லிட்டர் 4-சிலிண்டர் ஸ்ட்ராங் ஹைப்ரீட் என்ஜின் பொருத்தப்படுகிறது. இந்த என்ஜின் உடன் எலக்ட்ரிக் மோட்டார் இணைக்கப்படுகிறது. இவை இரண்டும் சேர்ந்து அதிகப்பட்சமாக 250 பிஎஸ் மற்றும் 239 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை காருக்கு வழங்கக்கூடியதாக உள்ளன. இவற்றுடன், சிவிடி கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது.

hardik pandya in lexus lm350h

லெக்ஸஸின் இ-ஃபோர் டெக்னாலஜியின் உதவியுடன் சிவிடி கியர்பாக்ஸ் என்ஜினின் ஆற்றலை 4 சக்கரங்களுக்கும் வழங்குகிறது. எல்.எம்350எச் காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.2.50 கோடி ஆக தற்சமயம் உள்ளது. இந்த அளவிற்கு விலைமிக்க இந்த லெக்ஸஸ் காரை சமீபத்தில் நடந்து முடிந்த முகேஷ் அம்பானி வீட்டு திருமணத்திலும் பார்க்க முடிந்தது. அம்பானி குடும்பத்தாரும் இந்த காரை வாங்கியுள்ளனர் என ஒரு தகவல் உள்ளது.

சோனிக் அகாட், சோனிக் டைட்டானியம், கிராபைட் பிளாக் கிளாஸ் ஃப்ளாக் மற்றும் சோனிக் குவார்ட்ஸ் என மொத்தம் 4 விதமான பெயிண்ட் ஆப்ஷன்களில் லெக்ஸஸ் எல்.எம்350எச் கார் விற்பனை செய்யப்படுகிறது. இதில் சோனிக் குவார்ட்ஸ் பெயிண்ட்டில் இந்த லெக்ஸஸ் காரை கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்ட்யா வாங்கியுள்ளார்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: பெரும்பாலான விளையாட்டு வீரர்களை போன்று, ஹர்திக் பாண்ட்யாவும் விலையுயர்ந்த வாகனங்களை வாங்குவதை விரும்பக்கூடியவர். அந்த வகையில் லெக்ஸஸ் எல்.எம்350எச் காரை இவர் வாங்கியிருப்பதில் பெரியதாக ஆச்சிரியம் ஒன்றுமில்லை. இருப்பினும், மார்க்கெட்டில் மிக சமீபத்தில் விற்பனைக்கு வந்த காரை அதற்குள் புக் செய்து, டெலிவிரி எடுத்திருப்பது புது கார்களின் அறிமுகங்களை ஹர்திக் பாண்ட்யா எந்த அளவிற்கு உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருக்கிறார் என்பதை காட்டுகிறது.

More from DriveSpark

Article Published On: Friday, August 16, 2024, 14:23 [IST]
English summary
Cricketer hardik pandya arrived in lexus lm350h luxury car check all details here
மேலும்... #off beat #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X