அவரை போலவே பும்ராவின் ஒவ்வொரு கார்களும் பயங்கர ஸ்டைலா இருக்கு! பாகிஸ்தானை மண்ணை கவ்வ வைத்தவரின் லக்சரி கார்கள்

இந்தியாவில் சினிமா நடிகர், நடிகைகளுக்கு அடுத்து அதிக எண்ணிக்கையில் கார்களை வாங்கி குவிப்பவர்கள் என்றால் அது கிரிக்கெட் வீரர்கள் தான். அதிலிலும், உலகின் பணக்கார கிரிக்கெட் சங்கமாக விளங்கும் நமது பிசிசிஐ-இல் உள்ள கிரிக்கெட் வீரர்கள் செல்வ, செழிப்பில் திளைத்துக் கொண்டிருக்கின்றனர். 140 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட நமது இந்தியா போன்ற நாட்டில் வெறும் 11 கிரிக்கெட் வீரர்களில் ஒருவராக வருவது ஒன்றும் சாதாரண காரியம் அல்ல. அத்தகைய இடத்தில் இருப்பவர் தான் பிரபல இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா. சமீபத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான இவரது அபார பந்து வீச்சை நீங்கள் அனைவரும் பார்த்திருப்பீர்கள் என நினைக்கிறேன். பும்ராவிடம் உள்ள கார்களை பற்றி தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.

ரேஞ்ச் ரோவர் வேலர் (Range Rover Velar): மும்பையை சேர்ந்தவரான ஜஸ்பிரித் பும்ராவிடம் ரேஞ்ச் ரோவர் கார் ஒன்று உள்ளது. அதுதான் வேலர் ஆகும். இந்தியாவில் இந்த ரேஞ்ச் ரோவர் கார் பெட்ரோல் மற்றும் டீசல் என 2 விதமான என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. நமக்கு கிடைத்துள்ள தகவலின்படி, இந்த காரை பும்ரா 2 லிட்டர் டீசல் மைல்ட்-ஹைப்ரீட் என்ஜின் உடன் வைத்துள்ளார்.

jasprit bumrah luxury car collections

0-இல் இருந்து 100kmph வேகத்தை வெறும் 8.3 வினாடிகளில் எட்டிவிடக்கூடிய ரேஞ்ச் ரோவர் வேலர் டீசல் காரின் டாப்-ஸ்பீடு 210kmph ஆகும். அதுவே 2 லிட்டர் 4-சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் ஆப்ஷனில் வேலர் காரில் 0-இல் இருந்து 100kmph வேகத்தை வெறும் 7.5 வினாடிகளில் எட்டிவிடலாம். வேலர் பெட்ரோல் காரின் டாப்-ஸ்பீடு 217kmph ஆகும். ரேஞ்ச் ரோவர் வேலர் காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் தற்சமயம் ரூ.87.90 லட்சத்தில் இருந்து ஆரம்பிக்கின்றன.

மெர்சிடிஸ்-மேபக் எஸ்560 (Mercedes-Maybach S560): பிரபலமான மெர்சிடிஸ்-பென்ஸ் எஸ்-கிளாஸ் காரின் அடிப்படையில் உருவாக்கப்படும் மேபக் எஸ்560 ஆனது மிகவும் ஆற்றல்மிக்க கார் ஆகும். இதற்கேற்ப, மேபக் எஸ்560 காரில் பவர்ஃபுல்லான 4 லிட்டர் ட்வின்-டர்போசார்ஜ்டு வி8 என்ஜின் 48 வோல்ட் மைல்ட் ஹைப்ரீட் மோட்டார் உடன் வழங்கப்படுகிறது.

jasprit bumrah luxury car collections

இந்த ஹைப்ரீட் சிஸ்டத்தின் மூலமாக அதிகப்பட்சமாக 496 பிஎச்பி மற்றும் 700 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை பெறலாம். 0-இல் இருந்து 100kmph வேகத்தை வெறும் 4.8 வினாடிகளில் எட்டிவிடக்கூடிய இந்த காரின் டாப்-ஸ்பீடு 250kmph ஆகும். மெர்சிடிஸ்-மேபக் எஸ்560 காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.2.72 கோடியில் இருந்து ஆரம்பிக்கின்றன.

நிஸான் ஜிடி-ஆர் (Nissan GT-R): உலகளவில் பிரபலமான நிஸான் கார்களுள் ஒன்று ஜிடி-ஆர் ஆகும். ஆனால், இந்த ஃபேமஸான கார் இந்தியாவில் தற்சமயம் விற்பனையில் இல்லை. ஜிடி-ஆரில் 3.8 லிட்டர் வி6 ட்வின்-டர்போ என்ஜின் பொருத்தப்படுகிறது. இந்த டர்போ என்ஜின் அதிகப்பட்சமாக 565 பிஎச்பி மற்றும் 637 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது.

jasprit bumrah luxury car collections

இந்த காரின் மற்றொரு சிறப்பம்சம் என்னவென்றால், இது ஆல்-வீல்-டிரைவ் சிஸ்டத்தை கொண்ட கார் ஆகும். அதாவது, இந்த காரில் என்ஜினின் ஆற்றல் ஆனது காரின் 4 சக்கரங்களுக்கும் ஒரே நேரத்தில் செல்லும். என்ஜின் உடன் இந்த காரில் 6-ஸ்பீடு ட்யூயல்-க்ளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது. ஜப்பானில் நிஸான் ஜிடிஆர் காரின் விலை ரூ.2.45 கோடி என்கிற அளவில் உள்ளது.

டொயோட்டா இன்னோவா (Toyota Innova): ஜஸ்பிரித் பும்ராவை போன்று வலிமையான மற்றும் வேகமான டொயோட்டா கார் இன்னோவா ஆகும். இந்த காருக்கு இந்தியாவில் அறிமுகமே தேவையில்லை என நினைக்கிறேன். அந்த அளவிற்கு இந்தியர்கள் மத்தியில் இன்னோவா கார்கள் பிரபலமாக உள்ளன. வெறும் ரூ.20 லட்சத்தில் இருந்து விலைகள் இருப்பது இந்த காரின் பிரபலத்திற்கு முக்கிய காரணம் ஆகும்.

இத்தகைய கார் பும்ராவிடம் இருப்பதில் ஆச்சிரியம் ஒன்றும் இல்லை. இந்தியாவில் தற்போதைக்கு டீசல் என்ஜின் ஆப்ஷனில் மட்டுமே டொயோட்டா இன்னோவா கார் கிடைக்கிறது. ஆனால், சில வருடங்களுக்கு முன்பு வரையில் பெட்ரோல் என்ஜின் ஆப்ஷனிலும் இன்னோவா கிடைத்துவந்தது. 7-சீட்டர் அல்லது 8-சீட்டர் ஆப்ஷனில் இந்த டொயோட்டா எம்பிவி காரை வாங்கலாம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இத்தனை விலையுயர்ந்த கார்களை வைத்திருக்கும் ஜஸ்பிரீத் பும்ரா கடந்த வந்த பாதை நம் எல்லாருக்குமே தெரியும். ஏற்கனவே கூறியதுபோல், இவை அனைத்தும் அவரது திறமைக்கு கிடைத்த வெகுமதிகளே ஆகும். மேலும், ஸ்போர்ட்ஸ் கார்கள் மீதான பும்ராவின் ஆர்வத்தையும் இந்த கார் கலெக்‌ஷன்ஸ் வெளிக்காட்டுவதாக உள்ளன. பும்ராவின் திறமைக்கு இன்னும் மேலும் பல கார்களை வாங்குவார் என்பது உறுதி.

More from DriveSpark

Article Published On: Monday, June 10, 2024, 18:54 [IST]
English summary
Cricketer jasprit bumrah luxury car collections check all details here
மேலும்... #off beat #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X