இந்த விஷயத்திலும் செம்ம பொருத்தம்.. இளம் ஜோடி கே.எல் ராகுல் & அதியாவின் மயக்க வைக்கும் லக்சரி கார் கலெக்‌ஷன்ஸ்

இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரான கே.எல் ராகுல் மற்றும் பாலிவுட் நடிகை அதியா ஷெட்டியின் திருமணம் கடந்த ஜனவரி 23ஆம் தேதி மஹாராஷ்டிரா மாநிலம் கந்தாலாவில் நடைபெற்றது. கே.எல் ராகுலை பற்றி சொல்ல வேண்டியது இருக்காது என நினைக்கிறேன். ஏனெனில் கிரிக்கெட் பார்க்காதவர்களுக்கு கூட இவரது முகம் பரீட்சையமானதாக இருக்கும்.

அதியா ஷெட்டியை பற்றி சொல்ல வேண்டுமென்றால், இவர் பிரபல பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டியின் மகள் ஆவார். கே.எல் ராகுலும், அதியா ஷெட்டியும் பல ஆண்டுகளாக காதலித்து வந்தனர். ஆரம்ப காலக்கட்டத்தில் இருவரும் ஜோடியாக வெளிநாடுகளுக்கு கூட சுற்றுலா சென்று வந்துள்ளனர். இவர்களது காதல் விஷயம் சினிமா மற்றும் கிரிக்கெட் வட்டாரங்களில் கிசுகிசுப்பாக இருந்துவந்த நிலையில், கடந்த ஆண்டில் இருவரும் தங்களது காதலை வெளிப்படையாக பொது உலகிற்கு அறிவித்தனர்.

இளம் ஜோடி கே.எல் ராகுல் & அதியாவின் லக்சரி கார் கலெக்‌ஷன்ஸ்!

அதனை தொடர்ந்து தற்போது இருவீட்டாரும் சம்மந்திக்க இவர்களது திருமணம் நடந்து முடிந்துள்ளது. இருவரும் அவர்களது துறைகளில் விஐபி-கள் என்றாலும் திருமணத்திற்கு மிகவும் முக்கியமானவர்கள் மட்டுமே அழைக்கப்பட்டதாக அங்கிருந்துவரும் செய்திகள் தெரிவிக்கின்றன. பொதுவாகவே விஐபி-கள் ஒன்றிற்கு, இரண்டு சொகுசு கார்களை வைத்திருப்பர். அந்த வகையில், கே.எல் ராகுல் மற்றும் அதியா ஷெட்டியிடம் உள்ள சொகுசு கார்களை பற்றி இனி இந்த செய்தியில் பார்க்கலாம்.

கே.எல் ராகுல்

பிஎம்டபிள்யூ எக்ஸ்7

கே.எல் ராகுல் வாங்கிய முதல் லக்சரி கார். பிஎம்டபிள்யூ நிறுவனம் இந்தியாவில் விற்பனை செய்யும் விலையுயர்ந்த காரான எக்ஸ்7 நம் நாட்டில் 3.0 லிட்டர் டீசல் மற்றும் 3.0 லிட்டர் எம் ஸ்போர்ட் பெட்ரோல் என மொத்தம் 2 விதமான என்ஜின் தேர்வுகளில் விற்பனை செய்யப்படுகிறது. எக்ஸ்7 காரை 7 இருக்கை வெர்சனிலும் பெறலாம். ஆனால் இந்த வெர்சன் டீசல் என்ஜின் உடன் மட்டுமே கிடைக்கிறது. இந்த பிஎம்டபிள்யூ லக்சரி காரின் விலை ரூ.1.18 கோடி என்ற விலையில் தற்சமயம் உள்ளது.

லம்போர்கினி ஹூராகென் ஸ்பைடர்

கே.எல் ராகுலிடம் உள்ள மிக விலையுயர்ந்த கார் லம்போர்கினி ஹூராகென் ஸ்பைடர் ஆகும். உலகளவில் மிகவும் பிரபலமான சூப்பர் கார்களுள் ஒன்றான ஹூராகென் ஸ்பைடரில் 5.2 லிட்டர் 10-சிலிண்டர் என்ஜின் பொருத்தப்படுகிறது. இந்த என்ஜின் உடன் இணைக்கப்படும் 7-ஸ்பீடு டிசிடி கியர்பாக்ஸ் ஆனது என்ஜினின் இயக்க ஆற்றலை காரின் அனைத்து சக்கரங்களுக்கும் வழங்குகிறது. அதிகப்பட்சமாக மணிக்கு 325கிமீ வேகத்தில் செல்லக்கூடிய இந்த லம்போர்கினி காரின் விலை ஆனது ரூ.4 கோடி என்ற அளவில் உள்ளது.

மெர்சிடிஸ்-பென்ஸ் ஏஎம்ஜி சி43

தனது பிறந்த நாள் ஒன்றின்போது கே.எல் ராகுல் வாங்கிய லக்சரி கார் மெர்சிடிஸ்-பென்ஸ் ஏஎம்ஜி சி43 ஆகும். மெர்சிடிஸின் இந்த செயல்திறன்மிக்க காரில் 3.0 லிட்டர் வி6 என்ஜின் பொருத்தப்படுகிறது. 0-வில் இருந்து 96kmph வேகத்தை குறைந்தப்பட்சமாக 4.7 வினாடிகளில் எட்டிவிடக்கூடிய ஏஎம்ஜி சி43 காரின் டாப்-ஸ்பீடு ஆனது 250kmph ஆகும்.

இளம் ஜோடி கே.எல் ராகுல் & அதியாவின் லக்சரி கார் கலெக்‌ஷன்ஸ்!

அதியா ஷெட்டி

ஆடி க்யூ7

நடிகர் சுனில் ஷெட்டியின் மகள் அதியா ஷெட்டி சமீபத்தில்தான் புத்தம் புதிய ஆடி க்யூ7 லக்சரி எஸ்யூவி காரை டெலிவிரி பெற்று இருந்தார். 3.0 லிட்டர் 6-சிலிண்டர் மைல்ட் ஹைப்ரீட் டி.எஃப்.எஸ்.ஐ என்ஜின் உடன் இந்த காரில் இயக்க ஆற்றல் ஆனது காரின் நான்கு சக்கரங்களுக்கும் ஒரே நேரத்தில் ஆடியின் குவாட்ரோ அனைத்து-சக்கர-ட்ரைவ் சிஸ்டத்தின் வழியாக வழங்கப்படுகிறது. 0-வில் இருந்து 96kmph வேகத்தை குறைந்தப்பட்சமாக 5.9 வினாடிகளில் எட்டிவிடக்கூடிய க்யூ7 காரின் டாப்-ஸ்பீடு ஆனது 250kmph ஆகும்.

ஜாகுவார் எக்ஸ்.ஜே.எல்

அதியா ஷெட்டி ஜாகுவார் எக்ஸ்.ஜே.எல் காரை பயன்படுத்தும் வீடியோக்கள் இணையத்தில் உள்ளன. இந்தியாவில் இந்த ஜாகுவார் கார் மொத்தம் 6 விதமான வேரியண்ட்களில் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உடன் கிடைக்கிறது. மொத்தம் 7 விதமான நிறத்தேர்வுகளில் விற்பனை செய்யப்படும் ஜாகுவார் எக்ஸ்.ஜே.எல் காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.99.56 லட்சத்தில் இருந்து ரூ.1.97 கோடி வரையில் உள்ளன. இந்த ஜாகுவார் காருக்கு பிஎம்டபிள்யூ 7 சீரிஸ், ஆடி ஏ8 எல் மற்றும் மெர்சிடிஸ் எஸ்-கிளாஸ் உள்ளிட்ட கார்கள் போட்டியாக உள்ளன.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Cricketer kl rahul actress athiya shetty luxury car collections
Story first published: Tuesday, January 24, 2023, 16:33 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X