இவரும் வாங்கிட்டாரா... இந்த சொகுசு எலெக்ட்ரிக் காரை எல்லாரும் வரிசையா வாங்கிட்டு வராங்க!
கிரிக்கெட் வீரர் கே.எல். ராகுல் (Cricketer KL Rahul), புதிய எம்ஜி எம்9 (MG M9) எலெக்ட்ரிக் கார் ஒன்றை சொந்தமாக வாங்கியுள்ளார். அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் உச்சபட்ச வசதியுடன் கூடிய "தி பிரசிடென்ஷியல் லிமோசின்" (The Presidential Limousine) என்றழைக்கப்படும் எம்ஜி எம்9, கேஎல் ராகுலின் நேர்த்தியான மற்றும் அமைதியான ஆளுமைக்கு ஏற்றதாக அமைந்துள்ளது.
இது அவரது எளிமையான, அதேசமயம் அதிநவீன ரசனையைப் பிரதிபலிக்கிறது. புதுமையான மற்றும் ஆடம்பரமான அனுபவத்தை வரையறுக்கும் நோக்கில் உருவாக்கப்பட்ட எம்ஜி எம்9, அதிநவீன தொழில்நுட்பத்தையும், வசதியையும் விரும்புபவர்களுக்கானது. சொகுசான சவுகரியத்தை வழங்கக்கூடிய இருக்கைகள், படகு டிசைனிலான சன்ரூஃப் மற்றும் பின் பகுதியில் நீர்வீழ்ச்சி டிசைனில் எல்இடி சிக்னேச்சர் விளக்குகள் போன்ற சிறப்பம்சங்களுடன் எம்9 கார் பயண அனுபவத்தை மேம்படுத்துகிறது.

எம்9 எலெக்ட்ரிக் காரில், 16 விதமாக சரிசெய்யக்கூடிய, 8 மசாஜ் வசதிகள், ஹீட்டிங் மற்றும் வெண்டிலேஷன் வசதிகள் கொண்ட இருக்கைகள் வழங்கப்படுகின்றன. இது பயணிகளுக்கு சிறந்த சௌகரியத்தை வழங்கும் நிலையில், படகு டிசைனிலான இரட்டை சன்ரூஃப் அமைப்பு, காரின் உள்ளே இயற்கையான ஒளியை அனுமதிக்கிறது.
இவற்றுடன் எம்9 காரின் கேபினுக்குள் வழங்கப்படும் 64 வண்ண விளக்குகள் பயணத்திற்கு ஏற்ற மனநிலையை உருவாக்க உதவுகின்றன. சப்வூஃபர் மற்றும் ஆம்ப்ளிஃபையர் உள்ளிட்ட 13 ஸ்பீக்கர் ஒலி அமைப்புடன், எம்ஜி எம்9 ஒரு எதிர்காலத்திற்கான எலெக்ட்ரிக் சொகுசு காராகத் திகழ்கிறது. ஆர்ம் ரெஸ்ட் மூலம் கட்டுப்படுத்தக்கூடிய அம்சங்களுடன், எம்ஜி எம்9 கார் நேர்த்தியான வடிவமைப்பையும், ஆடம்பரத்தையும் கொண்டுள்ளது.

காக்னாக் பிரவுன் நிற லெதர் & வியர்வை-தடுப்பு இருக்கைகள் முதல் 1720 லிட்டர் வரையில் அதிகரித்துக் கொள்ளக்கூடிய பின்பக்க பூட் ஸ்பேஸ் (Boot Space) பகுதி மற்றும் முன்பக்கத்தில் 55 லிட்டர் ஃபிரங்க் (Frunk) இடவசதி வரை, எம்9 காரில் ஒவ்வொரு நுணுக்கமான வேலைப்பாடுகளும் மறக்க முடியாத அனுபவத்தை வழங்குகின்றன.
பியல் லஸ்ட்ரே ஒயிட், மெட்டல் பிளாக் மற்றும் கான்கிரீட் கிரே ஆகிய மூன்று வண்ணங்களில் கிடைக்கும் எம்ஜி எம்9, அதன் பிரம்மாண்டமான வெளிப்புற வடிவமைப்புடன் அனைவரது கவனத்தையும் ஈர்க்கிறது. காரின் முன்பக்கத்தில் பெரிய ட்ரெபெசாய்டல் மெஷ் கிரில், எம்9 காரின் நவீன தோற்றத்திற்கு ஏற்றதாக உள்ளது.

மேலும், பிளவுபட்ட எல்இடி ஹெட்லைட்கள் மற்றும் இணைக்கப்பட்ட டிஆர்எல்கள் உள்ளிட்டவற்றுடன் கூர்மையான மற்றும் அதிநவீன முகப்புப் பகுதியை எம்ஜி எம்9 கொண்டுள்ளது. பின்புறத்தில், நீர்வீழ்ச்சி டிசைனில் ஒருங்கிணைக்கப்பட்ட எல்இடி டெயில்லைட் வடிவமைப்பு ஒரு தனித்துவமான மற்றும் நேர்த்தியான அடையாளத்தை காருக்கு அளிக்கிறது. இந்த எம்ஜி கார் ஸ்டைலான 19-அங்குல ContiSealTM (சுய-சீலிங்) டயர்களுடன் வருகிறது.
கொண்ட காரின் பின்பக்கத்தை காட்டும் பக்கவாட்டு கண்ணாடிகள் (ORVMs), ஹீட்டிங் வசதி உடன் பல்வேறு வானிலை நிலைகளிலும் தெளிவான பார்வையை உறுதி செய்கின்றன. பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், எம்9 அதிக வலிமை கொண்ட எஃகு கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இதில் 7 ஏர்பேக்குகள் வழங்கப்படுகின்றன.

யூரோ என்சிஏபி (EURO NCAP) மற்றும் ஆசியன் (Asian) என்சிஏபி-இல் 5-நட்சத்திர மதிப்பீடுகளைப் பெற்றுள்ள எம்9, பாதுகாப்பு மற்றும் பிரம்மாண்டமான வடிவமைப்பை ஒருங்கிணைக்கக்கூடியதாக உள்ளது. ஏர்பேக் மட்டுமின்றி, லெவல் 2 ADAS மற்றும் ஓட்டுநர் கண்காணிப்பு அமைப்பும் கூடுதல் பாதுகாப்பு அம்சங்களாக இதில் வழங்கப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: கிரிக்கெட் வீரர் கேஎல் ராகுல் வாங்கியிருப்பது எம்ஜி எம்9 சொகுசு காருக்கு கூடுதல் விளம்பரமாக அமைந்துள்ளது. அளவில் பிரம்மாண்டமானதாக விளங்கும் இந்த எம்ஜி எலெக்ட்ரிக் காரை அனைத்து நிலப்பரப்புகளிலும் சீரான மற்றும் துல்லியமான கையாளுதல் மூலம் பயன்படுத்தலாம். எம்ஜி எம்9 காரை 13 முக்கிய நகரங்களில் உள்ள 14 எம்ஜி செலக்ட் (SELECT) டீலர்ஷிப் ஷோரூம்களில் பார்வையிடலாம்.


Click it and Unblock the Notifications









