எவ்வளவு பெரிய மனுஷன்... சிம்பிளா மஹிந்திரா காரை வாங்கிட்டு போறாரு!! இந்திய புராடெக்ட்டுக்கு அப்படியொரு மதிப்பு

மேத்யூ ஹைடன் (Mathew Hayden), முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர். இந்திய நாட்டின் மீது தனி பிரியம் கொண்டவரான மேத்யூ ஹைடன் புதியதாக மஹிந்திரா ஸ்கார்பியோ-என் கார் ஒன்றை வாங்கியுள்ளார். இந்த முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட்டர் வாங்கியுள்ள ஸ்கார்பியோ காரை பற்றிய கூடுதல் விபரங்களை இனி பார்க்கலாம்.

இந்தியாவின் பிரபலமான கார் நிறுவனங்களுள் ஒன்றான மஹிந்திராவின் எஸ்யூவி கார்கள் சமீப காலமாக மிகுந்த வரவேற்பை பெற்று வருகின்றன. அவ்வாறு மஹிந்திரா நிறுவனத்தில் இருந்து விற்பனை செய்யப்படும் பிரபலமான காராக தற்சமயம் இருப்பது ஸ்கார்பியோ ஆகும். கடந்த அக்டோபர் மாதத்தில் சுமார் 13 ஆயிரத்திற்கும் அதிகமான ஸ்கார்பியோ கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

mathew hayden buys mahindra scorpio-n

இந்தியாவில் விற்பனை செய்யப்படும் மஹிந்திரா கார்கள் வெளிநாடுகளிலும் விற்பனை செய்யப்படுகின்றன. பல வெளிநாட்டு விஐபி-களும் அவர்களது நாட்டில் மஹிந்திரா கார்களை வாங்கியுள்ளனர். அந்த வரிசையில், ஆஸ்திரேலிய நாட்டின் முன்னாள் அதிரடி கிரிக்கெட் வீரர் மேத்யூ ஹைடன் புதியதாக மஹிந்திரா ஸ்கார்பியோ-என் காரை வாங்கி உள்ளார்.

ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேனில் உள்ள ஒரு மஹிந்திரா டீலர்ஷிப் ஷோரூம் ஒன்றில் ஸ்கார்பியோ-என் காரை மேத்யூ ஹைடன் டெலிவிரி எடுத்துள்ளார். தென்னாப்பிரிக்கா, அமெரிக்காவை போல், ஆஸ்திரேலியாவிலும் பிராண்ட் அம்பாசிடாரை மஹிந்திரா நிறுவனம் கொண்டுள்ளது. ஆஸ்திரேலிய நாட்டின் அம்பாசிடர் தான் அந்த நாட்டின் முன்னாள் சர்வதேச கிரிக்கெட் வீரர் மேத்யூ ஹைடன் ஆவார்.

mathew hayden buys mahindra scorpio-n

ஆஸ்திரேலிய நாட்டின் பிராண்ட் அம்பாசிடராக நீண்ட காலமாக மேத்யூ ஹைடன் இருந்து வருகிறார். இதன் காரணமாகவே, மேத்யூ ஹைடன் ஸ்கார்பியோ-என் காரை டெலிவிரி பெற்று இருப்பதை மஹிந்திரா ஆஸ்திரேலியா நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ யுடியூப் பக்கத்தில் வீடியோ உடன் உறுதிப்படுத்தி உள்ளது.

இந்த வீடியோவில், காரை டெலிவிரி எடுத்த போது மேத்யூ ஹைடன் எந்த அளவிற்கு மகிழ்ச்சியாக உள்ளார் என்பதை காணலாம். இந்த ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் வெள்ளை நிறத்தில் ஸ்கார்பியோ-என் காரை டெலிவிரி பெற்றுள்ளார். இந்த வெள்ளை நிறத்தை எவரெஸ்ட் வெள்ளை என மஹிந்திரா அழைக்கிறது. மெட்டாலிக் ஃபினிஷிங்கில் காரின் இந்த வெள்ளை நிற பெயிண்ட் ஜொலிக்கிறது.

mathew hayden buys mahindra scorpio-n

இதன் காரணமாக, மேத்யூ ஹைடனின் ஸ்கார்பியோ-என் கார் விலையுயர்ந்த கார் போல் காட்சித் தருவதை மறுக்க முடியாது. இதன்பின் பல்வேறு அட்வென்ச்சரான பயணங்களுக்கு இந்த காரில் செல்ல திட்டமிட்டு இருப்பதாக மேத்யூ ஹைடன் கூறுவதை மஹிந்திரா வெளியிட்டுள்ள வீடியோவில் கேட்கலாம். மேலும், ஆஸ்திரேலியாவின் சிம்சன் பாலைவனத்தில் அதிவேக எஸ்யூவி கார் என்ற பெயரை ஸ்கார்பியோ-என் பெற்றுள்ளதையும் மேத்யூ ஹைடன் நினைவுப்படுத்தி உள்ளார்.

இந்தியாவில் கடந்த 2022ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட ஸ்கார்பியோ-என் கார் பெட்ரோல் மற்றும் டீசல் என இரு விதமான என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. அத்துடன், 4x4 டிரைவ் சிஸ்டத்துடனும் இந்த கார் கிடைக்கிறது. அதேநேரம், 4x2 டிரைவ் சிஸ்டத்திலும் இந்த மஹிந்திரா எஸ்யூவி காரை பெறலாம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஆஸ்திரேலியாவில் மஹிந்திராவின் முகமாக மேத்யூ ஹைடன் விளங்குகிறார். மஹிந்திராவின் நிறைய நிகழ்ச்சிகளில் அங்கு இவர் கலந்துக் கொண்டுள்ளார். அத்தகைய மஹிந்திரா ஆஸ்திரேலியா நிறுவனத்தின் முக்கிய விளம்பரமாக விளங்குபவர் புதியதாக ஸ்கார்பியோ-என் காரை டெலிவிரி எடுத்திருப்பது, மஹிந்திராவை மேலும் விளம்பரப்படுத்தும்.

More from DriveSpark

Article Published On: Wednesday, November 15, 2023, 19:19 [IST]
English summary
Cricketer matthew hayden buys mahindra scorpio n check all details here
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X